Advertisement
எல்.கே.ஜி., வகுப்புகள் துவங்க திட்டம்; அமைச்சர் தகவல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: ""அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்புகள் துவங்குவது குறித்து, தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார்.சட்டசபையில், நேற்று பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம்:

தே.மு.தி.க., - சுபா: கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு மூலம், பணியிட மாறுதல் வழங்குவதில்லை. மற்ற துறை ஆசிரியர்களைப்போல், அவர்களுக்கும், கலந்தாய்வு நடத்தி, பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.


வைகைச்செல்வன் - பள்ளிக்கல்வி அமைச்சர்: இந்த கோரிக்கையை, அரசு பரிசீலனை செய்து வருகிறது. விரைவில், நடவடிக்கை எடுக்கப்படும்.


சுபா: தனியார் பள்ளிகளில், கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில், மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது. அரசு விதிமுறைகளுக்கு மாறாக செயல்படும் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களை, மழலையர் பள்ளிகளாக மாற்றி, அங்குள்ள குழந்தைகளுக்கு, ஆங்கிலவழி கல்வியை வழங்க, அரசு முன்வர வேண்டும்.


அமைச்சர்: எல்.கே.ஜி., வகுப்புகளை துவங்க வேண்டும் என, எம்.எல்.ஏ., கூறுகிறார். இது, நல்ல ஆலோசனை. இத்திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது.


சுபா: ஆசிரியர் தகுதித் தேர்வில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு தேர்வர்களுக்கு, தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும். மாநில அரசுகள், இந்த தகுதி மதிப்பெண்களை குறைத்துக்கொள்ளலாம் என, தேசிய ஆசிரியர் கல்விக் குழுவும் தெரிவித்துள்ளது.


அமைச்சர்: தரமான ஆசிரியர்களை நியமனம் செய்தால் தான், தரமான கல்வியை, மாணவர்களுக்கு வழங்க முடியும். எனவே, 60 சதவீத மதிப்பெண்களை, தகுதித்தேர்வில் பெற வேண்டும் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுபா: தேசிய குழந்தைகள் நல உரிமை ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்கா, பள்ளிகளில், பாலியல் குற்றங்களை தடுக்க, பள்ளிகள் தோறும், புகார் பெட்டிகள் அமைக்க வேண்டும் என, தெரிவித்திருந்தார். இந்த விஷயத்தில், அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?


அமைச்சர்: பள்ளிகளில், புகார் புத்தகங்கள் உள்ளன. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவரை, "சஸ்பெண்ட்' செய்யாமல், "டிஸ்மிஸ்' நடவடிக்கையே எடுக்கிறோம்.


முதல்வர் ஜெயலலிதா: பள்ளிகள்தோறும், "சைல்டு ஹெல்ப் லைன்' என்ற திட்டத்தின் மூலம், தொலைபேசி சேவை, ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது. இது, கட்டணமில்லா தொலைபேசி. மாணவர்கள், இதில் புகார் செய்தால், உடனே, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுப்பர். இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.