Advertisement
வங்க தேச கட்டட விபத்து ; 17 நாட்களுக்கு பின் பெண் மீட்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 மே
2013
00:35

தாகா : வங்கதேச தலைநகர், தாகாவில், எட்டு அடுக்கு கட்டடம் நொறுங்கி விழுந்ததில், பலியானவர்களின் எண்ணிக்கை, 1000 ஆக உயர்ந்துள்ளது. 17 நாட்களுக்கு பின், ஒரு பெண் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார். வங்கதேசத்தின், தாகா நகரில், "ராணா பிளாசா' என்ற பெயரில், எட்டு அடுக்கு, வணிக வளாகக் கட்டடம், கடந்த மாதம், 24ம்தேதி, நொறுங்கி விழுந்தது. இதில், ஏராளமானவர்கள் புதையுண்டனர்; 2500 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை, 1000 ஆக உயர்ந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில், 300 கடைகளும், ஐந்து ஜவுளி நிறுவனங்களும், ஒரு வங்கி கிளையும் செயல்பட்டு வந்தன.
ஏராளமான சடலங்கள் மீட்கப்பட்டு விட்டதால், இனி உயிரோடு யாரும் இருக்கமாட்டார்கள், என முடிவு செய்து, மீட்பு பணியை முடிக்க, ராணுவ அதிகாரி உத்தரவிட்டார். அப்போது, இடிபாடுகளில் இருந்து ஒரு பெண் அழும் குரல் கேட்டது.
உடனடியாக அங்கு சென்ற மீட்பு குழுவினர், ரேஷ்மா என்ற பெண்ணை உயிரோடு மீட்டனர். அவருக்கு அவ்வளவாக காயம் இல்லை;ராணுவ மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.