இளம் பெண் தற்கொலை: கணவர் குடும்பத்தினருக்கு சிறை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இளம் பெண் தற்கொலை: கணவர் குடும்பத்தினருக்கு சிறை

Added : ஜூன் 09, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோவை: இளம்பெண் தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கணவர், அவரது தம்பிகள் உள்ளிட்ட மூவருக்கு, தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், மாமியாருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனையும் வழங்கி, கோவை மகளிர் கேர்ட் தீர்ப்பளித்தது.
சேலம், ஆத்தூரைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி, 26. இவருக்கும், கோவை ரத்தினபுரியில் மளிகை கடை நடத்தும் செல்வகுமாருக்கும், கடந்த 2003ல் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. சில ஆண்டுகளில், தனி குடித்தனம் செல்ல வேண்டும் என, கணவரிடம் உமா கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த கணவர் குடும்பத்தினர், "தனி குடித்தனம் செல்ல வேண்டுமென்றால், பெற்றோரிடம் நகை மற்றும் ரொக்கம் வாங்கி வர வேண்டும்' என்று வற்புறுத்தினர். மனமுடைந்த உமா மகேஸ்வரி, 2007, ஆக., 23ம் தேதி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவில் சந்தேகம் அடைந்த இவரது சகோதரர் வெள்ளை விநாயகம், கோவை போலீசில் புகார் செய்தார். ரத்தினபுரி போலீசார் விசாரித்து, இளம் பெண் சாவுக்கு காரணம் என, குற்றம் சாட்டப்பட்ட கணவர் செல்வகுமார், மாமியார் பார்வதி, கணவரின் சகோதரர்கள் செல்வராஜ், ஜெயராஜ் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கு, கோவை மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் சரோஜினி ஆஜரானார். 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், குற்றம் சாட்டப்பட்ட கணவர் மற்றும் அவரது தம்பிகள் இருவருக்கும், தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்தார். மாமியார் பார்வதிக்கு ஆறு மாதம் சிறையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து, தீர்ப்பு கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை