கர்நாடகா: புதிய முதல்வராக சித்தராமையா: திங்கள் கிழமை பதவியேற்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லிபெங்களூரில் நேற்று நடந்த, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவரான, சித்தராமையா, 64, கர்நாடகாவின் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, வரும் திங்கள்கிழமை அவர் பதவியேற்கிறார்.
கர்நாடகாவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ., படு தோல்வியை சந்தித்தது. மொத்தம், 224 உறுப்பினர்கள் அடங்கிய, சட்டசபையில், 121 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன், காங்கிரஸ், மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்:இதையடுத்து, கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதை முடிவு செய்வதில், காங்., மூத்த தலைவர்களிடையே, கடும் போட்டி நிலவியது. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட, மாநில காங்., தலைவரான, பரமேஸ்வரா, எதிர்பாராத வகையில், தேர்தலில் தோல்வி அடைந்தார்.இதனால், மத்திய அமைச்சர், மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர், சித்தராமையா ஆகியோரிடையே, முதல்வர் பதவியை பிடிப்பதில், கடும் போட்டி நிலவியது. அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்காக, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், நேற்று, பெங்களூரில் நடந்தது.
ராணுவ அமைச்சர், அந்தோணி தலைமையில், மேலிட பார்வையாளர்களும், இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். முதல்வரை தேர்வு செய்வதில், சித்தராமையா, கார்கே ஆதரவாளர்களுக்கு இடையே, கருத்து வேறுபாடு எழுந்தது.இதையடுத்து, "ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி, அதில், யாருக்கு அதிக ஓட்டுகள் கிடைக்கிறதோ, அவரை, முதல்வராக தேர்வு செய்வது' என, காங்., மேலிட தலைவர்கள் முடிவு செய்தனர்.
காங்., சார்பில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட, 121 எம்.எல்.ஏ.,க்களும், ஓட்டளித்தனர்.இதில், அதிக ஓட்டுகளை பெற்ற, சித்தராமையா, காங்., சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக, 80 எம்.எல்.ஏ.,க்களும், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவாக, 40 எம்.எல்.ஏ.,க்களும், ஓட்டளித்ததாக, காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து, கர்நாடகாவின் அடுத்த முதல்வராக, நாளை மறுநாள், சித்தராமையா பதவியேற்கவுள்ளார். கவர்னர் மாளிகையில் நடக்கும் விழாவில், கவர்னர் பரத்வாஜ், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
வக்கீல் முதல் முதல்வர் வரை... மைசூரு மாவட்டம், வருண ஹப்ளி அருகேஉள்ள சித்தரமனகுண்டு என்ற இடத்தில், 1948 ஆகஸ்ட், 12ல் பிறந்தவர் சித்தராமையா. இவருக்கு பார்வதி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். கர்நாடகாவில், மூன்றாவது இடத்தில் உள்ள, குருபா சமூகத்தை சேர்ந்தவர். ஆரம்பத்தில், வக்கீல் தொழில் செய்தார்.அரசியலில் நுழைந்ததும், 1983ல் சாமுண்டீஸ்வரி தொகுதியில், பாரதிய லோக் தளம் சார்பில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., ஆனார். அப்போது ஆளும் கட்சியாக இருந்த ஜனதாவில் இணைந்தார்.
1985ல், நடந்த இடைத்தேர்தலில், அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, கால்நடை துறை அமைச்சரானார். 1989ல் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தலைவர், ராஜசேகரமூர்த்திக்கு எதிராக, ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு தோற்றார்.கடந்த, 1992ல் ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டார். 1994 சட்டசபை தேர்தலுக்குப் பின், தேவகவுடா தலைமையிலான, ஜனதா தள ஆட்சியில், நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1996ல் ஜே.எச்.படேல் முதல்வராக இருந்த போது, துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜனதா தளம் பிளவுபட்ட போது, இவர் மதச் சார்பற்ற ஜனதா தளம் (தேவ கவுடா) பிரிவில் சேர்ந்து, அக்கட்சியின் மாநிலத் தலைவரானார். 2004ல் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இணைந்து நடத்திய ஆட்சியில், தரம் சிங் முதல்வராகவும், இவர் துணை முதல்வராகவும் இருந்தார்.தேவகவுடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 2006ல், காங்கிரசில் இணைந்தார். அப்போது நடந்த இடைத்தேர்தலில், சாமுண்டீஸ்வரி தொகுதியில், 257 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்