சட்டசபையில் அறிவிக்கப்பட்டும் மீட்கப்படாத கோவில் நிலங்கள்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (13)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், சட்டசபை மானிய கோரிக்கை விவாதத்தின் போது, நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள், மீட்கப்பட்டதாக அப்போதைய அறநிலைய துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால், 15.6 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலங்கள் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.

நுங்கம்பாக்கம், வடக்கு வீதியில், அகஸ்தீஸ்வரர் - பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 1959ல், இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட இந்த கோவிலுக்கு சொந்தமாக, 20 ஏக்கர் நிலம் உள்ளது.

தனியாருக்கு விற்பனை:இதில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையை ஒட்டிய சொக்கட்டான் சாலையில், 10 கிரவுண்ட் (சர்வே எண்.451/1,452/1) நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் @காவில் வந்தபோது, தர்மகர்த்தாவாக இருந்தவர், 10 கிரவுண்ட் நிலங்களை, போலி பத்திரங்கள் மூலம், தனி நபர்கள் பலருக்கும் விற்றதாகவும், அவருக்கு கோவில் செயல் அலுவலர்களும் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட நெருக்கடியை தவிர்க்க, தர்மகர்த்தாவின் மனைவி, ""எனக்கும், இந்த பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,'' என, "நோட்டீஸ்' அடித்து, பகுதி முழுக்க வினியோகம் செய்தார். அப்போதும், அறநிலைய துறை அதிகாரிகள், இதில் கவனம் செலுத்தவில்லை.அறநிலைய துறைக்கு சொந்தமான இடங்களை குத்தகைக்கு எடுப்பதற்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆனால், சட்டத்திற்கு புறம்பான வகையில், கோவில் நிலங்கள், தர்மகர்த்தாவால் விற்கப்பட்டன.

அறநிலைய துறை தூக்கம்:புகார்களின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பின்னணியில், 2003ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியில், அப்போதைய அறநிலைய துறை அமைச்சர் சி.பி.ராமசாமி,

கோவிலுக்கு சொந்தமான நடைபாதையை அரசு மீட்டு விட்டதாக, சட்டசபையில் அறிவித்தார். ஆனால், இன்று வரை, அந்த நடைபாதை உட்பட கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் எதுவும் மீட்கப்படவில்லை. இது தொடர்பாக, அறநிலைய துறையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, கூறப்படுகிறது.

* கோவிலுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போர், யாரிடம் வாடகை கொடுக்கின்றனர், என்ன விதமான ஒப்பந்தம் செய்திருக்கின்றனர் உள்ளிட்ட விவரங்களும் அறநிலைய துறையிடம் இல்லை.
* கோவிலுக்கு சொந்தமான இடங்கள், போலி பட்டாக்கள் மூலம் விற்கப்பட்டுள்ளன என்பதை, 2010ல் அப்போதைய அறநிலைய துறை ஆணையர் ஒப்பு கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக, இந்து சமூக நல ஆர்வலர்கள், 2009, 2010, 2011ம் ஆண்டுகளில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்களில், இந்த தகவல்கள்அளிக்கப்பட்டு உள்ளன.இது குறித்து, 2011, பிப்., 2ம் தேதி நடைபெற்ற விசாரணையில், 451/1, 452/1 ஆகிய சர்வே எண்களில், ஆக்கிரமிப்பு உள்ளது என்றும், அவற்றை அகற்ற அறநிலைய துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தமிழ்நாடு தகவல் ஆணையம் உறுதிபட தெரிவித்துள்ளது.

ஆணையம் விசாரணை:இது குறித்து, 2011, பிப்., 2ம் தேதி நடைபெற்ற விசாரணையில், 451/1, 452/1 ஆகிய சர்வே எண்களில், ஆக்கிரமிப்பு உள்ளது என்றும், அவற்றை அகற்ற அறநிலைய துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தமிழ்நாடு தகவல் ஆணையம் உறுதிபட தெரிவித்துள்ளது.

"ஆக்கிரமிப்புகளை அகற்ற, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லாவிடில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்'

Advertisement

என, தமிழ்நாடு தகவல் ஆணையம் எச்சரித்தும் எவ்வித பலனும் ஏற்படவில்லை.தற்போது, ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில், மளிகை கடை, வீடுகள், மசூதி போன்றவை கட்டப்பட்டு உள்ளன. இவற்றிடம், மாநகராட்சி வரி வசூல் செய்து வருவது, குறிப்பிடத்தக்கது.

பக்தர்கள்கோரிக்கை:இதுகுறித்து, அகஸ்தீஸ்வரர் கோவில் பக்தர்கள் கூறியதாவது:கோவில் நிலங்களை முறைகேடாக விற்பனை செய்தோர் மீது, இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்றைய சந்தை மதிப்பில், 10 கிரவுண்ட் நிலம், பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகும். அதை மீட்டால், வாடகை மூலம் நல்ல வருமானம் வரும். அறநிலைய துறை மூலம், அதை கோவில்களுக்கு செலவழிக்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இன்றைய வழிகாட்டி மதிப்பின்படி, சொக்கட்டான் தெருவில், ஒரு சதுரடியின்மதிப்பு 6,500 ரூபாய் அந்த கணக்கின்படி, 10 கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு 15.6 கோடி ரூபாய். இதை மீட்டால், வாடகை மூலமாவது,கோவில் பராமரிப்பிற்கு நல்ல வருமானம் வரும் என்பது பக்தர்களின் கருத்தாக உள்ளது.அறநிலைய துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, பதில் அளிக்க மறுத்து விட்டனர்.

ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம்!இந்து சமய அறநிலைய துறை, கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட போதே, மின்சாரம், வருவாய், உள்ளாட்சி ஆகிய துறைகளுக்கு, முறைப்படி தகவல் தெரிவித்து, சர்ச்சைக்குரிய கட்டடங்களுக்கு எந்த இணைப்பும் வழங்க கூடாது என, அறிவுறுத்தி இருந்தால், துவக்கத்திலேயே இந்த பிரச்னை முடிவுக்கு வந்திருக்கும்.
மேலும், ஆக்கிரமிப்பாளர்கள், அடுத்தடுத்த நடவடிக்கைக்கு சென்றிருக்க வாய்ப்பில்லை. எனவே, இந்து சமய அறநிலைய துறை, மற்ற துறைகளோடு ஒருங்கிணைந்து செயல்படாததே, பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட காரணம். எனவே, இனிமேலாவது, மற்ற துறைகளோடு, இணைந்து செயல்பட்டு, வருவாய் இழப்பை தடுக்க வேண்டும்.

- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siddharth Chakvi - Chennai,இந்தியா
15-மே-201316:30:21 IST Report Abuse
Siddharth Chakvi சிவன் சொத்து குல நாசம்- ஆம் கோயில் சொத்துக்களை கொள்ளை அடிப்பவர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் இன்று சுகபோகமாக வாழ்வது போல்தான் தெரியும். ஆனால் அவர்கள் செய்யும் இந்த பாவம் அவர்களையும் அவர்களுடைய வாரிசுகளையும் பல விதங்களில் ஜென்மம் ஜென்மமாக விடாது. தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். செய்த பாவத்தை தொலைக்கலாம் என்றால் அடுத்தும எந்த பரிகாரமும் செய்ய வக்கில்லாமல் அவர்கள் பரம்பரையே சர்வ நாசம் ஆகிக்கொண்டே இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
11-மே-201322:19:55 IST Report Abuse
g.s,rajan ஏகப்பட்ட சொத்து பத்து இருந்த பல கடவுள்கள் நிரந்தர ஏழைகள் ஆகிவிட்டன ,பல கோயில்களில் ஒரு வேளைக்கு விளக்கு ஏற்றக்கூட எண்ணெய் இல்லாத அவல நிலை நீடிக்கிறது .கடவுளுக்கே இந்த நிலை என்றால் ,மற்றவர்களின் நிலை ?,கலிகாலம் எப்படி அவரையும் சோதிக்கிறது பாருங்கள்
Rate this:
Share this comment
Cancel
G.Kirubakaran - Doha,கத்தார்
11-மே-201312:30:50 IST Report Abuse
G.Kirubakaran முதல்வர் மிக சிறந்த சமய சொற்பொழிவு, வார வாரம் நடத்த உத்திரவிட்டுள்ளார். இந்த பணிக்கு வாடகையை உபயோகிக்கலாம். ஹிந்து சமய சொற்பொழிவாளர்கள் மிக குறைந்த வருமானத்தில் வாழ்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
11-மே-201312:18:04 IST Report Abuse
ANBE VAA J.P. கொடநாட்டின் மக்கள் பயன்படுத்தும் பொது பாதை ஆக்கிரமிப்பும் .,சிறுதாவூரின் நிலமும் இதில் அடங்குமா ?/
Rate this:
Share this comment
Cancel
B.SARAVANAN - cuddalore,இந்தியா
11-மே-201310:47:22 IST Report Abuse
B.SARAVANAN இதே போல பல கோயில் நிலங்கள் தமிழகத்தில் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. உதாரணமாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் தாலுக்கா கொல்லிமலை கீழ்பாதி அருள்மிகு சிவலோகநாதர் ஆலய சொத்துகளும் அதன் தர்மகர்த்தாவால் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது. பல புகார் மனுக்கள் அனுப்பி உள்ளோம். ஆனால் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் கவனிப்பார்களா ??....
Rate this:
Share this comment
Cancel
vijayan - Colombo,இலங்கை
11-மே-201309:56:35 IST Report Abuse
vijayan கடவுளுக்கும் நாம் தான் போராட வேண்டும், நோட் Mr ஹிந்து முன்னணி.....
Rate this:
Share this comment
Cancel
adithyan - chennai,இந்தியா
11-மே-201308:52:23 IST Report Abuse
adithyan சிவனே நிலமாக, நீராக, நெருப்பாக, காற்றாக, விண்ணாக இருக்கிறார். ஆனால் நமது அறநிலையத்துறையோ, இது தான் கோவில் நிலம் என்கிறது. சிலர் தங்கள் நிலத்தை சிவனுக்கு கோவிலுக்கு எழுதி வைக்கிறார்கள். எழுதி வைப்பவனுக்கோ அவனது முன்னோர்களுக்கோ அது எப்படி உரிமையானது? அரசன் நிலத்தை கொடுத்து அதில் வரும் நெல்லை கொண்டு மக்களின் பசியை தீர்த்தான். அந்த நிலத்தில் வரும் ஒரு பகுதியை தான் அந்த உழுபவனுக்கு உரிமை. நிலம் உரிமை அல்ல. எழுதி வைப்பவன் தனது நிலங்கள் எல்லாவற்றையும் எழுதி வைப்பதில்லை. ஒரு பகுதியையே. உலகத்தில் ஒரு சிவன் தான், ஒரு விநாயகர் தான், ஒரு சக்திதான், ஒரு முருகன் தான். எதாவது ஒரு இடத்தில் படைத்தாலே போதும். ஒரே ஊரில் எத்தனை விநாயகர் கோவில்கள்.சும்மா கிடைத்த நிலத்திற்கு வருவாய் இழப்பே கிடையாது. அது முதல் போட்டு வாங்கபட்டதல்ல, லாப நஷ்டம் பார்க்க. கோவிலில் உண்டியலில் எத்தனை வருமானம். பூசாரிகளுக்கு எவ்வளவு வருமானம். போலி டிக்கெட் விற்பனையில் எவ்வளவு வருமானம். ஆக வருமானத்திற்கு குறைவில்லை. கவர்னர் எத்தனை ஏக்கரில் குடியிருக்கிறார். அது தேவையா. காந்தி, காமராஜ், ராஜாஜி அவர்கள் எல்லாம் எளிமையானவர்கள். படாடோபத்தை விரும்பாதவர்கள். அவர்கள் நினைவிடங்கள் ஏக்கர் கணக்கில். கடவுள் சாப்பிடுவதில்லை. அந்த சூடான பிரசாதத்தில் இருந்து கிளம்பும் ஆவி தான் அவருக்கு. கடவுள் படைத்திருப்பதேல்லாம் மனிதனுக்கு தான். உலகத்தில் முதளிடாமல் பணம் சம்பாதிப்பது அறநிலையத்துறை ஒன்று தான். உண்டியலில் கிடக்கும் பணம் எவ்வளவு. அது எதற்கு போகிராது? திருட்டு டிக்கெட்டில் சம்பாதிப்பது எவ்வளவு. தஞ்சையில் எவ்வளவோ சிவன் விஷ்ணு கோவில்கள் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்கின்றன. அதனால் அந்த கோவில்கள் ஒன்றும் நாசமாகி விடவில்லை. அவர்கள் யாரையும் சபிக்கவுமில்லை. எத்தனை மந்திரிமார் கோவில் நிலங்களை அமுக்கி இருக்கிறார்கள்? சில அரசியல் வாதிகள், தங்கள் பேரில் உள்ள வழக்குகள் வெளியே வராமலேயே பார்த்து கொள்கிறார்கள்.
Rate this:
Share this comment
sethu - Chennai,இந்தியா
12-மே-201300:00:35 IST Report Abuse
sethuஅதுசரி நீங்க மக்களுக்கு பொதுவாக என்ன சொல்லவரிங்க என்பதை சுருக்கமாக சொன்னாலும் போதும் நன்றி ...
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-மே-201308:45:14 IST Report Abuse
kumaresan.m "சிவன் சொத்து குல நாசம் என்று சொல்வார்கள் ....ஆனால் இங்கே கடவுளக்கே அல்வா கொடுகிறார்கள் .....சாமியும் இவர்களை ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் உள்ளது "
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-மே-201308:42:53 IST Report Abuse
kumaresan.m தமிழ் நாட்டில் அரசு துறையில் அறநிலை துறை மட்டுமின்றி அனைத்து துறைகளும் இப்படிதான் இயங்குகிறது ...இது ஒரு உதாரணம் "
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-மே-201308:41:06 IST Report Abuse
Srinivasan Kannaiya ஒவ்வொரு துறையை சார்ந்தவர்கள் தனக்கு பணம் வந்தால் போதும் என்று கோயில் சொத்தை பங்கு போட்டு தின்று இருக்கிறார்கள்... அய்யா ஒன்று தெரிந்துகொள்ளுங்கள்...கோயில் சொத்து குல நாசம்.. அரசன் அன்றே கொல்லுவான்.. தெய்வம் நின்று கொல்லும்... உங்கள் சந்ததி விளங்காமல் .போகும்... நீங்களும் உருப்படாமல் போவீர்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.