agri news | "பண்ணை குட்டை அமைத்தால் 100 சதவீதம் மானியம் பெறலாம்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"பண்ணை குட்டை அமைத்தால் 100 சதவீதம் மானியம் பெறலாம்'

Added : மே 23, 2013
Advertisement

"பண்ணை குட்டை அமைக்கும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படும்,' என வேளாண் துறை அறிவித்துள்ளது.
அன்னூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணராஜன் வெளிட்டுள்ள அறிக்கை:


நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், பருவ மழை குறைவை சமாளிக்கவும், ஒவ்வொரு ஊராட்சியிலும், பண்ணை குட்டைகள் அமைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அன்னூர் வட்டாரத்தில் ஒரு பேரூராட்சி மற்றும் 21 ஊராட்சிகளில், ஒரு ஊராட்சிக்கு மூன்று வீதம் 66 பண்ணை குட்டைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


100 அடி நீளம், 100 அடி அகலம் மற்றும் ஐந்து அடி ஆழத்துடன் பண்ணை குட்டை அமைக்க வேண்டும். இதற்கு அரசு 100 சதவீதம் மானியம் அளிக்கிறது. பண்ணை குட்டை அமைப்பதால், சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மழை நீர் வீணாகாது. விவசாய பரப்பு அதிகரிக்கும். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பண்ணை குட்டை அமைக்க விரும்பும் விவசாயிகள் அன்னூர் வேளாண் விரிவாக்க மையத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். சிறு, குறு விவசாயிகள் மற்றும் முதலில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X