Pakistan parliamentary Election today | பாகிஸ்தானில் இன்று பார்லிமென்ட் தேர்தல் ; நாசவேலையை தடுக்க ராணுவம் குவிப்பு| Dinamalar

பாகிஸ்தானில் இன்று பார்லிமென்ட் தேர்தல் ; நாசவேலையை தடுக்க ராணுவம் குவிப்பு

Added : மே 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பாகிஸ்தானில் இன்று பார்லிமென்ட் தேர்தல் ; நாசவேலையை தடுக்க ராணுவம் குவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று பலத்த பாதுகாப்புடன் பார்லிமென்ட் தேர்தல் நடக்கிறது. பாகிஸ்தானில், 342 தொகுதிகளுக்கான பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ளது. 8.6 கோடி மக்கள் ஓட்டளிக்க உள்ளனர். பார்லிமென்ட் தேர்தலுடன், நான்கு மாகாண தேர்தல்களும் நடைபெறுகின்றன.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சி, அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் மகன் பிலாவல் புட்டோ தலைவராக உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி, மாஜி கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின், தேரிக்-இ-இன்சாப் கட்சி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன.


பார்லிமென்ட் தேர்தலில், 4,670 வேட்பாளர்களும், மாகாண தேர்தலில், 11 ஆயிரம் பேரும், போட்டியிடுகின்றனர். மாஜி அதிபர் முஷாரப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த தேர்தலை அவரது கட்சி புறக்கணித்துள்ளது. தேர்தல் தொடர்பான கலவரங்களில் இதுவரை, 100க்கும் அதிகமானவர்கள் பலியாயியுள்ளனர். "மதத்தில் நம்பிக்கையில்லாத தலைவர்கள் போட்டியிடும் இத்தேர்தலை புறக்கணிக்க வேண்டும்; இல்லாவிட்டால் தாக்குதல் நடத்துவோம்' என, "தலிபான்' பயங்கரவாத அமைப்பு எச்சரித்துள்ளது. மாஜி பிரதமர் யூசுப் ரசா கிலானியின் மகன் ஹைதர், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார்.

பாகிஸ்தானில் செயல்படும், தேரிக் இ-தலிபான் அமைப்பின் தலைவர், ஹக்கிமுல்லா மெக்சூத், 10 நாட்களுக்கு முன், தன் சகாக்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், "பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தேர்தலை குலைக்கும் பொறுப்பு என்னுடையது. பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் தற்கொலை படை தாக்குதல் மூலம் தேர்தலை குலைக்கவேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார். எனவே, இன்றைய தேர்தலில் நாசவேலைகள் அதிகம் நடக்கலாம் என்பதால், ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை