Advertisement
கேன்சர் கட்டிகளை கண்டுபிடிக்கும் நாய்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

ஊட்டி:ஊட்டியில் நாய்களின் சாகசம் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.தென்னிந்திய கெனல் கிளப் சார்பில், நாய்கள் கண்காட்சி, ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நேற்று துவங்கியது. நாய்களின் கீழ்படிதல் குறித்த சோதனை நடத்தப்பட்டது. கோவை, நீலகிரி, நாமக்கல், சிவகங்கை, சத்யமங்கலம், புதுச்சேரி பகுதிகளில் இருந்து, 32 நாய்கள் பங்கேற்றன. போலீஸ் பயிற்சி மோப்ப நாய்கள், பயிற்சியாளரின் கட்டளைக்கு கீழ் படிந்தன. பல வெளிநாட்டு வகை நாய்களும் இடம் பெற்றுள்ளன. இன்று, இரண்டாவது நாள் கண்காட்சியில், சில அரிய வகை நாய்கள் இடம் பெறவுள்ளன.

கண்காட்சி பற்றி, தென்னிந்திய கெனல் கிளப் தலைவர், கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர் போன்ற பனிமலை சூழ்ந்த பகுதியில் சிக்கிக் கொண்டவர்களை மோப்பம் பிடித்து, அவர்களை இழுத்து வரும் திறன் கொண்ட, "செயின்ட், பெர்னார்ட்' என்ற நாய்கள், காட்சியில் பங்கேற்க உள்ளன. தவிர, "பீகில்' என்ற நாய், தற்போது மேலை நாடுகளில், மருத்துவம் மற்றும் துப்பறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மனித உடலில் மோப்பம் பிடித்து, கேன்சர் நோய் கிருமி கட்டி உள்ள இடத்தை, நாய்கள் துல்லியமாக சுட்டி காட்டுகின்றன.
இவை, சர்வதேச விமான நிலையங்களில், பயணிகள் கொண்டு வரும் சூட்கேஸ், பைகளை மோப்பம் பிடித்து, அதில் போதை பொருட்கள் உள்ளதா என்பதை, மிகத் துல்லியமாக கண்டுபிடித்து, போலீசாருக்கு, துப்புக் கொடுக்கின்றன. இவ்வகை நாய்கள் இந்த கண்காட்சியில் இடம் பெறவுள்ளன.இவ்வாறு, கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.M.J. Paul Raj - Riyadh,சவுதி அரேபியா
11-மே-201311:35:23 IST Report Abuse
V.M.J. Paul Raj நன்றிகெட்ட மனிதகளை விட நாய்கள் மிகவும் உயர்ந்தவையே. அன்பு காட்டி பாருங்கள் அவை மனிதர்களை விட நன்றியும், விசுவாசமும், பாசமும் நிறைந்தவை.
Rate this:
0 members
1 members
5 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
11-மே-201311:15:03 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இனிமேல் நாய்களை மரியாதையாக நாயர் என்று அழைப்போம்..
Rate this:
2 members
0 members
5 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-மே-201309:26:05 IST Report Abuse
Srinivasan Kannaiya மனிதன் கூட உண்மையை மறைக்கலாம். ஆனல் நாய்கள் மறைக்காது..
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.