மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் புதிய வசதி ; யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை வாக்காளர் அறியலாம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் புதிய வசதி ; யாருக்கும் ஓட்டளித்தோம் என்பதை வாக்காளர் அறியலாம்

யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை, வாக்காளர்கள் உறுதி செய்து கொள்ள, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில், இந்த வசதியை அறிமுகப்படுத்த முடியாது என்பதால், அடுத்து வரும் இடைத் தேர்தல்களிலும், சட்டசபை தேர்தல்களிலும் இதை அமல்படுத்த, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தேர்தலில், வாக்காளர்கள் தங்களின் ஓட்டுக்களைப் பதிவு செய்ய, தற்போது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், குளறுபடிகளும், மோசடிகளும் நடப்பதாக, அரசியல் கட்சிகள் பலவும் குற்றம் சாட்டி வருகின்றன.


"தாங்கள் ஓட்டளித்தது சரியான நபருக்கு சென்றுள்ளதா என்பதை, வாக்காளர்கள் உறுதி செய்து கொள்ள, ஓட்டு போட்டதும், ரசீது தரும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையம் பல முறை ஆலோசனை நடத்தியது.இறுதியில், ஓட்டுப் பதிவு இயந்திரத்துடன் சேர்த்து, ஒரு சிறிய பிரின்டர் சாதனம் பொருத்தி, அதில் ஓட்டுப் போட்டதற்கு, சின்னத்துடன் கூடிய ரசீது தரும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவாதிக்க, நேற்று தேர்தல் ஆணைய அலுவலகத்தில், அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க., சார்பில், டி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க., சார்பில், தம்பித்துரை, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் காங்கிரஸ், பா.ஜ., முலாயம் சிங்கின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தேர்தல் ஆணையம் தரப்பில், தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், தேர்தல் ஆணையர்கள் பிரம்மா, சயீதி மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், "வோட்டர் வெரிபையபிள் பேப்பர் ஆடிட் டிரேல்' என்ற பெயர் கொண்ட, ஒரு சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. யாருக்கு ஓட்டுப் போடப்பட்டுள்ளது என்பதை, சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு சொல்லும் இயந்திரம் இது. சிறிய பெட்டி வடிவில் இருக்கும், இந்த பிரின்டர் சாதனம், மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், விரும்பிய சின்னத்தை அமுக்கியவுடன், அருகில் உள்ள இந்த பிரின்டர் காகிதத்தில் அந்த சின்னம் பதிவாகி வெளியேறும். பின், அந்த காகிதம், தானாகவே கிழிந்து, உள்ளேயே இருக்கும் பெட்டிக்குள் விழுந்து விடுகிறது. கண்ணாடி வழியாக, ஓட்டளித்த சின்னத்தை வாக்காளர் தெளிவாக பார்க்க முடியும்.இதுபோதாது என்பதற்காக, அதே பெட்டியில் ஒரு, "எலக்ட்ரானிக் டிஸ்பிளே'யும் உள்ளது. பட்டனை அழுத்தி ஓட்டை பதிவு செய்தவுடன், அந்த டிஸ்பிளே திரையில், ஓட்டு அளிக்கப்பட்ட சின்னம் தெரிகிறது. ஆறு நொடிகளுக்கு, இந்த சின்னத்தை, வாக்காளர்கள் பார்த்துக் கொள்ள முடியும். இந்த சாதனம் மூலம், வாக்காளர்கள், தாங்கள் எந்த சின்னத்தில் ஓட்டுப் போட்டோம் என்பதை தெரிந்து கொள்வது மட்டுமின்றி, தான் போட்ட ஓட்டு குறிப்பிட்ட சின்னத்தில்தான் பதிவாகியுள்ளது என்பதையும், உறுதி செய்து கொள்ளலாம். இந்த முறையை, அரசியல் கட்சிகள் எல்லாம் ஏற்றுக் கொண்டன.

இந்த பிரின்டர் சாதனத்தை தயாரிக்கும் பொறுப்பை, பாரத் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனங்கள் ஏற்றுள்ளன. 2.5 லட்சம் சாதனங்கள் தயாரிக்க, போதுமான அவகாசம் வேண்டும் என, இந்நிறுவனங்கள் கேட்பதால், வரும் பொதுத்தேர்தலில், இந்த முறை நடைமுறைக்கு வருவது சந்தேகமே. ஆனாலும், எதிர்வரும் சட்டசபைத் தேர்தல்கள், இடைத் தேர்தல்களில் இந்த பிரின்டர் நடைமுறையை, சோதனை ஓட்டமாக அறிமுகம் செய்து பார்க்கவும், கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.- நமது டில்லி நிருபர் -


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.