E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
500 டெலிபோன் உரையாடல்களை ஆய்வு செய்கிறது சி.பி.ஐ.,
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 மே
2013
00:00

புதுடில்லி:ரயில்வே துறையில் நடந்த ஊழல் குறித்த விசாரணையில், 500 முக்கிய டெலிபோன் உரையாடல்களை, சி.பி.ஐ., ஆய்வு செய்து வருகிறது. ஹவாலா மூலமாகவே, லஞ்ச பணம், கை மாறியதாகவும், சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய பதவியை பெற்றுத் தருவதற்காக, ரயில்வே வாரிய உறுப்பினரான, மகேஷ் குமாரிடமிருந்து, ரயில்வே அமைச்சராக இருந்த, பவன் குமார் பன்சாலின் உறவினர், விஜய் சிங்லா, லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே, 10 கோடி ரூபாய், லஞ்ச பேரம் பேசப்பட்டதாகவும், முதல் கட்டமாக, 90 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும், தகவல் வெளியானது.

இதுகுறித்து, விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், மகேஷ் குமார், விஜய் சிங்லா உட்பட, சிலரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை குறித்து, சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த இரண்டு மாதங்களாகவே, இந்த வழக்கு குறித்து, ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. மகேஷ் குமார், விஜய் சிங்லா மற்றும் இந்த விவகாரத்தில், இடைத் தரகர்களாக செயல்பட்ட, மஞ்சு நாத், சந்தீப் கோயல் உள்ளிட்டோரின், டெலிபோன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டன.

மொத்தமாக, 1,000க்கும் மேற்பட்ட உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டன. இதில், 500 உரையாடல்களில், இந்த வழக்கிற்கு தேவையான, முக்கிய விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. அவை, தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

மகேஷ் குமார் கைது செய்யப்பட்ட அன்று, இவர்கள், அடிக்கடி போனில் பேசியுள்ளதும், தெரியவந்துள்ளது. லஞ்சம் பணம், பெங்களூரில் இருந்து, சண்டிகாருக்கு கை மாறியுள்ளது. ஹவாலா வழியாகவே, இந்த பரிமாற்றம் நடந்துள்ளது.மகேஷ் குமாருக்கும், விஜய் சிங்லாவுக்கும் இடையேயான அறிமுகம், பவன் குமார் பன்சால், மூலமாகவே நடந்துள்ளது. விஜய் சிங்லா, அடிக்கடி, ரயில்வே அமைச்சர் அலுவலகத்தில் இருந்ததும், விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
11-மே-201309:08:11 IST Report Abuse
K.Balasubramanian "தெய்வம் நின்று கொல்லும், அரசன் அன்றே கொல்வான் " என்பது பழமொழி . நீதி ஒரு நாள் அனைவருக்கும் கிட்டட்டும் .
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-மே-201308:32:03 IST Report Abuse
Srinivasan Kannaiya 500 பேர் ஊழலில் ஈடுபட்டிருப்பார்கள்...????? பெரிய லஞ்ச குழுதான்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
11-மே-201307:37:30 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி நீரா ராதியா உரையாடல்களுக்கு எடுத்த நடவடிக்கைகளின் நிலை என்ன?
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
11-மே-201304:59:03 IST Report Abuse
villupuram jeevithan கோர்ட் தலையீட்டால் இது வெளி வருகிறது. ஆனால் தண்டனை கிடைக்கச் செய்யுமா இந்த சிபிஐ?
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
tamilan1 - Karur,இந்தியா
11-மே-201301:45:36 IST Report Abuse
tamilan1 எந்த ஆதாரமாக இருந்தாலும் எந்த அரசியல் வாதியும் தண்டனை பெறப்போவதில்ல. நாடு விளங்கிடும்
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
11-மே-201301:31:38 IST Report Abuse
Vettri அப்படியே இந்த நிரா ராடிய டேப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள உரையாடல்கள் படி கொஞ்சம் சீக்கிரம் நடவடிக்கை எடுங்க. அதே போன்று திருட்டு கேபிள் வழக்கிலேயும் நடவடிக்கை எடுங்கப்பா.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.