amma scheme | "அம்மா' திட்ட முகாமில் ஒரே நாளில் 347 மனுக்களுக்கு உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"அம்மா' திட்ட முகாமில் ஒரே நாளில் 347 மனுக்களுக்கு உத்தரவு

Added : மே 23, 2013
Advertisement

பிள்ளையப்பம்பாளையத்தில் நடந்த "அம்மா' திட்ட முகாமில், ஒரே நாளில் 347 மனுக்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டது.
தமிழக அரசின் "அம்மா' திட்ட முகாம் வாரம் ஒரு ஊராட்சியில் நடக்கிறது. பிள்ளையப்பம்பாளையத்தில் நடந்த முகாமில், ரேஷன் கார்டு, இலவச வீட்டு மனைப்பட்டா, ஜாதி, வருமான சான்று, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 529 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 347 மனுக்களுக்கு உடனே உரிய <உத்தரவு வழங்கப்பட்டது. 182 மனுக்கள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளன. சேர்மன் கண்ணம்மாள் முன்னிலை வகித்தார்.


முகாமில் தாசில்தார் சம்பத் பேசுகையில், ""அன்னூர் தாலுகாவில், "அம்மா' திட்ட முகாம் இதுவரை ஒன்பது ஊராட்சிகளில் நடந்துள்ளது. முகாம்களில் 3,954 மனுக்கள் பெறப்பட்டு, அதே நாளில் 2,016 மனுக்களுக்கு உரிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. முகாம் குறித்து முன்னதாகவே, ஊருக்குள் துண்டு பிரசுரம் மற்றும் தண்டோரா மூலம் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றார்.


எம்.எல்.ஏ., கருப்பசாமி வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கி பேசுகையில்,""அவிநாசி தாலுகாவில் வறட்சி நிவாரணமாக 66 ஆயிரத்து 591 விவசாயிகளுக்கு, 16 கோடியே 69 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அன்னூர் தாலுகா அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் பெறப்படுகிறது,'' என்றார்.


ஊராட்சி தலைவர் ராணி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், எம்.எல்.ஏ.,விடம் கூறுகையில்,""பிள்ளையப்பம்பாளையம் நடுநிலைப்பள்ளி துவக்கப்பட்டு, 60 ஆண்டுகள் ஆகி விட்டது. அன்னூர் வட்டாரத்திலேயே இப்பள்ளியில்தான் அதிகபட்சமாக 281 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரமுயர்த்த அரசு நிர்ணயித்த தொகையை செலுத்தி, இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது. இதுவரை தரம் உயர்த்தவில்லை. விரைவில் தரம் உயர்த்தி கிராமப்புற மாணவர்கள் பயன்பெற உதவ வேண்டும்,' என்றனர்.


""இது குறித்து கல்வி அமைச்சரிடம் தெரிவிக்கிறேன்,'' என, எம்.எல்.ஏ., கருப்பசாமி தெரிவித்தார்.


முகாமில், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை