டில்லியில் மாணவி சுட்டுக்கொலை| Dinamalar

டில்லியில் மாணவி சுட்டுக்கொலை

Added : மே 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லிடில்லியில், பள்ளி மாணவியை மர்ம நபர் சுட்டுக் கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாணவியின் வீட்டுக்குள் புகுந்து, சரமாரியாக சுட்டுக் கொன்றவனை போலீசார் தேடி வருகின்றனர்.

டில்லி, முன்ரிகா பகுதியில், பெற்றோருடன் வசித்து வந்தவர், பிங்கி. பிளஸ் 2 படிக்கும் இவர், நேற்று காலை, வீட்டில் இருந்த போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், துப்பாக்கியால், மாணவியை சரமாரியாக சுட்டான்.இதில், மார்பில் குண்டுகள் பாய்ந்து, சுருண்டு விழுந்த மாணவி, பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் நடந்தபோது, மாணவியின் உறவுக்கார பெண், வீட்டில் இருந்துள்ளார். அவர், அந்த மர்ம நபரை விரட்டிச் சென்ற போது, அவன் தப்பி ஓடி விட்டான்.இது குறித்து, மாணவியின் தந்தை கூறும் போது, "எங்களது தூரத்து உறவினர் ஒருவன் தான், இந்த கொடுமையை செய்திருக்க வேண்டும். அவன் தான் அடிக்கடி, என் மகளை பின்தொடர்ந்து, தொந்தரவு செய்து வந்துள்ளான்' என்றார்.அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை