சவுதியிலிருந்து தாயகம் திரும்ப 18 ஆயிரம் இந்தியர்களுக்கு பயண ஆவணங்கள் தயார்| Dinamalar

சவுதியிலிருந்து தாயகம் திரும்ப 18 ஆயிரம் இந்தியர்களுக்கு பயண ஆவணங்கள் தயார்

Added : மே 11, 2013 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

துபாய்: சவுதி அரேபியாவில், புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள சட்டப்படி, தொடர்ந்து அங்கு தங்கியிருக்க தகுதியில்லாத இந்தியர்களில், 18 ஆயிரம் பேர், அந்நாட்டை விட்டு வெளியேறுதற்கான, அவசர பயண ஆவணங்களை பெற்றுள்ளனர். சவுதி அரேபியாவில், உணவகம், சிறு கடைகள், சிறிய அளவிலான தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை, பிற நாட்டினர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இனிமேல், இவ்வகை சிறுதொழில்களை சொந்த நாட்டினர் மட்டுமே நடத்தவேண்டும் என்பதற்காக, "நிதாகத்' என்ற பெயரில் புதிய சட்டத்தை, சவுதி அரேபிய அரசு, கடந்த மார்ச் மாதம்,அமல்படுத்தியது. புதிய சட்ட விதிமுறைகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது, அந்நாட்டு தொழில் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என, ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தால், அந்நாட்டில் செயல்பட்டு வரும், ஏழு லட்சம் சிறு நிறுவனங்களில், 84 சதவீத நிறுவனங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இல்லையேல், அந்த நிறுவனங்களில், அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரையாவது வேலைக்கு நியமிக்கவேண்டும். இதனால், ஐந்து லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் படி, வேலையை தக்க வைத்து கொள்ளவும், முடியாதவர்கள் விரைவில் நாடு திரும்பவும், உரிய ஏற்பாடுகளை செய்து கொள்ள மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களுக்கு உதவுவதற்காக, அங்குள்ள இந்திய தூதரகத்தில் தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் படி, சவுதியில் தொடர்ந்து தங்கியிருக்க தகுதியில்லாதவர்கள், நாடு திரும்ப விண்ணப்பித்திருந்தனர்; இது தொடர்பாக, 60 ஆயிரம் இந்தியர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், 18 ஆயிரம் பேருக்கு பயண ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அவர்கள் விரைவில் தாயகம் திரும்ப உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jafarullah Jafar - Dammam,சவுதி அரேபியா
15-மே-201305:20:57 IST Report Abuse
Jafarullah Jafar சவுதியில்.இருந்து...தாயகம்..திரும்பும்...அனைவருக்கும..இந்தியா..அரசு..வேலை வாய்ப்பை..கொடுக்க..வேண்டும்.. திருவாவடுதுறை...R .ஜபாருல்லாஹ்...தம்மம்..K.S,A
Rate this:
Share this comment
Cancel
Muthu Ramaswamy - Jeddah,சவுதி அரேபியா
11-மே-201313:14:17 IST Report Abuse
Muthu Ramaswamy இது உண்மையான செய்தியா என்று அறியவில்லை...இது வரை நான் விசாரித்த வரையில் இதுபோல் அவசர கால சான்றிதழ் அளிக்கப்பட்டு விட்டது என்பது தெரியவில்லை..இருந்தாலும் இதுபோல் செய்தியை கேள்வி பட்டது சந்தோசம்.. ஏனென்றால் நிறைய இந்தியர்கள் இங்கு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.. தாயகம் திரும்ப முடியாமல்..தினமலர் இது போல் சௌதி அரேபியா செய்திகளை மேலும் தினமும் தந்து கொண்டு இருந்தால் நிறைய சௌதி வாழ் தமிழர்கள் சந்தோசபடுவார்....
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
11-மே-201308:56:34 IST Report Abuse
Skv ஆனால் நம்ப நாட்டிலே எந்த சீனாக்காரனும் சைனீஸ் ஹோட்டல் தொறந்து விற்பனை செய்யலாம். அப்படித்தானே. அடிச்சு விரட்டுங்க.
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
11-மே-201308:17:09 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி இனி இவர்களுக்கு சிறப்பு சலுகை, வேலைவாய்ப்பு, என்றெல்லாம் சொல்லி இங்கு உள்ளூரில் ஒரு குழப்பம் புதியாதாக முளைக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை