ம.பி., சட்டசபை தேர்தல் முதல்வர் வேட்பாளராகிறார் ஜோதிராதித்ய சிந்தியா| Dinamalar

ம.பி., சட்டசபை தேர்தல் முதல்வர் வேட்பாளராகிறார் ஜோதிராதித்ய சிந்தியா

Added : மே 11, 2013
Advertisement

போபால்மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக, மத்திய அமைச்சர், ஜோதிராதித்ய சிந்தியா அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
மத்திய பிரதேசத்தில், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடைசியாக நடந்த இரண்டு சட்டசபை தேர்தல்களிலும், பா.ஜ.,வே, வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்த சில மாதங்களில், இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
மேலிடம் தீவிரம்"எப்படியும், இந்த முறை ஆட்சியை பிடித்து விட வேண்டும்' என்பதில், காங்கிரஸ் மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது. காங்., பொதுச் செயலர், திக்விஜய் சிங், மாநில காங்., தலைவர், காந்திலால் புரியா, மத்திய மின் துறை அமைச்சர், ஜோதிராதித்ய சிந்தியா போன்ற, பிரபலமான தலைவர்கள், ம.பி., மாநில காங்கிரசில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
மன்னர் குடும்பம் சட்டசபை தேர்தலில், காங்., வெற்றி பெற்றால், "யார் முதல்வர்' என்பதில், இவர்களுக்கு இடையே, இப்போதே போட்டி அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில், மத்திய அமைச்சர், ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள், தீவிரமாக உள்ளனர்.இவரது ஆதரவாளர்கள், சமீபத்தில் டில்லி சென்று, "ம.பி., சட்டசபை தேர்தலில், சிந்தியாவைத் தான், முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என, மேலிட தலைவர்களிடம் வலியுறுத்தினர். சிந்தியா, பிரபலமான, குவாலியர் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை, முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த, காங்., தலைவருமான, மாதவ் ராவ் சிந்தியா. இதனால், ம.பி.,யில், சிந்தியாவுக்கு, மக்கள் செல்வாக்கும் அதிகம் உள்ளது.
ஆனாலும், ம.பி., முன்னாள், காங்., முதல்வரான, திக்விஜய் சிங், சிந்தியாவுக்கு, கடும் போட்டியாகவும், சவாலாகவும் இருந்து வருகிறார். "சிந்தியா தான், முதல்வர் வேட்பாளருக்கு தகுதியானவர்' என, திக் விஜய் சிங், சமீபத்தில் தெரிவித்தார். ஆனால், முதல்வர் பதவியை பெற வேண்டும் என்பதற்காக, மறைமுகமாக, காய் நகர்த்தி வருகிறார்.
ம.பி., மாநில காங்., தலைவர், காந்திலால் புரியா, சட்டசபை காங்., எதிர்க்கட்சி தலைவர், அஜய் சிங் ஆகியோரும், முதல்வர் வேட்பாளராவதற்காக, தங்களின் ஆதரவாளர்களை முடுக்கி விட்டுள்ளனர். இதுகுறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது
மக்கள் செல்வாக்கும.பி., மாநில காங்கிரசில், மூத்த தலைவர்கள் பலர் இருந்தாலும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு, மக்கள் செல்வாக்கும், கட்சி தொண்டர்கள் செல்வாக்கும் அதிகம் உள்ளது. பா.ஜ., தலைவரும், முதல்வருமான, சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு உள்ள, செல்வாக்கை தகர்ப்பதற்கு, ஜோதிராதித்ய சிந்தியா தான், சரியான நபராக இருப்பார். எனவே, வரும், சட்டசபை தேர்தலில், சிந்தியாவை, முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதற்கான வாய்ப்பு, அதிகம் உள்ளது.இவ்வாறு, காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை