"போஸ்கோ' நிறுவனத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு| Dinamalar

"போஸ்கோ' நிறுவனத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

Added : மே 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லிதென் கொரியாவின் பிரபல உருக்கு நிறுவனமான, "போஸ்கோ'வுக்கு எதிராக, ஒடிசா, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை, சுப்ரீம் கோர்ட் நேற்று, தள்ளுபடி செய்தது.
தென் கொரியாவைச் சேர்ந்த, பிரபல உருக்கு நிறுவனம், போஸ்கோ. இந்த நிறுவனத்துக்கு, ஒடிசா மாநில அரசு, இரும்புத் தாது வெட்டி எடுப்பதற்கான உரிமத்தை வழங்கியது. இதை எதிர்த்து, உரிமம் கிடைக்காத சில நிறுவனங்கள், அம்மாநில ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்தன.அதில், "போஸ்கோ நிறுவனத்துக்கு முன்னதாகவே, உரிமத்துக்காக, நாங்கள் விண்ணப்பித்தோம். ஆனால், விதிமுறைகளை மீறி, போஸ்கோ நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை விசாரித்த, ஐகோர்ட், போஸ்கோ நிறுவனத்துக்கு, ஒடிசா மாநில அரசு வழங்கிய உரிமத்தை ரத்து செய்தது. இதை எதிர்த்து, மாநில அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி, ஆர்.எம்.லோத்தா தலைமையிலான, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒடிசா ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்த, சுப்ரீம் கோர்ட், "இரும்புத் தாது வெட்டி எடுக்கும் விஷயத்தில், பல்வேறு நிறுவனங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் மற்றும் எதிர்ப்புகளை அடிப்படையாக வைத்து, சரியான முடிவை எடுக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, உத்தரவு பிறப்பித்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை