இந்திய டிரைவருக்கு சிங்கப்பூரில் சிறை| Dinamalar

இந்திய டிரைவருக்கு சிங்கப்பூரில் சிறை

Added : மே 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிங்கப்பூர் : சிங்கப்பூரில், லாரி டிரைவரை தாக்கிய இந்தியருக்கு, ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில், ஜுராங் பகுதியில், 2011ம் ஆண்டு, இந்தியர் சாமுவேல், 38, லாரி ஓட்டி சென்றார். ஒரு வளைவில், இவர் வலது புறம் லாரியை திருப்ப, சிங்கப்பூர் டிரைவர், பே பூன் ஹோ, 58, ஓட்டி வந்த கம்பெனி லாரியை இடதுபுறமாக திருப்பினார். இதனால், விபத்து ஏற்படும் சூழல் உண்டானது. இதனால், கோபமடைந்த சாமுவேல், கீழே இறங்கி, சிங்கப்பூர் டிரைவரை தாக்கினார். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாமுவேல் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு, ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் அப்பீல் செய்ய உள்ளார். 6 லட்சம் ரூபாய் ரொக்க ஜாமினில் இவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை