மே. வங்க கவர்னர் நாராயணன் பழநி கோயிலில் சுவாமி தரிசனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மே. வங்க கவர்னர் நாராயணன் பழநி கோயிலில் சுவாமி தரிசனம்

Added : மே 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மே. வங்க கவர்னர் நாராயணன் பழநி கோயிலில் சுவாமி தரிசனம்

பழநி : பழநி மலைக்கோயிலில் மேற்கு வங்க கவர்னர் எம்.கே.நாராயணன் சுவாமி தரிசனம் செய்தார். போலீசார் குறித்து மூதாட்டி, புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கு வங்க கவர்னர் எம்.கே. நாராயணன், தனது மனைவி பத்மினியுடன், பழநி வந்தார். திண்டுக்கல் கலெக்டர் வெங்கடாசலம் வரவேற்றார். இணைக்கமிஷனர் பாஸ்கரன், கோயில் சார்பில் மரியாதை செய்தார். "ரோப்கார்' மூலம் மலைக்கோயிலுக்கு சென்ற கவர்னர், பகல் 12.45 மணிக்கு சுவாமி தரிசனம் செய்தார்.

பரபரப்பு: போகர் சன்னதியில் கவர்னர், சுவாமி தரிசனம் செய்யும்போது, 57 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, அவரிடம் பேச முயன்றார். பாதுகாப்பு காரணமாக, போலீசார் அனுமதிக்கவில்லை. ஆத்திரமடைந்த மூதாட்டி, போலீசாருடன் தகராறு செய்தார். அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

புகார்: வெளிப்பிரகாரம் படிப்பாதை நுழைவாயிலில் சுவாமி தரிசனம் செய்த கவர்னரிடம்,""தங்களை பார்க்க வந்தால் போலீசார் துரத்துகின்றனர்,'' எனப்புகார் கூறினார். சோனியாவை கேட்டதாக சொல்லவும் என தமிழில் கூறினார். கவர்னர் "ஒ.கே' என்றார். மூதாட்டி தனது பெயர், விலாசத்தை கூற மறுத்து விட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை