10பேருக்குமேல் குழுவாக சென்றால் அரசுபஸ்களில் 10 சதவீதம் தள்ளுபடி
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை:""மலைப் பகுதிகளில், 250 மினி பஸ்கள் இயக்கப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பு:சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஏழு இடங்களிலும், தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தில், 18 இடங்களிலும் என, 25 போக்குவரத்துக் கழக பணி மனைகள், 22.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.மலைப் பகுதி மக்கள், பிற பகுதிகளுக்கு விரைவாகவும், எளிதிலும் சென்று வர, 35 கோடி ரூபாய் செலவில், 250 மினி பஸ்கள் அறிமுகம் செய்யப்படும்.

டிக்கெட்டுக்கு தள்ளுபடி:அரசு பஸ்களில் செல்லும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், குறைந்தபட்சம், 10 அல்லது அதற்கு மேற்பட்ட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, பயணத் தொகையில், 10 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும். தீபாவளி, பொங்கல் பண்டிகைக் காலங்களில் இச்சலுகை அளிக்கப்படாது.மாநகர் மற்றும் நகர அரசு பஸ்களில் பயணம் செய்வோருக்கு, மூன்றில் ஒரு பங்கு சலுகைக் கட்டணம் வழங்கப்படுகிறது.

தரம் உயர்வு:இச்சலுகை, புறநகர் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் விரிவு படுத்தப்படும்.சோழிங்கநல்லூர், அம்பத்தூர், வாணியம்பாடி, மயிலாடுதுறை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள பகுதி அலுவலகங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களாக, தரம் உயர்த்தப்படும். குன்றத்தூர், சேலம், ஈரோடு, கோவை நகரங்களில், கூடுதலாக வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும்.

மேலும், கும்மிடிப்பூண்டி, பண்ருட்டி, செஞ்சி, ஆம்பூர், இலுப்பூர், திருத்துறைப்பூண்டி, லால்குடி, அரவக்குறிச்சி, வால் பாறை ஆகிய இடங்களில், பகுதி அலுவலகங்கள் துவங்கப்படும். மாநிலத்தில் உள்ள, 42 ஓட்டுனர் உரிமம் வழங்கும் மையங்களில், 14 மையங்கள், 10 கோடி ரூபாய் செலவில், கணினி மயமாக்கப்படும்.இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.

பண்டிகை நாட்களில் இல்லாதது நஷ்டமே:குழுமப் பயணிகளுக்கு பயணத் தொகையில், 10 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்ற திட்டத்தின் மூலம், குடும்பத்துடன் வெளியூர் செல்லும் பயணிகளும், நண்பர்கள் குழுவாக செல்லும் போது பயன் பெறுவர். இருப்பினும், இந்த சலுகை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், "தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகை காலங்களில், இந்த சலுகை வழங்கப்பட மாட்டாது' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை, படிப்பு நிமித்தமாக சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போர், பண்டிகை நாட்களின் போது தான், குடும்பமாகவும், நண்பர்களுடனும் குழுவாக சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். கடந்த காலங்களில் செய்யப்பட்ட முன்பதிவு விவரங்களே இதற்கு சாட்சி.இந்த சூழ்நிலையில், பண்டிகை காலங்களில் சலுகையை பயன்படுத்த முடியாததால், பயணிகளுக்கு இந்த சலுகையால் பயன் கிட்டாது. மேலும், போக்குவரத்து கழகங்களுக்கும் இந்த சலுகையின் மூலம் பெரியளவில் லாபம் கிடைக்கப் போவதில்லை.

இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:பண்டிகை நாட்களில் இந்த சலுகையை செயல்படுத்தும் போது ஏற்படும் முறைகேட்டை தவிர்க்க, பயணிகளிடம் அடையாள அட்டையை பரிசோதிப்பது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். மாறாக, பண்டிகை காலங்களில் இந்த சலுகையை வழங்காவிட்டால், வழக்கம் போல், ஆம்னி பேருந்துகளை நோக்கி தான் பயணிகள் கூட்டம் செல்லும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (35)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
umarfarook - dindigul,இந்தியா
11-மே-201314:46:34 IST Report Abuse
umarfarook இரண்டு மடங்குக்கு மேல் கட்டணத்தை உயர்த்தி விட்டு அதனால் கூடுதல் வருமானம் வரும் என கனவு கண்டார் ஆனால் உயர்த்தப்பட்ட கட்டணத்தில் பழைய கட்டணத்தை விட குறைவான வசூலே ஆகிறது என்று உணர்ந்த காரணத்தால் இந்த சலுகை தமிழர்கள் எந்த விழாவிற்கு சென்றாலும் குடும்பத்தோடு செல்லும் பழக்கம் உள்ளவர்கள் பேருந்துக்கு கொடுக்கும் கட்டணம் ஆட்டோ கட்டணம் இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு வாடகை வண்டி எடுத்து கொண்டு செல்ல தொடங்கி விட்டனர்
Rate this:
Share this comment
Cancel
dhans - delhi,இந்தியா
11-மே-201314:27:17 IST Report Abuse
dhans ஒரு பக்கம் சலுகை அறிவிசிட்டு, இன்னொரு பக்கம் டிக்கெட் விலை ஏத்த போறாங்க.இதுதான் நடக்க போகுது.
Rate this:
Share this comment
Cancel
Unmai Vilambi - Ambasamudram,இந்தியா
11-மே-201313:29:20 IST Report Abuse
Unmai Vilambi மினி பஸ் என்றதும் ஒரு விஷயம் சொல்ல ஆசைப் படுகின்றேன் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு ஆகியும் தமிழ் நாட்டில் உள்ள எங்கள் ஊருக்கு இன்னமும் மினி பஸ் இயக்கப்படவில்லை. எங்கள் ஊர்க்காடு சாட்டுப்பத்து மக்கள் இன்னும் நடந்தோ அல்லது சைக்கிள் முதலிய வாகனங்களிலோதான் சென்று வருகின்றனர். எங்கள் ஊருக்கு மினி பஸ் விட எத்தனையோ பெரும் பணக்காரர்கள் ஆளும் கட்சி அதிகாரங்கள் இருந்தும் இயக்க யாருக்கும் மனமும் இல்லை ஆசையும் இல்லை. நாங்கள் தமிழ் நாட்டில் தான் இருக்கின்றோமா? என்பது தெரியவில்லை. எங்கள் ஊர் மலைப்பாங்கான ஊரும் இல்லை. யாரும் கோரிக்கையும் வைக்கவில்லை. மேலும் ஒரு விஷயம் ஏன் இவர்கள் ஆசைப்படவில்லை என்றல் வசூல் கண்டிப்பாக கிடைக்காது என்ற பயம்தான். ஒரு சவாலாக எடுத்து கொண்டு எங்கள் ஊருக்கு யாரேனும் மினி பஸ் இயக்க முன் வருவார்களா?
Rate this:
Share this comment
Cancel
umarfarook - dindigul,இந்தியா
11-மே-201313:05:34 IST Report Abuse
umarfarook அதே மாதிரி மொத்தமா டாஸ்மாக் போனா 10 பெர்சண்ட் டிஸ்கௌண்ட் உண்டா ? (சந்தேகம் ?)
Rate this:
Share this comment
Cancel
N.KALIRAJ - VANIYAMBADI,இந்தியா
11-மே-201312:55:43 IST Report Abuse
N.KALIRAJ அரசு வியாபாரமா செய்கிறது இலாபத்தை எதிர்பார்க்க........மக்களுக்கு சலுகை செய்யுங்கள் என்றால்....அதைவிடுத்து ....ஏதாவது கேட்டால் கொள்கைமுடிவு என்பீர்கள்...இன்னும் மூன்று வருடங்களும் இதே நிலைதானா....திருத்தம் எதுவும் இல்லையா..?
Rate this:
Share this comment
Cancel
N.KALIRAJ - VANIYAMBADI,இந்தியா
11-மே-201312:48:18 IST Report Abuse
N.KALIRAJ வேலைக்குச் செல்பவர்கள் இனிமேல் குழுவை சேர்த்துக்கொள்ளவேண்டும்....அதாவது பேருந்துக்கு புரோக்கர் வேலை பார்க்கவேண்டும் கமிசனாக 10% கொடுப்பீர்கள்........அருமையான திட்டம் இதுவும் ஓர் புரட்சிதான்...
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
11-மே-201312:21:27 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar முன் பதிவு செய்யப்படும் அரசு பேருந்து பயண சீட்டு..,மற்றும் மாதந்திர பயண சீட்டு பொதுவாக அனைத்து பேருந்து பயணிகளுக்கும் சிறப்பு தள்ளுபடி 10 % வழங்கினால் மட்டுமே அரசு பேருந்துகளில் பயணிகள் கூடுதல் ஆக்க முடியும். 10 பேர் கொண்ட குழுவிற்கு 10 % முன் பதிவு கட்டணம் சலுகை அளிப்பது பொதுமக்களுக்கு எந்த பயனும் ஏற்படுத்தாது - பூபதியார்
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
11-மே-201311:44:39 IST Report Abuse
Pannadai Pandian பிக் பாக்கெட்டுகள் குறைந்தது 10 பேர் குழுவாகத்தான் ஏறுவார்கள். அவர்களுக்கும் இந்த சலுகை உண்டா ???
Rate this:
Share this comment
Cancel
vandu murugan - chennai,இந்தியா
11-மே-201311:03:33 IST Report Abuse
vandu murugan 110 ஆவது விதியின் கிழ் அனைவருக்கும் முதற்கண் வணக்கம் , இந்த அளவிற்கு நம் மாநிலம் வளர்ந்து உள்ளதற்கு பெருமை படுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
11-மே-201310:55:10 IST Report Abuse
mirudan 110வது விதியின் கீழ் அம்மா செய்யும் காமெடிகள் ரொம்ப ஓவராக இல்லை ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்