E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
சஞ்சய் தத் மறு ஆய்வு மனு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 மே
2013
04:31

புதுடில்லி:பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு விசேஷ கருணை காட்ட, சுப்ரீம் கோர்ட் நேற்று மறுத்து விட்டது.கடந்த, 1993ம் ஆண்டு, மும்பையில் நடந்த, தொடர் வெடிகுண்டு தாக்குதல் வழக்குடன் தொடர்புடைய, பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில், பாலிவுட் நடிகர், சஞ்சய் தத்திற்கு, 2006ம் ஆண்டு, "தடா' கோர்ட், ஆறு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

அதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், சஞ்சய் தத் தாக்கல் செய்திருந்த மனு மீது, கடந்த மார்ச், 21ம் தேதி சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், தண்டனை ஓராண்டு குறைக்கப்பட்டு, ஐந்தாண்டு தண்டனை உறுதியானது.ஏற்கனவே அவர், ஒன்றரை ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டதால், மீதமுள்ள, மூன்றரை ஆண்டு தண்டனை காலத்தை அனுபவிப்பதற்காக, கோர்ட்டில் சரணடைய, நடிகர் சஞ்சய் தத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதற்கிடையே, சிறை தண்டனை உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு, சுப்ரீம் கோர்ட்டில், சஞ்சய் தத் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு, ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்த, நீதிபதிகள், பி.சதாசிவம் மற்றும் பி.எஸ்.சவுகான் ஆகியோரை கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
சஞ்சய் தத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர். ஏற்கனவே, இதுபோல் மனு செய்திருந்த, மும்பை குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்புடைய, ஆறு குற்றவாளிகளின் மனுவை, சுப்ரீம் கோர்ட் முன்னரே நிராகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
"சுப்ரீம் கோர்ட் நேற்று பிறப்பித்த அதிரடி உத்தரவு, சஞ்சய் தத்திற்கு பேரிடியாக இறங்கிஉள்ளது.இது குறித்து, சஞ்சய்தத் வழக்குடன் தொடர்புடைய வழக்கறிஞர்கள் கூறும் போது, "சிறைக்கு செல்வதைத் தவிர, சஞ்சய் தத்திற்கு வேறு வழியில்லை; சுப்ரீம் கோர்ட் உத்தரவு, எதிர்பார்த்தது தான்' என்றனர்.சஞ்சய் தத்தின் தந்தை சுனில் தத்; தாயார் நர்கீஸ் தத். இருவரும் பாலிவுட் நடிகர்களே. சுனில் தத், பின்னர், காங்கிரஸ் எம்.பி.,யாகவும் இருந்தார்.
சஞ்சய் தத்தின் முதல் மனைவி ரிச்சா சர்மா மரணம் அடைந்து விட்டார். இரண்டாவது மனைவியான ரேகா பிள்ளையை விவாகரத்து செய்து விட்டார். மூன்றாவதாக, மான்யதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.


மேலும் கோர்ட் செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
11-மே-201308:13:48 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி மேல் முறையீடு, பெரியமனிதர்களின் தயவு, கருணை மனு என்ற எல்லா வழிகளும், அடைக்கப்பட்டு விட்டதா?
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.