,Ex-Pakistan PM Yousuf Raza Gilani seeks ISI's help to trace his kidnapped son | மகனை கண்டுபிடித்து தாருங்கள்: ஐ.எஸ்.ஐ.யிடம் கெஞ்சும் மாஜி பிரதமர்| Dinamalar

மகனை கண்டுபிடித்து தாருங்கள்: ஐ.எஸ்.ஐ.யிடம் கெஞ்சும் மாஜி பிரதமர்

Added : மே 11, 2013 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 மகனை கண்டுபிடித்து தாருங்கள்: ஐ.எஸ்.ஐ.யிடம் கெஞ்சும் மாஜி பிரதமர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ,கடத்திச் செல்லப்பட்ட தனது மகனை கண்டுபிடித்து தருமாறு ஐ.எஸ்.ஐ.யின் உதவியை நாடியுள்ளார் முன்னாள் பிரதமர் யுசுப்ராஸா கிலானி.

பாகிஸ்தானில் இன்று பலத்த பாதுகாப்புடன் பார்லிமென்ட் தேர்தல் நடக்கிறது. 342 தொகுதிகளுக்கான பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ளது. 8.6 கோடி மக்கள் ஓட்டளிக்க உள்ளனர். பார்லிமென்ட் தேர்தலுடன், நான்கு மாகாண தேர்தல்களும் நடைபெறுகின்றன.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சி, அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் மகன் பிலாவல் புட்டோ தலைவராக உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி, மாஜி கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின், தேரிக்-இ-இன்சாப் கட்சி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன.

இந்நிலையில் கடந்த 5-ம் தேதி (சனிக்கிழமை) , பாகிஸ்தானில் முல்தான் நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் பிரதமர் யுசுப்ராஸா கிலானியின் 27 வயது மகன் அலி ஹைதர் (27), 8 பேர் கொண்ட மர்ம கும்பலால் துப்பாக்கி முனையில் கடத்திச்செல்லப்பட்டார். இதுவரை அவர் குறித்த தகவல் இல்லை.

ஐ.எஸ்.ஐ. உதவி தேவை

இது தொடர்பாக கிலானி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பஞ்சாப் மாகணத்தைச் சேர்ந்த ‌‌தலிபான் ஆதரவாளர்கள் தான் கடத்திச்சென்றுள்ளனர். எனது மகன் குறித்த எந்த தகவலும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. , உளவு அமைப்பான ஐ..எஸ்.ஐ. தலையிட்டு அவன் இருக்குமிடத்தை கண்டுபிடித்து மீட்க வேண்டும். போலீசாரும் ஐ.எஸ்.ஐ.க்கு உதவிட வேண்டும் என்றார்.
போலீசார் தெரிவி்க்கையில், அலி ஹைதருக்கு , தடை செய்யப்பட்ட லெஷ்கர்-இ-ஜஹாங்வி, ஷிபா-இ-ஷபாபா என்ற பயங்கரவாத அமைப்புகள் ஏற்கனவே மிரட்டல் விடுத்தன. அவர்கள் தான் கடத்திச்சென்றிருக்க கூடும் என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mr y - thamizhnadu,இந்தியா
12-மே-201307:37:37 IST Report Abuse
Mr y என்னும் என்ன என்னென் னமோ அலம்பல்கள் அரங்கேறுமோ? இதுதான் ஆரம்பமோ? மதம் பிடித்த மனிதர்களின் வாழ்வில் இதுதான் ஆரம்பமோ? இல்லை முடிவும் இதுதான்...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-மே-201313:21:17 IST Report Abuse
Nallavan Nallavan திருட்டு நடக்க உதவியனிடமே போய், "திருடு போன பொருட்களை மீட்க உதவு" என்று வேண்டுகோள் வைக்கிறார்
Rate this:
Share this comment
Cancel
cku - tpr,இந்தியா
11-மே-201312:49:29 IST Report Abuse
cku நீங்கள் வளர்த்த தீவிரவாத பாம்புகள் உங்களை தான் திருப்பி கொத்தும் ....
Rate this:
Share this comment
Cancel
Hari - Chennai,இந்தியா
11-மே-201309:52:54 IST Report Abuse
Hari வினை விதைத்தவன் வினை தான் அறுப்பான்
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
11-மே-201309:00:55 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இவரது கட்சிக்கு தேர்தலில் ஆதரவு சுத்தமாக இல்லை...எனவே நம்ம ஊர் பாலிசியில் இவரே ஆளை வைத்து கடத்தி அனுதாப அலை தேட முயற்சிக்கிறார்..
Rate this:
Share this comment
B SIVASUBRAMANIYAN S B - chennai,இந்தியா
11-மே-201313:15:38 IST Report Abuse
B SIVASUBRAMANIYAN S Bபாகிஸ்தானில் முக்கியமாக ஆள் கடத்தும் வேலைகள், கொலை , கொள்ளை, போதை வஸ்துக்கள் கடத்தல், தீவிரவாத இயக்கங்களுக்கு பணம் பைசல் செய்தல் போன்ற தீய செயல்களை , தொடர்ந்து செய்து வருவது ஐ எஸ் ஐ தான். எனவே, இவர் ஐ எஸ் ஐ இடம் உதவி கேட்கிறார் என்றால் , நிச்சயம் ஏதோ ஒரு நாடகம் போல இருக்கிறது. எனவே சுலைமான்சொல்வது சரிபோல தோன்றுகிறது....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-மே-201308:50:02 IST Report Abuse
Srinivasan Kannaiya மாஜிக்கே இப்படி என்றால் சாதாரண குடிமகனுக்கு....
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
11-மே-201308:15:48 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்கவேண்டும் என்பது இதுதானா?
Rate this:
Share this comment
Cancel
Padmanaban - DC,யூ.எஸ்.ஏ
11-மே-201307:10:58 IST Report Abuse
Padmanaban இது வன்மையாக கண்டிக்க தக்கது, இது ஹிந்து தீவிர வாதிகளின் சதியாக தான் இருக்க வேண்டும்........எங்கே எனது காங்கிரஸ் மத்திய அமைச்சர்....அறிக்கைகள்................
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
11-மே-201305:09:45 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே ஒரு பக்கம் இது உண்மையாக இருந்தால் பாவமாக இருக்குது, ஆனால் பாகிஸ்தானையும் அங்கு வசிக்கும் எல்லோரையும் நம்பவே முடியவில்லையே. பல காங்கிரஸ்சும், தமிழக எட்டப்பனை போன்றோரும் செய்யும் வேலை மாதிரியும் இருக்கு, சுத்தமான அரசியல் சதுரங்கமோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை