காப்புக்காட்டுக்குள் சாலைகள் அமைப்பு நடவடிக்கை எடுப்பதாக டி.எஃப்.ஓ., உறுதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காப்புக்காட்டுக்குள் சாலைகள் அமைப்பு நடவடிக்கை எடுப்பதாக டி.எஃப்.ஓ., உறுதி

Added : மே 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடந்த சில மாதத்துக்கு முன், புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக நடந்த, புலிகள் காப்பக சுற்றளவு கணக்கெடுப்பில், அதிக புலிகளையும், அதிகமான அடர்த்தி கொண்ட வனப்பகுதியான கடம்பூர், பரவட்டா வனப்பகுதி புலிகள் காப்பக முதல் பகுதியாக தேர்வு செய்யப்பட்டது. இப்பகுதி காப்புக்காடுகளாக உள்ளது.இந்த வனப்பகுதிக்கு அருகே, பொதுமக்கள் வசிக்கும் இடங்களும் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், வன பாதுகாவலராக அருண் இருந்தார். அப்போது, பரவட்டா வனப்பகுதிக்குள், சிலர் அத்துமீறி ஆக்ரமித்து, சாலைப்பணிகள் நடத்துவதாக தகவல் கிடைத்தது. நேரில் சென்று விசாரித்த வனபாதுகாவலர் அருண், சாலை அமைக்கும் பணியை செய்யக்கூடாது, என உத்தரவிட்டார்.இந்நிலையில், மீண்டும் கடந்த வாரம் சனிக்கிழமை டிராக்டர் உதவியுடன், 500 மீட்டர் அளவுக்கு வனப்பகுதியை அழித்து, 12 அடி அளவுள்ள சாலை போட முயற்சி நடந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர், ரோடு போடும் பணியை தடுத்தனர்.இந்நிலையில் நேற்று, டிராக்டர் உதவியுடன், காப்புக்காட்டுக்குள் அத்துமீறி சாலை போடப்பட்டுள்ளது.இதுபற்றி, சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் கூறியதாவது:பரவட்டா பகுதியில், அத்துமீறி நுழைந்து சாலைப்பணிகள் நடத்த முடியாது. அப்பகுதியைச் சேர்ந்த அங்கணன் மற்றும் பிரகாஷ் ஆகியோருக்கு ஏற்கனவே இடத்தகராறு இருந்து வந்தது. இதனால், இருவரும், வனப்பகுதியை ஆக்ரமித்து சாலை பணிகள் செய்வதாக மாறி, மாறி புகார் தெரிவித்து, வனத்துறையினரை குழப்புகின்றனர்.அப்பகுதியில் சாலைப்பணிகள் நடந்திருந்தால், ஆக்ரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.இதுபற்றி, பிரகாஷ் கூறியதாவது:எனக்கும், அங்கணனுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. எங்கள் பிரச்னையை நாங்களே தீர்த்துக்கொள்வோம். ஆனால், அத்துமீறி சாலை அமைக்கும் தகவல் வனத்துறையினருக்கு தெரிந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபற்றி, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை