retrieve Katchativu case in the Supreme Court | கச்சத்தீவை மீட்க சுப்ரீம் கோர்ட்டில் கருணாநிதி வழக்கு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கச்சத்தீவை மீட்க சுப்ரீம் கோர்ட்டில் கருணாநிதி வழக்கு

Added : மே 11, 2013 | கருத்துகள் (80)
Advertisement
retrieve Katchativu case in the Supreme Court

புதுடில்லி:இலங்கைக்கு வழங்கப்பட்ட, கச்சத்தீவை திரும்பப் பெற, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, தி.மு.க., தலைவர், கருணாநிதி, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இது குறித்து, சுப்ரீம் கோர்ட்டில், கருணாநிதி தாக்கல் செய்துள்ள, "ரிட்' மனுவில் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள கச்சத்தீவு, தமிழக மீனவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது. ராமேஸ்வரத்திலிருந்து, 10 மைல் தொலைவில் உள்ள இந்த தீவை, தமிழக மீனவர்கள், ஓய்வெடுக்கவும், வலைகளை உலர்த்தவும் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்தனர்.

"செழிப்பான பகுதி':கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய, இந்திய பிரதமரின் செயல், அரசியல் சட்டத்திற்கு எதிரானது; இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது. அந்த தீவு, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி.கச்சத்தீவில் மனிதர்கள் வாழவில்லை என்றாலும், அதைச் சுற்றியுள்ள கடல் பகுதியில், செழிப்பான கடல் வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்களுக்கு இந்த பகுதி, அவசியமான மீன் பிடி பகுதி.

தமிழக மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமையை பாதுகாக்கவும், மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை பாதுகாக்கவும், கச்சத்தீவு, மீண்டும் இந்தியா வசம் கிடைக்க வேண்டும்.இதற்காக, இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையே, 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட உடன்பாடுகள் மற்றும் அது தொடர்பான தகவல்கள் தொடர்புகள் செல்லத்தக்கதல்ல என, உத்தரவிட வேண்டும்.

அது போல், இலங்கை ராணுவம் மற்றும் கடற்படையினரால், திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதலால் உயிரிழந்த தமிழக மீனவர்கள், அவர்கள் இழந்த வாழ்வாதாரம் போன்றவற்றிற்கான, இழப்பீடுகளை வழங்க, மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

"சட்டப்படி செல்லாது':இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட, கச்சத்தீவை தாரை வார்க்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி மேற்கொள்ளப் பட்டதல்ல. எனவே, அதை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைக்கு, அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு, 368ஐ திருத்தம் செய்யத் தேவையில்லை.எனவே, இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி செல்லத்தக்கதல்ல என, அறிவிக்கவும் வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கருணாநிதி, 1974ல், தமிழக முதல்வராக பதவி வகித்த போது தான், இலங்கைக்கு கச்சத் தீவை, மத்திய அரசு தாரை வார்த்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sakthivel habshan abudhabi - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13-மே-201323:22:31 IST Report Abuse
  sakthivel habshan abudhabi ஐயா தாங்கள் இதைப்பற்றி பேசுவதற்கு தகுதி உள்ளவர்தானா யோசித்து பார்த்தீர்களா? ஸ்ரீலங்கா நம் மக்களையே.... அழிக்க துணைபோன நீங்கள் அதுபோக கட்சத்தீவு நம்கைவிட்டு போகும்போது உங்களுக்கு தெரியாதா? யோசியுங்கள் .
Rate this:
Share this comment
Cancel
Mohan Ramachandran - Itanagar,இந்தியா
13-மே-201304:31:48 IST Report Abuse
Mohan Ramachandran ஆமாம் ராமர், ராவணனை கொன்றதாக வழக்கு போட வழி இருக்கா?
Rate this:
Share this comment
Cancel
தேவாங்கு - chennai,இந்தியா
12-மே-201314:31:58 IST Report Abuse
தேவாங்கு கச்சத்தீவு இப்போ நம்ம ஆளுமையில இல்லை. சுப்ரீம் கோர்ட் எல்லை, இந்தியப் பேரரசோட எல்லைக்குள்ள தான் செல்லும். இது எல்லாருக்குமே தெரியும். மேலும், இந்த கேசுக்கான முகாந்திரம், உச்சநீதிமன்றத்தோட எல்லைக்குள்ள வராதுன்னு மத்திய அரசு வாதாடும். அதை வெச்சி, தேர்தல் நேரத்துல காங்கிரஸ் கட்சியின் வோட்டு விகிதத்தை வேணும்னா குறைக்கலாம். மத்தபடி, இது, ஜெ. காவிரிக்கு கேஸ் போட்டு ஜெயிச்சதால, எங்க நம்ம பொழப்பு நாறிடுமோன்னு பயந்துக்கிட்டு செய்யற விஷயம் மாதிரி தான் தெரியுது.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
12-மே-201304:39:12 IST Report Abuse
g.s,rajan என்ன ஆச்சு ?? ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
Arunkumar Manokaran - Chidambaram,இந்தியா
11-மே-201316:02:11 IST Report Abuse
Arunkumar Manokaran நீங்க விடுற காமெடி அறிக்கைக்கு சிரிப்பொலி டிவி தேவையே இல்லை தாத்தா
Rate this:
Share this comment
kovandakurichy Govindaraj - jubail,சவுதி அரேபியா
12-மே-201300:50:00 IST Report Abuse
kovandakurichy Govindarajதாத்தா எதையும் உரிய காலத்தில் செய்ய மாட்டார். காரியம் கை மீறி போன பின்பு ஒப்பாரி வைப்பார் .உங்க 60 வருஷ அரசியல் ,ராஜதந்திர வாழ்கைக்கு 2014 ல மக்கள் வேட்டு வைத்துவிடுவார்கள் ...
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
11-மே-201316:00:44 IST Report Abuse
amukkusaamy சுலைமான்: இந்திரா பாட்டியின் காலத்தில் இந்த மு.க தாத்தா கண்டுக்காம விட்ட அனுபவ பாத்யதை சொத்தை, திரும்ப மீட்டு வர்றதுக்காக இவர் இப்போ கொள்ளு தாத்தாவா ஆனதுக்கப்புறம் கைப்புள்ளயாட்டம் கிளம்பியிருக்கிற வேகத்த பாத்தா எப்படியும் நாலஞ்சு தல உருளும் போல இருக்குல்ல?
Rate this:
Share this comment
Cancel
Venkatesan Jayaraman - Dubai,இந்தியா
11-மே-201315:41:17 IST Report Abuse
Venkatesan Jayaraman இதுனால சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் தலிவர் முளிச்சிட்டாறு
Rate this:
Share this comment
Cancel
Deva - Sivagangai ,இந்தியா
11-மே-201315:21:59 IST Report Abuse
Deva பதவிக்காக தாரைவார்த்து கொடுத்தவர் தான் இந்த தமிழின துரோகி கருணாநிதி. இப்போது வழக்கு போடுகிறார். தாரைவார்த்து கொடுக்கும்போது தெரியவில்லையோ? சுற்றியுள்ள கடல் பகுதியில், செழிப்பான கடல் வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்களுக்கு இந்த பகுதி, அவசியமான மீன் பிடி பகுதி என்று?
Rate this:
Share this comment
Cancel
T.Indran - Pudukottai,இந்தியா
11-மே-201315:13:01 IST Report Abuse
T.Indran முன்பு அண்ணா காலத்தில் கைவிடப்பட்ட தனி திராவிட நாடு,இப்போது உடனடியாக இந்தியாவில் இருந்து பிரித்து திமுக விடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு மீது கருணா ஒரு வழக்கு போடவேண்டும். தமிழ் ஈழம் கருணாவின் கனவு என்பதால், தமிழ் ஈழததை இலங்கையிலிருந்து பிரிதது தனி நாடாக்க வேண்டும், என்றும் உச்ச நீதி மன்றத்தில் மேலும் ஒரு வழக்கை டெஸொ மூலமாக போடவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
R.Saravanan - Male,மாலத்தீவு
11-மே-201314:10:10 IST Report Abuse
R.Saravanan இந்திய மீனவர்கள் கச்சதீவு பகுதியில் தாக்கபடுவது குறித்து கடந்த தி.மு.க ஆட்சியில் எதிர்கட்சிகளால் குரல் எழுப்பப்பட்ட போது நமது மீனவர்கள் பேராசை பட்டு அவர்கள் எல்லைக்கு சென்றால் தாக்கபடதான் செய்வார்கள் என்று சொன்னது. அப்போது முதல்வராக இருந்த இதே கருணா தான் என்பது அனைவருக்கும் தெரியும்.... அப்போதே அ.தி.மு.க. அரசால் உச்சநீதி மன்றத்தில் கச்சதீவை மீட்க கோரி வழக்கு தொடரப்பட்டது, பிறகு அ.தி.மு.க அரசு பதவியேற்றதும் அந்த மனுவுடன் வருவாய் துறையையும் இணைத்து அந்த வழக்குக்கு மேலும் வளு சேர்த்தது... இப்படி இருக்க அனைத்துக்கும் காரணமான கருணா, கச்சதீவை மீட்க கோரி வழக்கு தொடர்ந்திருப்பது எதற்கு என்பது நமக்கு புரியாமலா போகும்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை