Madras University is going to run on solar power | சூரிய மின்சக்தியில் இயங்க போகுது சென்னை பல்கலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூரிய மின்சக்தியில் இயங்க போகுது சென்னை பல்கலை

Updated : மே 11, 2013 | Added : மே 11, 2013 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Madras University is going to run on solar power

சென்னை பல்கலை, சூரிய மின்சக்தியில் இயங்க உள்ளது. பல்கலையின் கீழ் உள்ள, நான்கு வளாகங்களிலும், இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.

நாட்டின் பழமையான பல்கலைகளில், சென்னை பல்கலையும் ஒன்று. லண்டன் பல்கலைக் கழகத்தின் அமைப்பில், சென்னை பல்கலை, 1851ல் துவங்கப்பட்டது. சென்னை பல்கலைக்கு, கிண்டி, தரமணி, சேப்பாக்கம், மெரீனா என, நான்கு வளாகங்கள் செயல்படுகின்றன. இதில், 60க்கும் மேற்பட்ட துறைகளில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர்.
மெரினா கடற்கரை, அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர்., சமாதி உள்ளிட்டவற்றை சுற்றி பார்க்க வருபவர்கள், வெளிநாட்டினர் உள்ளிட்டோர், சென்னை பல்கலையில் உள்ள, "செனட்' கட்டடத்தை, பார்வையிட்டு செல்கின்றனர்.

புகழ் பெற்ற கட்டட அமைப்பை கொண்ட, சென்னை பல்கலையில், சூரிய சக்தி மூலம், மின் உற்பத்தி செய்யும் கருவிகள், நிறுவப்பட உள்ளன. இப்பணியை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) மேற்கொள்ளும்.இதுகுறித்து, சென்னை பல்கலை துணைவேந்தர் தாண்டவன் கூறியதாவது:

மெரினா, சேப்பாக்கம், கிண்டி, தரமணி என நான்கு வளாகத்திலும், சூரிய சக்தி மின் உற்பத்தி கருவிகள் நிறுவப்படும். இப்பணிகளை, "டெடா' மேற்கொள்ளும். சென்னை பல்கலையில் உள்ள அனைத்து துறைகள் மற்றும் அலுவலகங்களில், சூரிய சக்தி மின்சாரம் பயன்படுத்தப்படும். ஆனால், ஆய்வகங்களில், இவ்வசதியை பயன்படுத்த முடியாது.

தற்போது, இதற்கான பணி நடந்து வருகிறது. விரைவில், ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். நான்கு வளாகங்களிலும், சூரிய சக்தி மின் உற்பத்தி கருவிகள், ஐந்து கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.இவ்வாறு தாண்டவன் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
c.k.sundar rao - MYSORE,இந்தியா
11-மே-201314:21:48 IST Report Abuse
c.k.sundar rao I AM RESIDING IN MYSORE FOR LAST 27 YEARS & LIVING IN OWN ஹவுஸ். I HAVE INSTALLED SOLAR HEATER FOR HOT WATER DUE TO WHICH MY CONSUMPTION & BILL IS LESS COMPARE TO OTHERS USING CONVENTIONAL ஹீட்டர்,IN ADDITION TO அபோவே I GET A REBATE OF 50/- IN MY கரண்ட் பில். ஐ GOT THE SOLAR HEATER AVAILING BANK LOAN & AT REDUCED இன்டரச்ட்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-மே-201312:51:43 IST Report Abuse
தமிழ்வேல் பழமையான, அழகான கட்டிடத்தில் புதுமையை புகுத்துவது அழகல்ல.... அரசின் பலதுறைகள் மற்றும் மாநகராட்சியின் கான்க்ரீட் கட்டிடங்கள் எவ்வளவோ இருக்கின்றனவே ?
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
11-மே-201311:37:37 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar வரவேற்க தகுந்தவை. மேலும் அனைத்து பேருந்து நிலையம் மற்றும் பணிமனை.., அனைத்து மாவட்ட ஆட்சி அலுவலகத்திலும் ஏற்படுத்த பட வேண்டும்.இவை சூரிய சக்தி மின் ஆற்றலை பொதுமக்கள் பயன் படுத்த நல்ல விழிபுணர்வுவை ஏற்படுத்தும் - பூபதியார்
Rate this:
Share this comment
Cancel
Hari - Chennai,இந்தியா
11-மே-201310:25:15 IST Report Abuse
Hari maandi 23ஆயிரம் கொடுத்து சோலார்வாங்கினால் ஒருவருடம் கேரண்டி உடன் இரண்டு பேன் 10வாட்எஸ் பைல்பு இரண்டும் எரிகிறது
Rate this:
Share this comment
Cancel
parthiban T - Periyakulam,இந்தியா
11-மே-201309:52:42 IST Report Abuse
parthiban T தாண்டவன் அவர்களே மொதல ஒங்க ஆபீஸ்ல எத்தன ரூம்ல லைட் பேன் எல்லாம் சும்மாவே எறிஞ்சிக்கிட்டு இருக்கு பாருங்க. அத சரி பண்ணுங்க..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-மே-201308:26:44 IST Report Abuse
Srinivasan Kannaiya ஒப்பந்தப்புள்ளி இனிதான் கோரவேண்டும் என்றால்... இனியும் நாளாகும்.. விரைவில் முடியாது.. தாண்டவன் சார், இவ்வளவு தொகையும் வைத்து கொண்ட வாலாவிருந்தீங்களே... இதை முன்பே செய்து இருக்கலாமே... முதலில் எல்லா பத்திரிகைகளில் முழ பக்க விளம்பரம் கொடுங்கள்.. உங்கள் படம் வேண்டாம்... விவரம் மட்டும்....
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
11-மே-201308:08:59 IST Report Abuse
மதுரை விருமாண்டி சென்னை பல்கலை முழுவதற்கும் மின் பயன்பாட்டு அளவு எவ்வளவு என்று நிருபருக்கு தெரியுமா ?? அதை முழுவதுமாக சூரிய மின்சாரம் வழியாக பெற எவ்வளவு பரப்பு தகடு தேவை என்று தெரியுமா ?? சொம்படிக்க சான்ஸ் கிடைத்தது என்று தலைப்பை பெரிதாக போட்டு விட்டார்.. ஒரு ஃபேன், ஒரு பல்பு எரிந்தால் அதுவே சாதனை தான்.. அரசு கட்டிடங்களில் இந்த மாதிரி விஷயம் எல்லாம் காசுக்கு வந்த கேடு தான்... தகடு போட்டு, கனெக்ஷன் கொடுத்து, மேடை போட்டு, தோரணம் கட்டி, மைக் போட்டு, ரிப்பன் வெட்டி எல்லாம் முடிந்த பிறகு, ஒரு ஃபேன் ஒரு மாசம் இயங்கினால் நான் ரூ. 10 லட்சம் தருகிறேன்.. துருப் பிடிச்சி, உடைந்து, தொங்கி வீணாப் போக ரெண்டு மாசம் போதும்.. அதை நிர்வகிக்க, ரிப்பேர் செய்யவில்லை என்றாலும், செலவுக் கணக்கில் எழுதி ஏப்பம் மட்டும் சரியாக விடுவார்கள்.. அது தான் அரசு நிறுவனம்...
Rate this:
Share this comment
Cancel
Jay - Chennai,இந்தியா
11-மே-201307:32:13 IST Report Abuse
Jay அப்பாடா, இப்பவாவுது ஓர் அரசு நிறுவனம் சூரிய சக்தியின் சக்தியை உணர்ததே மிக்க மகிழ்ச்சி இதே போல் அனைத்து அலுவலகங்களும், நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும். சூரிய சக்தி தான் நாம் நம்பியிருக்கும், கைக்கொடுக்கும் ஒரே வழி. அரசே தயவு செய்து இதை பொது மக்களுக்கு நடைமுறைபடுத்துங்கள். ஒவ்வாரு வீடும் அதன் மின் தேவையை அதுவே தயார் செய்து கொள்ளும் வகையில் எளிதாக மாற்றிவிடலாம். இலவசங்களை தவிர்த்து மலிவு விலை முறையை செயல்படுத்துங்கள். மக்கள் அதிகம் உபயோகிக்கும் படிக்கட்டுகளில் இருந்து கூட மின்சாரம் தயாரிக்கும் வழிகளை ஆராயவேண்டும் (அதாவது அரசு பொது இடங்களில் உள்ள படிக்கட்டுகள் தினம் லட்சக்கணக்கான மக்கள் போய்வருகிறார்கள். அவைகளில் அழுத்த ஆற்றலை மின்னாற்றலாக மாற்றி அந்த அந்த பொது அலுவலகங்கள் மின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்)
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
11-மே-201305:15:24 IST Report Abuse
villupuram jeevithan காலையில் ஒரு நல்ல சேதி. மின் உற்பத்தியை விட மின் தேவையை குறைப்பது மிக அவசியம். தற்போது தேவை அதிகரித்துக் கொண்டெ போகிறது. எவ்வளவு உற்பத்தி பண்ணினாலும் போதாது என்ற நிலை இருக்கிறது. அதை போக்க இம்மாதிரியான சுய உற்பத்தி அவசியமே?
Rate this:
Share this comment
Cancel
Mohan Ramachandran - Itanagar,இந்தியா
11-மே-201304:51:47 IST Report Abuse
Mohan Ramachandran a good ning
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை