நெஞ்சு வலியிலும் ரயிலை பாதுகாப்பாக நிறுத்திய டிரைவர் : மாரடைப்பால் இறந்த பரிதாபம் | நெஞ்சு வலியிலும் ரயிலை பாதுகாப்பாக நிறுத்திய டிரைவர் : மாரடைப்பால் இறந்த பரிதாபம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெஞ்சு வலியிலும் ரயிலை பாதுகாப்பாக நிறுத்திய டிரைவர் : மாரடைப்பால் இறந்த பரிதாபம்

Updated : மே 25, 2013 | Added : மே 24, 2013 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
நெஞ்சு வலியிலும் ரயிலை பாதுகாப்பாக நிறுத்திய டிரைவர் : மாரடைப்பால் இறந்த பரிதாபம்

சென்னை: கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு, புறநகர் மின்சார ரயிலை இயக்கிய டிரைவருக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியை தாங்கிக் கொண்டு, ரயிலை பாதுகாப்பாக நிறுத்தியதால், பயணிகள் உயிர் தப்பினர்; ஆனால், டிரைவர் மாரடைப்பால் இறந்தது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புறநகர் ரயில்கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் ரயில் நிலையத்திற்கு, நேற்று முன்தினம் மாலை, 3:40 மணிக்கு புறநகர் மின்சார ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலை, நெமிலிச்சேரியை சேர்ந்த டிரைவர் மனோகர், 48, இயக்கினார். ரயிலில், 1,300 பயணிகள் இருந்தனர்.கும்மிடிப்பூண்டி - கவரைப்பேட்டை இடையே ரயில் வந்து கொண்டிருந்த போது, டிரைவர் மனோகருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, துடித்தார். கடும் வலி இருந்தாலும், ரயிலை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, ரயில் முகப்பில் உள்ள எமர்ஜென்சி விளக்குகளை ஒளிர விட்டார். இதன் மூலம், எதிரில் வரும் ரயிலின் டிரைவரின் உதவி பெற, "சிக்னல்' செய்து விட்டு, இருக்கையில் மயங்கியபடி சாய்ந்தார்.

மயங்கிய நிலையில்நடுவழியில் ரயில் நின்றதை அறிந்த ரயில் கார்டு பார்த்திபன், பெட்டியிலிருந்து இறங்கி வந்து டிரைவரை பார்த்த போது, அவர் வலியால் துடித்தபடி, டிரைவர் கேபினில், மயங்கிய நிலையில் இருந்தது தெரிய வந்தது.அப்போது, சென்னை சென்ட்ரலில் இருந்து, கும்மிடிப் பூண்டி நோக்கி சென்ற மின்சார ரயிலை இயக்கிய டிரைவர் பாலசந்திரன், அடுத்த ரயில் பாதையில் நின்ற மின்சார ரயிலில், எமர்ஜென்சி விளக்கு ஒளிர்வதைப் பார்த்து ரயிலை நிறுத்தி, அந்த ரயிலுக்கு ஓடினார்.

ஆம்புலன்ஸ்:அங்கு, டிரைவர் மனோகரின் உடல் நிலை குறித்து, கார்டிடம் விசாரித்தார். உடனடியாக, "108' ஆம்புலன்”க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் டிரைவர் பாலசந்திரன், டிரைவர் மனோகரால் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயிலை இயக்கி, கவரைப்பேட்டை கொண்டு சென்று நிறுத்தினார். டிரைவர் மனோகர் உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.டிரைவரின் உடல், அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருக்கு, அகில இந்திய ரயில் டிரைவர்கள் சங்கம் சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஓய்வில்லாததால் உயிரிழப்பா?டிரைவர் மனோகர், 22ம் தேதி இரவு, 9:00 மணியில் இருந்து, 23ம் தேதி காலை, 6:00 மணி வரை ரயிலை இயக்கியுள்ளார். அதன் பிறகு, அதே நாள் காலை, 9:30 மணிக்கு மீண்டும் பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தான், நெஞ்சு வலி ஏற்பட்டு துடித்துள்ளார். அவர் ஓய்வில்லாமல் உழைத்தது தான், இறப்புக்கு காரணம் என, ஊழியர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

கூடுதல் பணி ஏன்?: ரயில் டிரைவர்கள், சில சமயங்களில், தொடர்ச்சியாக, 13 மணி நேரம் வரை கூட பணி புரிய வேண்டி உள்ளது. ரயில் டிரைவர் பணி நேரத்தை, 6 மணி நேரமாகக் குறைக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, அகில இந்திய ரயில் டிரைவர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது. ஆனால், காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அதற்கு மாறாக, பணியில் இருக்கும் டிரைவர்களை வைத்து, ரயில்களை இயக்குவதிலேயே அதிகாரிகள் குறியாக உள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
IYAPPAN - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-மே-201311:34:31 IST Report Abuse
IYAPPAN நாப்பது ஐம்பது வயதை தாண்டிவிட்டால் கொலஸ்ட்ரால் ,சுகர் செக் செய்யே வேண்டும் . கடைசி நேரத்திலும் தனது கடமை செய்ய தவறாதே உங்களை தலை வணங்குகின்றேன்
Rate this:
Share this comment
Cancel
திருமகள்கேள்வன் - chennai,இந்தியா
25-மே-201311:24:31 IST Report Abuse
திருமகள்கேள்வன் முதலில் ஒவ்வொரு ரயில் வண்டியிலும் ஓட்டுனர் காபினில் முதல் உதவி பெட்டி என்பதை பேருக்கு வைக்காமல் அதில் அவரச காலத்திற்கு தேவையான மாத்திரை மருந்துகள்(மாரடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள்) ... நேரடியாக அம்புலன்சை தொடர்புகொள்ளும் வசதியுடன் கூடிய தொலைபேசி.. ஆக்சிஜன் நிறைதுள்ள சிலிண்டர் மற்றும் மாசக் போன்றவை கட்டாயமாக இருத்தல் அவசியம்... ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகளை அழைத்துசெல்லும் இவர்களின் உயிருக்கு பாதுகாப்புக்கு ரயில்வே நிர்வாகமே பொறுப்பு ஏற்க்க வேண்டும்... தன உயிரைவிட பலபேரின் உயிருக்கு மதிப்பளித்த உத்தமனின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பானாக... இவரின் குடும்பத்தாருக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள்...
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
25-மே-201311:06:01 IST Report Abuse
mirudan அமரான ஆனா மனோகர், 48 வயது தான் அலுவலக பணி போன்று டிரைவர் / நடத்துனர் பணியை கருத முடியாது. அலுவலக பணி போன்று பணி நேரத்தையும் வரையிருக்க முடியாதது ரயில்வே துறை நல்ல ஊழியம் கொடுக்கிறது போனஸ் என்று இரண்டு மூன்று மாத ஊழியத்தை கொடுக்கிறது இவர் தன உடல் நலத்தை சரியாக கவனிக்க வில்லை என்று நன்றாக தெரிகிறது ? அறிவாலயம் c / o போயஸ் - Chennai,இந்தியா அவர்கள் பகிர்ந்து கொண்ட பாதுகாப்பு அம்சம் இவரையும் இதில் பயணம் செய்ய மக்களையும் காப்பாற்றி இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
Tamilarasu Rajakkili - jeddah,சவுதி அரேபியா
25-மே-201310:51:17 IST Report Abuse
Tamilarasu Rajakkili வாசகர்கள் வெறும் புகழாரங்கள்...வெறும் கை முலம் போடுவதை போல் தான்... இது போன்ற தியாக மனப்பான்மை இருப்பவர்கள் மிகக் குறைவாகவே காணப்படுவார்கள்... இவரின் குடும்பத்தை அரசாங்கம் சீர்தூக்கிப்பார்க்கவேண்டும் வாசகர்களும்.. சக ஊழியர்களும் அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Durai selvaraju - Al Mangaf,குவைத்
25-மே-201310:50:14 IST Report Abuse
Durai selvaraju தன்னுயிர் பிரியும் வேலையிலும் மக்களின் உயிரைக் காத்த கடமை வீரர்..திரு.மனோகரன் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன். காலமெல்லாம் அந்தவழியில் பயணம் செய்பவர்களின் நெஞ்சங்களில் திரு.மனோகரன்....நிரந்தரமாக வாழ்வார்...
Rate this:
Share this comment
Cancel
YESUDOSS. M - BANGALORE,இந்தியா
25-மே-201310:40:38 IST Report Abuse
YESUDOSS. M உங்கள் பேரன்ன்மைக்கு தலை வணங்குகிறோம். உங்கள் சந்ததியை இறைவன் ஆசிர்வதிபராக.
Rate this:
Share this comment
Cancel
govind - Muscat,இந்தியா
25-மே-201310:29:21 IST Report Abuse
govind என்ன இழப்பீடு கொடுத்தாலும் இவர் உயிர் போல் ஆகுமா...? என்னுடன் பனி புரிந்த பெண்ணின் தந்தை இது போல் டிரைவர். வீட்டுக்கு வருவதே அபூர்வம் என்று கூறி உள்ளார்.. இது போன்ற பணிகளில் சுமையை குறைப்பது மிக மிக முக்கியம். இனியாவது ரயில்வே துறை கண் விழிக்குமா..?
Rate this:
Share this comment
Cancel
Aysme Ranganathan - Erode,இந்தியா
25-மே-201310:08:44 IST Report Abuse
Aysme Ranganathan Maranathilum Vaallum manithan, aatha Shanthi adaiya prarthikkiren..
Rate this:
Share this comment
Cancel
jasmine banu - madras,இந்தியா
25-மே-201309:50:18 IST Report Abuse
jasmine banu இவரின் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதபவங்கள். இவர் பணி செய்து கொண்டு இருக்கும் போதே தன் உயிர் போனதாலும், பணி சுமை அதிகமாக கொடுத்ததின் காரணமாக இப்படி சம்பவம் நேந்த தாலும், கண்டிப்பாக நம் அரசு இவர் குடும்பத்துக்கு நல்ல ஒரு நிவாரண நிதி அளிப்பதோடு, அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி தர வேண்டும். கண்டிப்பாக அடுத்த முறை இப்படி ஒரு சம்பவம் நேராமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
25-மே-201309:33:54 IST Report Abuse
p.manimaran உங்கள் சேவையை நான் மனதார பாராட்டுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை