PMK violence: helmet compulsory for bus drivers, Government Action | பஸ் டிரைவர்களுக்கு கட்டாய ஹெல்மெட் பா.ம.க.,வினர் வன்முறையால் அரசு அதிரடி| Dinamalar
Advertisement
பஸ் டிரைவர்களுக்கு கட்டாய ஹெல்மெட் பா.ம.க.,வினர் வன்முறையால் அரசு அதிரடி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சேலம்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அரசு பஸ்கள் மீது கல் வீசி தாக்கி, பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. அரசு பஸ் டிரைவர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில், பா.ம.க., ஆதிக்கம் உள்ள மாவட்டங்களில், அரசு பஸ் டிரைவர்களுக்கு, "ஹெல்மெட்' வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாமல்லபுரத்தில், பா.ம.க., சார்பில் சித்திரைதிருவிழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்ள வந்த, பா.ம.க.,வினருக்கும் வேறு ஒரு பிரிவினருக்கும் இடையே மரக்காணம் பகுதியில் மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்துக்கு நீதி கேட்டு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் அனுமதியின்றி விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட முயற்ன போது கைது செய்யப்ப்பட்டனர். ராமதாஸ் உள்ளிட்டோரை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
ராமதாஸ் கைது சம்பவத்தை கண்டித்து, பா.ம.க.,வினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு பஸ்கள் மீது கல் வீசி தாக்கி, பஸ் கண்ணாடியை உடைத்தும், பயணிகள் உயிருக்கு தொடர் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீசியும், அரசு வாகனங்கள் மீது கல் வீச்சு சம்பவமும், தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டு, பா.ம.க.,வினர் அட்டூழியம் செய்து வருகின்றனர்.

தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இரு சக்கர வாகனங்கள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி மீது பெட்ரோல் குண்டு வீசி எரிந்தனர். இரவு நேரங்களில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மீது தொடர்ந்து கல் வீசி தாக்கி வருகின்றனர். நேற்று முன் தினம் வாழப்பாடி அருகே பஸ் மீது கல் வீசி தாக்கியதில், மூலிகை வியாபாரி ஒருவர் பலத்த காயம் அடைந்து பலியானார்.
பா.ம.க.,வினர் அட்டடகாசத்தால், இரவு நேரங்களில் பஸ்களை இயக்க டிரைவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில், பா.ம.க.,வினர் ஆதிக்கம் உள்ள மாவட்டங்களில், அரசு பஸ் டிரைவர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் பஸ்களை இயக்க தயக்கம் காட்டி வருகின்றனர். பா.ம.க.,வினரின் வன்முறையை கட்டுக்கும் கொண்டு வரும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பலர் மீது குண்டர் சட்டமும், தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ந்துள்ளது.

இருப்பினும், பா.ம.க.,வினர் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக சட்டம் ஒழுங்கு பிரச்னையை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர். அரசு பஸ்கள் மீது கல் வீசி தாக்கும் சம்பவத்தில் இருந்து டிரைவர்களை காப்பாற்ற தமிழக அரசு, "ஹெல்மெட்' வழங்கியுள்ளது. பா.ம.க.,வினர் ஆதிக்கம் உள்ள மாவட்டங்களில், அரசு பஸ் டிரைவர்கள், "ஹெல்மெட்' அணிந்த படி பஸ்களை இயக்கி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் ஹெல்மெட் அணிந்து பஸ்களை இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி கிராமப்புறங்களில் இயக்கப்படும் அரசு பஸ் டிரைவர்கள் ஹெல்மெட் அணிந்து பஸ்களை இயக்கி வருகின்றனர்.
* அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியிலிருந்து இயக்கப்படும் அனைத்து, அரசு பஸ் டிரைவர்களுக்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று, ஹெல்மெல்ட் வழங்கப்பட்டது. அங்குள்ள பஸ் டிரைவர்கள் பலரும் ஹெல்மெட் அணிந்து பஸ் ஓட்டிச் சென்றனர்.
*அரியலூரிலிருந்து சென்னை செல்லும் அரசு போக்குவரத்துக் கழக பஸ் டிரைவர்கள் நான்கு பேருக்கு, பாதுகாப்பு கருதி நேற்று காலை ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (53)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saravanan - Dares Salaam,தான்சானியா
11-மே-201312:03:09 IST Report Abuse
saravanan ஒரு சினிமாவால சட்டம் ஒழுங்கு கெட்டு போயிடும்னு சொல்லி தடை பண்ணவங்களால இந்த வன்முறையை தடுக்க முடியவில்லையா???? வெட்கம்.....
Rate this:
Share this comment
Cancel
VENKATESWARAN V - coimbatore,இந்தியா
11-மே-201311:34:33 IST Report Abuse
VENKATESWARAN V காமெடிதான். ஆங்கங்கே இருக்கும் காவல்துறையும் உளவுத்துறையும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். கடமையை செய்ய தவறிவிட்டு வெட்டித்தனமான யோசணைகள். அரசுக்கு ஓட்டுனர் மட்டும்தான் முக்கியமா. நடத்துனரும் பயணிகளும் சும்மாவா.
Rate this:
Share this comment
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
11-மே-201311:31:31 IST Report Abuse
chinnamanibalan பொது சொத்துக்களுக்கும் ,மனித உயிர்களுக்கும் ஆபத்து விளைவிக்க கூடிய எந்த ஒரு வன்முறையையும் இரும்பு கரம் கொண்டு அடக்க அரசு முன் வர வேண்டும். அதை விட்டுவிட்டு தலை கவசம் அணிந்து வாகனங்களை ஒட்டுவதால் நாட்டில் சட்டம் ஒழுங்கு கேலிக்குரியதாகி விடும்...
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
11-மே-201310:58:57 IST Report Abuse
mirudan தலை கவசத்துடன் உடம்புக்கு இரும்பால் கவச உடையும் கொடுத்தால் இன்னும் பாதுகாப்பாக இருக்கும் ? தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு படும் பாட்டை பாருங்கள் ? என்று அரசே சொல்வது போல் இருக்கு ?
Rate this:
Share this comment
Cancel
R Bala Sundaram - nagapattinam,இந்தியா
11-மே-201310:25:20 IST Report Abuse
R Bala Sundaram தலைக்கு ஹெல்மட் கொடுக்காமல் ,நிலக்கரி சுரங்கத்திற்கு கரி வெட்ட போகும் பொது பயன்படுத்தும் ஹெல்மெட்டை கொடுக்கிறார்கள் .இதனால் ஒரு லாபமும் இல்லை .
Rate this:
Share this comment
Cancel
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
11-மே-201310:20:49 IST Report Abuse
பி.டி.முருகன்    அப்படியே பயணிகளுக்கும் கொடுத்தால் தேவலை.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-மே-201310:10:55 IST Report Abuse
Srinivasan Kannaiya ஓட்டுனர்களுக்கு ஹெல்மெட்....ஓகே.ஓகே..ஓகே.. பஸ்சுக்கு ............
Rate this:
Share this comment
Cancel
BLACK CAT - Marthandam.,இந்தியா
11-மே-201310:05:17 IST Report Abuse
BLACK CAT ஷேவாக் ::: என் cricket ஹெல்மெட்டை காணவில்லை ...
Rate this:
Share this comment
Cancel
BLACK CAT - Marthandam.,இந்தியா
11-மே-201310:01:07 IST Report Abuse
BLACK CAT பா.ம.க. கல் அடி படுவதை தவிர்க்க எல்லா பஸ்களிலும் கண்ணாடியை களத்தி வைத்து விட்டு ஓட்ட வேண்டும் ... இது எப்படி இருக்கு ......?
Rate this:
Share this comment
Cancel
parthiban T - Periyakulam,இந்தியா
11-மே-201309:43:59 IST Report Abuse
parthiban T இவ்வளவு ரிஸ்க் எடுத்து வேலை செய்யணுமா பேசாம அரசியல்வாதிகள விட்டு வண்டிய ஓட்ட சொல்லலாம் அவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிற சாக்கில பொதுமக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்ல..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்