Advertisement
அமைச்சர் நாராயணசாமியுடன் சி.பி.ஐ., இயக்குனர் ஆலோசனை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

11 மே
2013
07:29
பதிவு செய்த நாள்
மே 11,2013 01:09

புதுடில்லி : நிலக்கரி சுரங்க முறைகேடு விசாரணை விவகாரம், சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், சி.பி.ஐ., இயக்குனர், ரஞ்சித் சின்கா, நேற்று மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர், நாராயணசாமியை சந்தித்து பேசினார். சி.பி.ஐ., செயல்பாடு மற்றும் அது தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

"நிலக்கரி சுரங்க முறைகேடு குறித்து சி.பி.ஐ., நடத்திய விசாரணை அறிக்கையை, சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் திருத்தினார். இரண்டு உயர் அதிகாரிகளும், இதில், சம்பந்தப்பட்டு உள்ளனர்' என, சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., இயக்குனர் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, மத்திய அரசு மற்றும் சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. இதன்பின், சி.பி.ஐ., அளித்த உறுதிமொழியில், சுப்ரீம் கோர்ட் அறிவுரைப்படி நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.


இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நிலக்கரி சுரங்க முறைகேடு குறித்த விசாரணை அறிக்கையில், மத்திய அரசு தலையீடு தொடர்பான ஆவணங்களை தரும்படி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், சி.பி.ஐ.,யிடம் கோரியிருந்தது.இந்நிலையில், நேற்று சி.பி.ஐ., இயக்குனர், டில்லியில் நார்த் பிளாக்கில் உள்ள மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர், நாராயணசாமி அலுவலகத்திற்கு வந்து ஆலோசனை நடத்தினார். சி.பி.ஐ., தொடர்பான நிர்வாக விஷயங்களை கவனிக்கும், அமைச்சக பொறுப்பு நாராயணசாமியிடம் உள்ளது.சமீபத்தில், சி.பி.ஐ., செயல்பாடு குறித்து, சுப்ரீம் கோர்ட் தெரிவித்த கருத்துக்களை தொடர்ந்து, இச்சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adithyan - chennai,இந்தியா
11-மே-201308:23:47 IST Report Abuse
adithyan நாராயணசாமிக்கு வாள் வாள் என்று அர்த்தமில்லாமல் கத்த தெரியுமே அல்லாமல் உருப்படியாக, அர்த்தமுடன் பேச கற்றுக்கொள்ள vum
Rate this:
0 members
0 members
10 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-மே-201308:07:15 IST Report Abuse
kumaresan.m இந்தியாவில் அணைத்து துறைகளில் பணியாற்ற துறை ரீதியாக கல்வி தகுதி அவசியம் தேவைப்படுகிறது ......ஆனால் அரசியலுக்கு விதிவிலக்கு ஏன் ? நவீன காலத்திற்கு தகுந்தாற்போல் மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருதல் மிக அவசியம் "
Rate this:
1 members
1 members
15 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-மே-201307:59:57 IST Report Abuse
kumaresan.m இரவு பகல் பாராமல் திறமையுடன் பெரிய படிப்பு எல்லாம் படித்துவிட்டு வந்து ....10 ஆம் வகுப்பு கூட தாண்டாத அரசியல்வாதிகளின் கீழ் வேலை செய்வது .....????
Rate this:
0 members
0 members
19 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
11-மே-201306:28:05 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி கூடங்குளம் உற்பத்தி எப்போது துவங்கும் என்று சிபிஐ அமைப்பு கண்டுபிடித்து சொல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது இருப்பார்.
Rate this:
0 members
1 members
15 members
Share this comment
Cancel
11-மே-201306:27:34 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் நிலக்கரிக்கும் நாராயணசாமிக்கும் ஒரே ஒரு ஒற்றுமைதான் உள்ளது. அவர் சாயம் வெளுக்குமோ?
Rate this:
0 members
0 members
15 members
Share this comment
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
11-மே-201311:18:36 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் சிவாஜி படத்தில் ரஜினி செய்தது போல செய்து பார்க்க வேண்டும்.....
Rate this:
16 members
2 members
0 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
11-மே-201304:45:03 IST Report Abuse
villupuram jeevithan ஓ, சிபிஐ தொடர்பான நிர்வாக விஷயங்களை கவனிக்கும் அமைச்சக பொறுப்பு 15 நாள் புகழ் நாராயணசாமியிடம் உள்ளதா? 15 நாட்களில் ஆலோசனை முடிந்து விடுமே ?
Rate this:
0 members
0 members
17 members
Share this comment
Cancel
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
11-மே-201303:26:24 IST Report Abuse
பொன்மலை ராஜா பதினைந்து நாட்களில் சி.பி.ஐ விசாரணைகளை முடிவுக்குக் கொண்டுவரும் வழிமுறைகள் பற்றிய ஆலோசனைகள் சி.பி.ஐ., இயக்குனர், ரஞ்சித் சின்கா அவர்களுக்குக் கிடைத்திருக்கும் ...
Rate this:
0 members
0 members
22 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.