சீனாவில் தவித்த இந்தியர்கள் தாயகம் திரும்பினர்| Dinamalar

சீனாவில் தவித்த இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

Added : மே 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பீஜிங் : சீனாவில் கடன் தொல்லையில் சிக்கி தவித்த, இரு இந்தியர்கள், தூதரக உதவியால் நாடு திரும்பியுள்ளனர். சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள இவு பகுதியில் பணிபுரிந்தவர்கள், ஷியாம் சுந்தர் அகர்வால், தீபக் ரகீஜா. ஏமன் நாட்டவர் சீனாவில் வர்த்தகம் செய்து வந்தார்.அவரிடம் இவர்கள் வேலை செய்தனர். ஏராளமான கடன் வாங்கிய எஜமானர், இவர்களை நிறுவனத்தில் இருக்கச்சொல்லி விட்டு தப்பி விட்டார். இதனால், கடன்காரர்கள் இவர்களை பிடித்து வைத்து கொண்டனர். இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டதால், தாயகம் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.
இந்திய தூதரகத்தின் தலையீட்டின் பேரில், ஒரு குறிப்பிட்டத்தொகையை கட்டிய பின், இவர்களை விடுவிக்க வர்த்தகர்கள் ஒப்புக்கொண்டனர். மீதமுள்ள தொகையை இவர்கள் ஒப்படைப்பதாக கூறியதையடுத்து, இரண்டு வாரங்களுக்கு முன், தாயகம் திரும்பினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை