ஆந்திரா, மேற்கு வங்கத்தில் புதிய துறைமுகங்களுக்கு "ஓகே'| Dinamalar

ஆந்திரா, மேற்கு வங்கத்தில் புதிய துறைமுகங்களுக்கு "ஓகே'

Added : மே 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லிமேற்கு வங்கம் மற்றும் ஆந்திராவில், 15,820 கோடி ரூபாய் செலவில், இரண்டு புதிய துறைமுகங்கள் அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை குழு கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறியதாவது:
மேற்கு வங்கத்தில், ஆண்டுக்கு, 5.4 கோடி டன் சரக்குகளை கையாளும் வகையில், 7,820 கோடி ரூபாய் செலவில், புதிய துறைமுகம் ஒன்று கட்டப்படும். அதேபோல், ஆந்திராவிலும், 5 கோடி டன் சரக்குகளை கையாளும் வகையில், 8,000 கோடி ரூபாய் செலவில், துறைமுகம் கட்டப்படும்.
இந்த புதிய துறைமுகங்கள், "இந்திய துறைமுகங்கள் சட்டம், 1908'ன்படி, பெரிய துறைமுகங்கள் என, அறிவிக்கப்படும். அதனால், இவை, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும். சிறிய துறைமுகங்கள் எல்லாம், மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.
இந்த பெரிய துறைமுகங்கள் எல்லாம், தனியார் துறை மற்றும் பொதுத் துறை பங்களிப்புடன் உருவாக்கப்படும்.சென்னை எண்ணூர் துறைமுகத்தில், 50 லட்சம் டன் திறன் கொண்ட, திரவ எரிõயு இறக்குமதி முனையம் அமைப்பதற்கான, நிலக் குத்தகை ஒப்பந்தத்திற்கும், மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.இவ்வாறு அமைச்சர் திவாரி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை