ராசியில்லாத ரயி்ல்வேதுறை: இதுவரை 4 ‌அமைச்சர்கள் பதவிவிலகல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராசியில்லாத ரயி்ல்வேதுறை: இதுவரை 4 ‌அமைச்சர்கள் பதவிவிலகல்

Updated : மே 11, 2013 | Added : மே 11, 2013 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : ரயில்வே துறை உறுப்பினர் ஒருவருக்கு பதவி உயர்வு குறித்து லஞ்சம் பெற்றது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் பன்சால் நேற்று பதவி விலகினார். இதனை தொடர்ந்து பதவி விலகும் நான்காவது அமைச்சர் பன்சால். கடந்த 2009.,ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமர்ந்த போது ரயில்வே அமைச்சராக மம்தா பதவி வகித்தார். மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலில் அவரது கட்சி வெற்றிபெற்றதை தொடர்ந்து இவர் பதவி விலகி மேற்கு வங்க முதல்வர் ஆனார், அவரது கட்சி சார்பில் தினேஷ் திவேதி ரயில்வே அமைச்சரானார், இவர் 2012 ரயில்வே பட்ஜெட்டில், ரயில் கட்டணங்களை உயர்த்தியதால் இவர் பதவி விலக நேர்ந்தது. இவரை தொடர்ந்து மம்தா கட்சியைச் சேர்ந்த முகுல் ராய் பதவி ஏற்றார், இந்நிலையில் இக்கூட்டணியில் இருந்து மம்தா பதவி விலகியதையடுத்து முகுல் ராய் பதவி விலக நேரிட்டது. முகுல் ராய்க்கு பிறகு கடந்த ஆண்டு அக்டோபரில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. இதில் பன்சாலுக்கு ரயில்துறை வழங்கப்பட்டது. இவர் மீது ஊழல் புகார் எழுந்தால் இவரும் பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் ராசியில்லாத ரயில்வே துறையில் பன்சாலை சேர்த்து நான்கு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
11-மே-201318:38:00 IST Report Abuse
Shaikh Miyakkhan இப்பொழுது கூட்டணில் இல்லாமே போய் விட்டோமே என்று யோரோ முனகுகின்ற சத்தம் கேட்கிறதே
Rate this:
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
11-மே-201313:06:21 IST Report Abuse
Divaharan ராசி இருந்தால் லஞ்சம் வாங்கலாமா?
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-மே-201313:03:01 IST Report Abuse
kumaresan.m "இது ராசியில்லா துறை என்று சொல்வது முற்றிலும் தவறானது. அரசியல்வாதிகள் செய்யும் தில்லு முள்ளுக்கு இந்த துறை எப்படி பொறுப்பாகும்? "....மாற்றி யோசியுங்கள், இத்துறையை நிர்வாகம் செய்ய இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளுக்கு நிர்வாக திறமையில்லை என்று கூறுங்கள் "
Rate this:
Share this comment
Cancel
prasad - tuticorin,இந்தியா
11-மே-201311:27:16 IST Report Abuse
prasad அடுத்த ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே ????
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
11-மே-201310:44:59 IST Report Abuse
amukkusaamy மதிப்பிற்குரிய காலம் சென்ற திரு லால் பகதூர் சாஸ்திரி முதல் இது தொடங்கிற்று. ஆனால் அவர் ஏற்றுகொண்டது நடந்த விபத்துக்கு தார்மீக பொறுப்பு . ஆனாலும், லல்லுவைப்போல புகழ் பெற்றவர் இந்த துறையில் இதுவரை இல்லை. (காரணம் அவரது முன்னோடி நிதிஷ் தீட்டிய திட்டங்கள்)
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-மே-201308:55:10 IST Report Abuse
Srinivasan Kannaiya ஒருவரை பார்த்து ஒருவர் நப்பாசை பட்டதின் விளைவுகள்..... என்ன செய்வது பெண்ணாசை,மண்ணாசை, பணத்தாசை யாரை விட்டது..
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
11-மே-201307:57:24 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி நல்ல நேரத்தில் இப்போது தி மு க ஆளும் கூட்டணியில் இல்லாமல் விலகி விட்டது என்பதை நினைக்கும் போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
11-மே-201305:19:02 IST Report Abuse
Skv லஞ்சம் வாங்கிட்டு பதவி விலக நேரிட்டால் அந்த துறையே ராசியில்லேன்னு ஆயுடுமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை