மனைவியுடன் உறவு கொள்ளாத கணவன் விவாகரத்தை உறுதி செய்தது ஐகோர்ட்| Dinamalar

மனைவியுடன் உறவு கொள்ளாத கணவன் விவாகரத்தை உறுதி செய்தது ஐகோர்ட்

Added : ஜூன் 10, 2013 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொச்சி:திருமணம் முடிந்து, மூன்றாண்டுகளாக, "செக்ஸ்' உறவு வைத்துக் கொள்ளாத கணவரிடம் இருந்து மனைவி பெற்ற விவாகரத்தை, கேரள ஐகோர்ட் உறுதி செய்தது.
கேரள மாநிலம், ஆலப்புழாவை சேர்ந்தவர், சஞ்ஜன். நான்கு ஆண்டுகளுக்கு முன், முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்தார். சஞ்ஜனின் மனைவி, கணவர் தன்னுடன், செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில்லை எனக் கூறி, குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி, வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த, நீதிபதி, இருவருக்கும் விவாகரத்து வழங்கினார். இதை எதிர்த்து, அந்த நபர், கேரள ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
முஸ்லிம் திருமண சட்டப்படி, கோர்ட்டில் விவாகரத்து பெற்றது செல்லாது எனக் கூறி, மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த, நீதிபதி, பி.டி.ராஜன் தலைமையிலான பெஞ்ச், சஞ்ஜனின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, குடும்ப நல கோர்ட்டின் தீர்ப்பையும் உறுதி செய்தது.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: திருமணத்திற்குப் பின், மனைவியின் தேவைகளை பூர்த்தி செய்யாமல், குடும்ப பொறுப்புகளை ஏற்காமல் இருந்தால், அந்த திருமணத்தை ரத்து செய்யலாம் என, முஸ்லிம் திருமணச் சட்டம் தெரிவிக்கிறது. மனைவியின் விருப்பத்திற்குப் பிறகும், செக்ஸ் வைத்துக் கொள்ளாதது, குற்றச்செயலாகும். இதனால், அந்த பெண்ணுக்கு, உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சஞ்ஜனின் மனுவை தள்ளுபடி செய்வதோடு, குடும்ப நல கோர்ட் கொடுத்த தீர்ப்பை, உறுதி செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள், தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mano - milan,இத்தாலி
10-ஜூன்-201313:50:20 IST Report Abuse
mano கணவனுடன் உறவு கொள்ளாத மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்குமா நீதிமன்றம்? தனக்கு விருப்பமில்லை என்று சொல்லிக்கொண்டு எந்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் மனைவி வாழலாம். இல்லையேல் விருப்பமில்லாத உடலுறவை கற்பழிப்பாக கருதி கணவருக்கு இதே நீதி மன்றங்கள் தண்டனை வழங்கும். என்னடா உங்க சட்டம்?
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
10-ஜூன்-201306:57:56 IST Report Abuse
ஆரூர் ரங ரொம்ப முக்கியம்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-ஜூன்-201305:24:52 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ எதுக்குதான் கல்யாணம் பண்ணிக்கிட்டே ? காசுக்கா அல்லது தோசைக்கா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை