துபாய் போலீசாருக்கு அதி நவீன கார்கள்| Dinamalar

துபாய் போலீசாருக்கு அதி நவீன கார்கள்

Updated : மே 18, 2013 | Added : மே 18, 2013 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

துபாய்:உலகின், "ஸ்டைலான போலீஸ்' என்றால் அது துபாய் போலீஸ்தான், என்று கூறும் வகையில், அதிநவீன சூப்பர் கார்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.செல்வந்தர்கள் மிகுந்த துபாய் நாட்டின் போலீசாருக்கு, "பெராரி, லம்போர்கினி' போன்ற சூப்பர் கார்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. தற்போது அந்த வரிசையில், பிரிட்டனின் ஆடம்பர கார்களான, "ஆஸ்டின் மார்ட்டின், பென்ட்லே, மெர்சிடிஸ் பென்ஸ்' வகை கார்களும் இணைந்துள்ளன. இதனால், உலகின் மிகவும், "ஆடம்பர போலீஸ்' என, துபாய் போலீஸ் துறை அழைக்கப்படுகிறது.துபாய் பெண் போலீசார் பயணம் செய்ய, "பெராரி எப்எப் சூப்பர் கார்' வழங்கப்படுவதாக, அந்நாட்டின், போலீஸ் தலைவர், தாஹி கால்பான் தெரிவித்துள்ளார். மணிக்கு, 335 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய இந்தக் காரின் மதிப்பு, 2.5 கோடியாகும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sakthivel habshan abudhabi - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-மே-201300:45:20 IST Report Abuse
  sakthivel habshan abudhabi உலகின் அதிசயிக்கத்தக்க நாடு என்றால் அது துபாய்தான் .இது உண்மை ,இந்த உண்மை அந்த நாட்டில் வாழ்ந்தவர்களுக்குத்தான் தெரியும் ....
Rate this:
Share this comment
Cancel
Mathi Raja - ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
18-மே-201322:34:31 IST Report Abuse
Mathi Raja ரொம்ப மரியாதையான போலிஸ் மற்றும் போலிஸ் அதிகாரிகள் இவர்கள். அதனால் இவர்களுக்கு 2.5 கோடியை காட்டிலும் அதிக விலை உள்ள கார் கொடுக்கலாம்.நம்ம ஊரு போலிஸ்களுக்கு இந்த காரு ஒத்து வராது.
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
18-மே-201321:50:58 IST Report Abuse
amukkusaamy பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் கிடைக்கும் ஒழிசல் ஊராகி விட்டது துபாய். பாலஸ்தீனியர்களை கொன்றவர்களை கண்டுபிடிக்க முடியாதவர்கள். அங்கு சென்று காணாமல் போகிற பெண்களை கண்டுபிடிக்க முடியாதவர்கள். விபச்சாரம் அங்கு மூடி மறைக்கப்பட்டிருக்கிறது. உலகின் அத்தனை தாதாக்களுக்கும் அங்கு வீடு இருக்கிறது. பாகிஸ்தானின் முஷாரபிற்கு அடைக்கலம் கொடுத்தவர்கள். தாவூதின் மாளிகைக்கு எவ்வளவு பாதுகாப்பு தெரியுமா? ATM ல் பல லட்சம் திராம் கொள்ளையடிக்கப்பட்டது இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சாராயம் ஆறாக ஓடுகிறது. அராபியர்கள் பெண்களின் ஆட்டம் கண்டுகளிக்க தனி இடங்கள். எல்லாவிதமான சீரழிவையும் நான் நேரில் அங்கு கண்டவன். அபுதாபி மட்டும் இல்லையென்றால் இவர்கள் கதி அவ்வளவுதான். ஒரு கேரளா நண்பர் அவரது மனைவிக்கு முன்பு வேலை செய்த நிறுவனத்திலிருந்து தொலைபேசியில் தொல்லைகொடுத்த ஒரு பாகிஸ்தானியை பற்றி போலீசில் கொடுத்த புகாருக்கு என்ன சொன்னார்கள் தெரியுமா? உன் மனைவியின் தொலைபேசி என்னை மாற்றிவிடு. இல்லை அவனை கூப்பிட்டு விசாரிக்க வேண்டும் என்றால் உன் மனைவியை நாங்கள் விசாரிக்க வேண்டி வரும் என்றார்கள். வாயை மூடிக்கொண்டு வந்து சேர்ந்தார் நண்பர். இவர்கள் எந்தக் காரில் போனால் என்ன?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை