E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அ.தி.மு.க., அரசுக்கு பாராட்டு விழா நடத்துவோம்!' சொல்கிறார் ஸ்டாலின்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 மே
2013
00:04

தர்மபுரி: ""ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து முடித்தால், அ.தி.மு.க., அரசுக்கு பாராட்டு விழா நடத்தப்படும்,'' என, செயல் வீரர்கள் கூட்டத்தில், ஸ்டாலின் பேசினார்.

தர்மபுரி லோக்சபா தொகுதி, தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், தர்மபுரி அடுத்த பெரியாம்பட்டியில், நேற்று நடந்தது. கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:கடந்த சட்டசபை தேர்தலில், தோல்வி அடைந்ததால், தி.மு.க.,வை அழித்து விட முடியாது. மக்களின் முக்கிய தேவையான, குடிநீருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி, தி.மு.க., எங்கள் ஆட்சியில், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு, அத்திட்டம், தி.மு.க., ஆட்சி யிலேயே நிறைவேற்றப்பட்டது.

கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், மீஞ்சூரில் கடல் நீரை, குடிநீர் ஆக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது; அத்திட்டத்தை, அவர்கள் முடிக்கவில்லை. அடுத்து ஆட்சிக்கு வந்த, தி.மு.க., இத்திட்டப் பணிகளை, துரிதமாக செய்து வந்தது. தற்போது ஆட்சிக்கு வந்த, அ.தி.மு.க., அரசு, இத்திட்டத்தை துவங்கியுள்ளது.

கடந்த, தி.மு.க., ஆட்சியில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்காக, 2,000 கோடி ரூபாய் மதிப்பில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தி.மு.க., ஆட்சியில், 90 சதவீத பணிகள் முடிந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அ.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்து, இரண்டு ஆண்டுகள் முடிவடையவுள்ளது.இவர்கள், இத்திட்டப் பணிகளை, இதுவரை முடிக்கவில்லை. இத்திட்டத்தை என்னிடம் ஒப்படையுங்கள்; இரு மாதங்களில், திட்டத்தை நிறைவு செய்து, இரு மாவட்ட மக்களுக்கும், தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்.

இல்லை என்றால், நீங்கள் விரைவாக, இத்திட்டத்தை நிறைவு செய்யுங்கள். இரு மாவட்ட மக்களையும் அழைத்து, நாங்கள், உங்களுக்கு (அ.தி.மு.க., அரசு) பாராட்டு விழா நடத்துகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (64)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kovandakurichy Govindaraj - jubail,சவுதி அரேபியா
15-மே-201300:58:24 IST Report Abuse
kovandakurichy Govindaraj தி.மு.க வில் யாருக்கும், எதுவும் வேலை இல்லை என்றால் பாராட்டு விழா நடத்துவது வாடிக்கை தானே? ஒன்று பாராட்டு விழா நடத்துவார்கள் அல்லது விருது வழங்குவார்கள் .வெளியாள் யாரும் நடத்தவில்லை என்றால் இவர்களே நடத்திகொள்வர்கள், இதற்கென்றே கி.வீரமணி,சு,ப.வீரபாண்டியன், வைரமுத்து ,ராம நாராயணன் போன்றோர் இருக்கிறார்கள். அதை கலைஞர், சன் டிவிகளில் ஒளிப்பரபிக்கொள்வர்கள்
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-மே-201317:21:19 IST Report Abuse
Nallavan Nallavan அது அவசியமானது என்றால் இந்த அரசே நிறைவேற்றும் ..... அந்த ஆணி இப்போ வேண்டாம் ..... ஒரு எம்.எல்.ஏ. வா உங்க கொளத்தூர் தொகுதி மக்களுக்கு உருப்படியா ஏதாவது பண்ணுங்க ...... அந்த ஆணி போதும் .....
Rate this:
110 members
1 members
19 members
Share this comment
Raja - Chennai,இந்தியா
12-மே-201301:54:06 IST Report Abuse
Rajagive me a reason why it should not be completed now? ஹோகேனக்கல் கூட்டுகுடி நீர் திட்டம் எதற்காக அறிமுக படுத்தினார்கள் தெரியுமா? ...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Prasanna - Chennai  ( Posted via: Dinamalar Android App )
11-மே-201316:28:55 IST Report Abuse
Prasanna Katchacha theevu was given to Sri Lanka during Indira Gandhi's regime.
Rate this:
1 members
0 members
105 members
Share this comment
Cancel
vandu murugan - chennai,இந்தியா
11-மே-201316:09:25 IST Report Abuse
vandu murugan அண்ணே அண்ணே ஸ்டாலின் அண்ணே இப்போ நீங்க எந்த கட்சினே.. இப்போ நீங்க என்ன பேசரீங்கனு தெரிஞ்சிதான் பேசறிங்களா அண்ணே... இத சொன்னா வெட்க கேடு, சொல்லாட்டி மானக்கேடு. இப்போ என்ன பண்ண போறீங்க.
Rate this:
66 members
0 members
85 members
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
11-மே-201315:56:45 IST Report Abuse
amukkusaamy இப்படி பேசுனதுக்கு அப்பன்கிட்ட நல்ல டின்னு வாங்கி கட்டிக்கப்போறாரு....
Rate this:
6 members
46 members
10 members
Share this comment
Cancel
maheswarandarmalingam - KEELAIYUR,இந்தியா
11-மே-201313:34:57 IST Report Abuse
maheswarandarmalingam சும்மா பொய் சொல்லாதீங்க. . நீங்க ADMK வில் சேரப்போறீங்களா SOLLAVEY இல்லை. alagiri is so happy. kanimozhi is very very happy.
Rate this:
6 members
2 members
10 members
Share this comment
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-மே-201312:57:27 IST Report Abuse
தமிழவேல் அதை திறந்துவிட்டு அம்மாவின் பெயரை கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு வைத்துக்கொள்ளலாம் என்று கூறிவிடுங்கள் சார்... அதை உடனே நடத்தி விடுவார்...
Rate this:
2 members
0 members
68 members
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
11-மே-201312:35:32 IST Report Abuse
ANBE VAA J.P. உங்க காமடிய உங்கள் கட்சியினரிடம் மட்டும் வைத்து கொள்ளுங்கள், மக்களிடம் வேண்டாம்.
Rate this:
38 members
0 members
11 members
Share this comment
Cancel
Wilsonsam Sp - bobigny,பிரான்ஸ்
11-மே-201312:14:44 IST Report Abuse
Wilsonsam Sp இவங்க குடும்பத்துல இன்னும் அந்த பாராட்டு விழாவை விடலையா
Rate this:
41 members
1 members
12 members
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
11-மே-201311:01:25 IST Report Abuse
mirudan பாராட்டு கூட்டங்கள் இல்லாமல் அதற்கு வழி தேடுகிறார்கள் தந்தையும் மகனும் ?
Rate this:
51 members
1 members
15 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.