Advertisement
ப்ளஸ் 2 மாணவர் தற்கொலை மாணவிகள் இருவருக்கு சிகிச்சை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வெளியான ப்ளஸ் 2 தேர்வில், மதிப்பெண் குறைவாக எடுத்த காரணத்தால், ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இரு மாணவிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.ஈரோடு, வெண்டிபாளையம் அருகே கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்த சேகர் மகன் சந்தோஷ், 18. இவர் ஈரோடு கார்மல் மெட்ரிக் பள்ளியில் ப்ளஸ் 2 படித்தார். நேற்று முன்தினம் வெளியான தேர்வு முடிவில், இவர் இரு பாடத்தில் தேர்ச்சி பெறாததால், விரக்தியில் இருந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரம், பெல்ட்டால் கழுத்தை இருக்கி, தற்கொலை செய்து கொண்டார். தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர். இதேபோல், ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் அருகே குட்டப்பாளையம், புதுக்காலனியை சேர்ந்த வீரசாமி மகள் பவித்ரா, 18. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ப்ளஸ் 2 படித்தார். நேற்று முன்தினம் வெளியான ப்ளஸ் தேர்வில், பவித்ரா, 600 மார்க் எடுத்திருந்தார். மனமுடைந்த பவித்ரா, வீட்டில் யாருமில்லாத சமயத்தில், விஷமருந்தை மண்ணெண்ணெயில் கலக்கி குடித்து மயங்கினார். ஈரோடு, அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மொடக்குறிச்சி போலீஸார் விசாரிக்கின்றனர். ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே வருத்தியாபாளையத்தை சேர்ந்த மதிவாணனின் மகள் மணிசர்மதி, 18. ப்ளஸ் 2 தேர்வில் மார்க் குறைவாக எடுத்த காரணத்தால், வீட்டில்யாருமில்லாத சமயத்தில் அரளி விதையை கடித்து துப்பியதில் மயங்கி கிடந்தார்.ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடுமுடி போலீஸார் விசாரிக்கின்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.