ஈரோடு மாவட்ட அரசு இசைப் பள்ளி கோடை இலவச பயிற்சி நிறைவு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு மாவட்ட அரசு இசைப் பள்ளி கோடை இலவச பயிற்சி நிறைவு விழா

Added : மே 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஈரோடு: ஈரோடு அரசு இசைப்பள்ளியில், 10 நாள் கோடைகால இலவச பயிற்சி வகுப்புகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. பயிற்சி முடித்த மாணவர்களுக்கு, கலெக்டர் சண்முகம் சான்றுகளை வழங்கினார்.ஈரோடு சம்பத் நகரில், தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை, அரசு இசைப்பள்ளி உள்ளது. பாட்டு, இசை, பரதம் என பல்வேறு கலைகள் இலவசமாக கற்றுத்தருகின்றனர்.பள்ளித்தேர்வுகள் முடிந்து விடுமுறையை பயனுள்ளதாக்கிட, மத்திய அரசின் ஜவஹர் சிறுவர் மன்றத்தின் சார்பில், ஐந்து முதல், 15 வயதுக்கு உட்பட்டவருக்கு குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், யோகா ஆகிய கோடைகால இலவச பயிற்சி வகுப்புகள், கடந்த மே, ஒன்றாம் தேதி துவங்கி, நேற்றுடன் நிறைவு பெற்றது.நேற்று காலை அரசு இசைப்பள்ளியன் முன்புறம் திறந்த வெளியில், நிறைவு விழா நிகழ்ச்சி நடந்தது.இசைப்பள்ளி முதல்வர் சத்தியமூர்த்தி வரவேற்றார். ஈரோடு உதவி அஞ்சம் அலுவலர் சிவசுப்பிரமணியம், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி பேராசியை கீர்த்தி ஆகியோர் பேசினர்.கலெக்டர் சண்முகம், மாணவர்களுக்கு சான்றுகளை வழங்கி பேசியதாவது:அரசு இசைப்பள்ளியில் இலவசமாக மாணவர்களுக்கு இசை கற்றுத்தரப்படும். யோகாக்கலையில் உள்வாங்குதலும், வெளியிடுவதும் இன்று உங்களுக்கு பலனை தராது. இவை எதிர்காலத்தில் பலனை தரக்கூடியதாகும்.எங்கோ ஏற்படும் சிறிய தாக்கம், வேறு ஒரு இடத்தில் பேரலை மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை, பல சம்பவங்களில் நாம் அறிந்துள்ளோம். அதுபோல, நீங்கள் இங்குகற்ற இக்கலைகள், உங்களுக்கு நல்ல அலைகளை ஏற்படுத்தும், என்றார்.நிறைவு நாள் விழாவில், கோடை இலவச பயிற்சி முடித்த, 87 பேர், ஓராண்டு பயிற்சியை முடித்த, 50 மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டது.மேலும், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை