கேமிராவின் மூலம் காணும் உலகமே தனி...-முகமது ரபி| Dinamalar

கேமிராவின் மூலம் காணும் உலகமே தனி...-முகமது ரபி

Added : மே 12, 2013 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

முகமது ரபி.

வடலூரில் பிறந்து, நெய்வேலியில் படித்து வளர்ந்தவர்.தற்போது புதுச்சேரியில் உள்ள "ஹாங்கர் 17 'என்ற நிறுவனத்தில் கம்ப்யூட்டர் வரைகலை நிபுணராக உள்ளார்.

இவருக்கு சிறு வயது முதலே புகைப்படங்கள் மீது காதல் உண்டு.

நண்பர்கள் வைத்திருக்கும் கேமிராக்களைக் கொண்டு அவ்வப்போது படங்கள் எடுத்துவந்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்தான் சொந்தமாக "கேனன் கேமிரா செட்' வாங்கினார்.
அதன்பிறகு விடுமுறை விட்டால் போதும் கேமிராவை எடுத்துக்கொண்டு படம் எடுக்க கிளம்பிவிடுவார்.

புகைப்படம் எடுப்பது இவருக்கு பொழுதுபோக்கு மட்டுமே.
கொஞ்ச காலம் போட்டோ ஆல்பம் டிசைனராக பணிபுரிந்ததில், வித்தியாசமான
புகைப்படங்களைப் பற்றி தெரிந்து கொண்டார், மேலும் "கலர் கரெக்ஷன்' பற்றியும் புரிந்து கொண்டார்.
இதன் காரணமாக இவர் எடுக்கும் படங்களில் தேவைக்கு ஏற்ப, இவர் செய்யும் சின்ன, சின்ன கரெக்ஷன் காரணமாக படங்கள் தனித்துவம் பெற்று நிற்கின்றது.
"புதுச்சேரி போட்டோகிராபி கிளப் 'என்ற அமைப்பின் மூலம் குழுவாக சென்று படம் எடுப்பது, எடுத்த படங்களை பற்றி விவாதிப்பது, பின் அந்த படங்களை "முகநூலில்' பகிர்ந்து கொள்வது என்று எப்போதும் சுறு, சுறுப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறார்.
நாம் கண்ணால் காணும் உலகம் வேறு, கேமிராவின் மூலம் காணும் உலகம் வேறு என்பதை புரிந்து கொண்டபின், எனது புகைப்படங்களை எப்படி வித்தியாசப்படுத்துவது என்பதில் தீவிரமாய் இருக்கிறேன்.
சர்வதேச அளவில் புகைப்படம் தொடர்பான சமூக வலைத்தளத்தில் இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இன்னமும் நிறைய படங்கள் எடுக்கவேண்டும், நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளார், வாழ்த்துக்கள்.
முகமது ரபியுடன் தொடர்பு கொண்டு பேச: 9843576850.
முக்கிய குறிப்பு: முகமது ரபி எடுத்த போட்டோக்களை பார்வையிட சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியை பார்க்கவும்.

- எல்.முருகராஜ்

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jothi - PUDUCHERRY,இந்தியா
17-மே-201318:00:00 IST Report Abuse
Jothi வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
Lenin - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-மே-201309:49:47 IST Report Abuse
Lenin லெனின் - Neyveli - I have seen his picture through FB... i know one day this guy will stand out ... extradinory pictures.. good job... rafeee....
Rate this:
Share this comment
Mohamed rafi - Pondicherry,இந்தியா
28-டிச-201312:35:31 IST Report Abuse
Mohamed rafiநீங்கள் கூறியது போலவே நிகழ்ந்தது நண்பரே இந்த வருட சிறந்த கருப்பு & வெள்ளை படத்தில் என் படமும் ஒன்று உலகளவில் ...வாழ்த்தியமைக்கு நன்றி இந்த கானொளியில் என் புகைப்படம் ://news.yahoo.com/video/2013-flickr-203807459.html...
Rate this:
Share this comment
Cancel
Mohammed Azeez - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-மே-201306:32:31 IST Report Abuse
Mohammed Azeez சூப்பர் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X