சம்பத் நகரில் தார் ரோடு போடும் பணி ஓராண்டுக்குப்பின் மக்களுக்கு விடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சம்பத் நகரில் தார் ரோடு போடும் பணி ஓராண்டுக்குப்பின் மக்களுக்கு விடிவு

Added : மே 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஈரோடு: மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த, ஓராண்டு இழுபறிக்கு பின், கரடு முரடான சம்பத் நகர் மெயின் ரோட்டினை புதுப்பிக்கும் பணிகளை துவக்கியுள்ளனர்.போக்குவரத்து நெரிசல் மிக்க ரோடு என்பதால், 10 நாட்களில் விரைந்து பணிகள் முடிக்கப்படும், என துணை மேயர் பழனிச்சாமி தெரிவித்தார்.ஈரோடு மாநகராட்சி, சம்பத் நகர், 22வது வார்டில், அடுக்கு மாடி வீடுகளும், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளும் உள்ளன. கலெக்டர், எஸ்.பி., நீதிபதிகள் வீடுகள் உள்ளிட்ட அரசுத்துறை ஊழியர்களே பெரும்பாலும் வசிக்கின்றனர்.வீடுகளை தவிர, கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், உழவர் சந்தை இங்கு அமைந்துள்ளன. டூவீலர், கார், கனரக வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால், மெயின் ரோட்டினை, 80 அடி அகலத்துக்கு அமைத்துள்ளனர்.கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் முன், மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக ரோட்டின் இரண்டு புறமும் குழி தோண்டினர். தவிர, குறுக்கு சாலைகளில் குழாய் பதிக்க குழி தோண்டினர். பணிகள் முடிந்து மண் கொட்டி மூடியபின், மேற்பகுதியில் தார் போடாததால் கரடுமுரடாக மாறியது.வாகனங்கள் செல்ல சிரமமும், அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வந்தது. நீண்ட இழுபறிக்கு பின், மாநகராட்சியில், ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, சாலை புதுப்பிக்க, கடந்த மாதம் பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் பூமி பூஜை செய்து வைத்தார். இதனை அடுத்து தற்போது தார்ரோடு போடும் பணிகள் துவங்கியுள்ளது.இதுகுறித்து துணைமேயர் பழனிச்சாமி கூறியதாவது:சம்பத் நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்ததால், தற்போது தார்ரோடு போடும் பணிகள் துவங்கியுள்ளது. 80 அடி ரோடு, குறுக்கு சாலை என திட்டம் பெரியதாக உள்ளதால், திட்ட மதிப்பீடு, ஒரு கோடி ரூபாய் ஆகும்.தற்போது நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் நடந்து வருகிறது. வாகன போக்குவரத்து அதிகம் என்பதால், பாதி வழித்தடத்தை வாகனங்கள் செல்ல விட்டு, பணிகளை செய்து வருகின்றனர். 10 நாட்களில் விரைந்து பணியை முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது, என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை