earning is the husband's duty: mumbai Judge | சம்பாதிப்பது கணவனின் கடமை : மும்பை நீதிபதி அதிரடி உத்தரவு| Dinamalar

சம்பாதிப்பது கணவனின் கடமை : மும்பை நீதிபதி அதிரடி உத்தரவு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
 சம்பாதிப்பது கணவனின் கடமை :  மும்பை நீதிபதி அதிரடி உத்தரவு

மும்பை: சம்பாதித்து, மனைவி, குழந்தைகளை காப்பாற்றுவது தான், கணவர்களின் கடமை. அதைச் செய்யத் தவறிய கணவன், தன் மனைவிக்கு பராமரிப்பு செலவுக்கான தொகையை கொடுத்து தான் ஆக வேண்டும்,'' என, மும்பை ஐகோர்ட் நீதிபதி, எம்.எல்.தகிலியானி உத்தரவிட்டுள்ளார்.
மகேஷ் என்பவரின் மனைவி சசி. மும்பையில் வசிக்கும் இருவருக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்கின்றனர். கடந்த, 2012ம் ஆண்டில், தனக்கு மாதம், 1,500 ரூபாயும், தன், 1 வயது குழந்தைக்கு, மாதம் தோறும், 1,000 ரூபாயும், பராமரிப்பு செலவாக வழங்க, கணவருக்கு உத்தரவிட வேண்டும் என, குடும்ப நல கோர்ட்டில், சசி வழக்கு தொடர்ந்தார்.அதைக் கேட்ட கோர்ட், மாதம் தோறும், 1,500 ரூபாய் கொடுக்க, மகேஷுக்கு உத்தரவிட்டது.
"குழந்தை சிறு குழந்தையாக இருப்பதால், அதிகம் சாப்பிடாது. எனவே, அதற்காக தனி பராமரிப்பு செலவு கொடுக்கத் தேவையில்லை' என, குடும்ப நல கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, அந்தப் பெண், மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு, பல அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ள நீதிபதி, எம்.எல்.தகிலியானி முன், விசாரணைக்கு வந்தது."மகேஷ் வேலையில்லாமல் இருப்பதால், மாதம் தோறும், 1,500 ரூபாய் கொடுக்க முடியாத நிலையில் உள்ளார். இதில், கூடுதலாக, 1,000 ரூபாய் கேட்பது நியாயமல்ல' என, அவரின் வழக்கறிஞர் வாதிட்டார்.நீதிபதி தகிலியானி, தன் உத்தரவில், நேற்று கூறியதாவது:சம்பாதித்து, மனைவி, குழந்தைகளை காப்பாற்றுவது தான் கணவரின் கடமை. சம்பாதிக்காமல் இருப்பதும், வேலையில்லாமல் இருப்பதும், மனைவியின் குற்றமல்ல; கணவனின் குற்றம். இதற்காக, தகுந்த வேலை பார்ப்பது, கணவனின் பொறுப்பு. அதை, மகேஷ் செய்யத் தவறிவிட்டார்.எனவே, குடும்ப நல கோர்ட் உத்தரவிட்டபடி, சசிக்கு, மாதம், 1,500 ரூபாயும், அவர்களின் குழந்தைக்கு, மாதம், 1,000 ரூபாயும் பராமரிப்பு செலவாக கொடுக்க வேண்டும். இந்தத் தொகையை, 2012ம் ஆண்டிலிருந்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி தன் உத்தரவில் கூறியிருந்தார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (48)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karunamoorthy R - Virudhunagar,இந்தியா
23-மே-201316:12:39 IST Report Abuse
Karunamoorthy R இது இந்த சூழ்நிலைக்கான தீர்ப்பு..ரூபாய் 1500 கூட சம்பாதிக்க தெரியாதவன்..ஏன் இந்த உலகில் வாழ வேண்டும்?
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
23-மே-201316:06:19 IST Report Abuse
T.C.MAHENDRAN ஆண்களுக்கு இணையாக பெண்களும் அனைத்துத்துறைகளிலும் முன்னேறி வரும் காலத்தில் இப்படி ஒரு சொதப்பலான தீர்ப்பா ?
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
23-மே-201316:04:24 IST Report Abuse
T.C.MAHENDRAN சம்பாதிப்பது கணவனின் கடமை ,ஆனால் செலவழிப்பதும் , அனுபவிப்பதும் மனைவியின் கடமையா ?
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
23-மே-201316:01:56 IST Report Abuse
T.C.MAHENDRAN இந்த ஜட்ஜ் நிச்சயம் ஒரு பொண்டாட்டி தாசனாகத்தான் இருப்பார். சரியான தொடை நடுங்கி பேர்வழி .
Rate this:
Share this comment
Cancel
msramkrish - Trichy,இந்தியா
23-மே-201314:58:58 IST Report Abuse
msramkrish நீதிபதி தீர்ப்பு கொடுக்குமுன் பெண்கள் எல்லோரும் ஒரே வகை மற்றும் நிலை என்று நினைத்துவிட்டார் போலும். தீர்ப்போடு எந்த சூழ்நிலையில் தீர்ப்பு அப்படி கொடுக்க வேண்டும் அல்லது குறுக்கப்பட்டது என்பதையும் சேர்த்திருக்க வேண்டும். சிரம படுவோர் யாராயினும் துணை என்னும் நிலையிலிருப்போர் உதவுவது கடமை. ஆனால் அது இரு புறமும் பொருந்தும். சமநிலை என்பது அனைத்திலும், அனைவருக்கும் பொருந்த வேண்டும். இது அந்த காலமும் இல்லை, அனைத்து பெண்களும் அந்த கால பெண்களுமில்லை, ஒரு சிலரை தவிர பெரும்பாலான பெண்கள் நிலையே வேறு, அவர்கள் செய்யும் அநியாயங்கள் கொஞ்ச நஞ்சமல்ல, தீர்ப்பு கொடுக்கும்போது நீதிபதி அந்த குறிப்பிட்ட பெண்ணின் நிலை மட்டும் எண்ணி கொடுத்திருப்பார் போலும். இதையே உதாரணமாக கொண்டு முரன்பட்டோரும், முரண்படுவோரும் தவறாக உபயோகிக்காமல் இருந்தால் நன்று.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
23-மே-201314:47:16 IST Report Abuse
Nallavan Nallavan பல வாசகர்கள், பங்கு கேட்கும் அந்தப் பெண்ணைக் குறை கூறியுள்ளனர் ..... நீதிபதியையும் பரிகசித்துள்ளனர் ..... நமது இந்தியச் சமூகத்தில் ( தொன்று தொட்டு ) குடும்பத்திற்காக வருமானம் ஈட்டுதல் கணவனுடைய கடமையாகவும், குடும்பம் பேணுதல், குழந்தைகள் பெற்றால் அவற்றைப் பேணுதல் பெண்ணின் கடமையாகவும் இருந்து வருகிறது ...... சில காரணங்களுக்காக மனைவியைப் பிரிந்து வாழ்ந்தாலும் அந்தக் குழந்தை இவனுடையதுதானே? அதை மாற்ற முடியாதே. வேலை இல்லை என்ற காரணத்தால் அவர்களைப் பராமரிப்பின்றி விட்டு விட முடியுமா? ( நான் ஆணாதிக்க வாதியோ, பெண்ணாதிக்க வாதியோ அல்லன் )
Rate this:
Share this comment
Cancel
23-மே-201314:27:10 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் மறைந்த பழைய நடிகை பத்மப் பிரியாவிடம் அவரது கணவர் ஜீவனாம்சம் கேட்டு வாங்கிய தீர்ப்பு நினைவுக்கு வருகிறது
Rate this:
Share this comment
Cancel
sundararaman - chennai,இந்தியா
23-மே-201314:18:55 IST Report Abuse
sundararaman வர வர இந்த நாட்டுல ஆம்பளைங்க சுதந்திரமா சுத்த முடியாது போலிருக்கே
Rate this:
Share this comment
Cancel
sumaithangi - chennai,இந்தியா
23-மே-201314:16:49 IST Report Abuse
sumaithangi தீர்ப்பு சொல்லும் போது நீதி அரசருக்கு அவரின் மனைவி ஞாபத்துக்கு வந்து இருப்பங்களோ ........
Rate this:
Share this comment
Cancel
ராசா... - Tamilnadu,இந்தியா
23-மே-201313:44:25 IST Report Abuse
ராசா... பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.