மும்பை: மும்பையில் நகரபேருந்தில் குண்டுவெடித்ததில் இருவர் காயமடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் உதாகீர் நகரில் இருந்து லாதூர் நோக்கி பயணிகள் பஸ் சென்று கொண்டிருந்தது. நலிகியான் பேருந்து நிறுத்தம் வந்த போது, டிரைவர் பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது டிரைவர் சீட்டிற்கு அடியில் வைக்கப்பட்டிருந்த ஒரு மர்ம பொருள் வெடித்தது.இதில் இருவர் காயமடைந்தனர். வெடித்தது வெடிகுண்டா என்பது குறித்து வெடிகுண்டு செயல்இழக்க செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். விசாரணை நடக்கிறது.