அடர்ந்த காட்டில் ஆபத்தான பயணம்! பாதுகாப்பில்லாத கோவை குற்றாலம்| Dinamalar

தமிழ்நாடு

அடர்ந்த காட்டில் ஆபத்தான பயணம்! பாதுகாப்பில்லாத கோவை குற்றாலம்

Added : ஜூன் 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 அடர்ந்த காட்டில் ஆபத்தான பயணம்!  பாதுகாப்பில்லாத கோவை குற்றாலம்

பேரூர்:கோவை குற்றாலம் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வனத்துறை செய்யவில்லை; அடர்ந்த காட்டில் பயணித்தால், வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது.கடந்த ஆண்டு, தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவமழை பொய்த்துபோனதால், கோவை குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து முற்றிலும் நின்று போனது. இதையடுத்து, கடந்த மார்ச் 6ல் அருவி மூடப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, சிறுவாணி நீர்ப்பிடிப்பு, மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. இதனால், கோவை குற்றால அருவிக்கு நீர்வரத்து துவங்கியுள்ளது. இதன் காரணமாக, கோவை குற்றாலம் அருவி, கடந்த 3ம் தேதி திறக்கப்பட்டது. இதனால், அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குடும்பத்தோடும், நண்பர்களோடும் வயதானோர் முதல் குழந்தைகள் வரை ஆர்வத்துடன் அருவிக்கு வந்து, குளித்துவிட்டுச் செல்கின்றனர். தற்போது அருவிக்கு குறைவான தண்ணீர் வரத்தே உள்ளது. பருவமழை தீவிரமடைந்தால்தான், அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.கேள்விக்குறியாகிய பாதுகாப்பு?: அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் செக்போஸ்ட் அருகே தடுத்து நிறுத்தப்பட்டு, பெரியவருக்கு ரூ. 50, சிறியவருக்கு ரூ. 20 வரை நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து 4 கி.மீ., வரை வனத்துறைக்கு சொந்தமான வாகனங்களில் பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். அருவிக்கு முன்பாகவே, பார்க்கிங் பகுதியில் பயணிகள் இறக்கிவிடப்படுகின்றனர். ஆனால், அங்கிருந்து ஒரு கி.மீ., தூரத்துக்கு அடர்ந்த வனப்பகுதிக்குள், நடந்து சென்று அருவிக்கு சென்றடைகின்றனர். இது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதி. இந்த வழித்தடத்தில் வயதானோர் முதல் குழந்தைகள் வரை நடந்து செல்லும் போது, காட்டுயானைகள் தாக்கும் அபாயமும் உள்ளது. இப்பகுதியில்குறிப்பிட்ட சில இடங்களில், ஆங்காங்கே பாதுகாப்பு ஊழியர்களை வனத்துறையினர் நிறுத்தி வைக்கவேண்டுமென சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.கடந்த சில நாட்களாக, சிறுவாணி நீர்ப்பிடிப்பு, மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. இதனால், கோவை குற்றால அருவிக்கு நீர்வரத்து துவங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X