E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பிறந்தோம்... வாழ்ந்தோம்... இறந்தாலும் வாழ்வோம்...: குடும்பத்துடன் உடல்தானம் செய்த முன்னாள் படைவீரர்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2013
00:15

கோவை: கோவையை சேர்ந்த முன்னாள் படைவீரர், மனைவி, மகன், மகளுடன் முழு உடல்தானம் செய்தார். கோவை சூலூர், டிபென்ஸ் காலனியை சேர்ந்தவர் ராஜகோபால், 51; முன்னாள் படைவீரர். அவரது மனைவி செல்லம்மாள், 46, மகள் பூவிழி, 24, மகன் கோவலன், 22, ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். குடும்பத்தினருடன் முழு உடல்தானம் செய்வதாக கலெக்டர் கருணாகரனிடம் கடிதம் கொடுத்தார்.

முன்னாள் படைவீரர் ராஜகோபால் கூறியதாவது:



இந்திய ராணுவத்தில் பணியாற்றியபோது, ரத்ததானம் செய்தேன். அதன்பின், கண்களை தானம் செய்ய படிவம் கொடுத்துள்ளேன். இந்நிலையில், கோவையை சேர்ந்த சுகுமாரி என்பவர், முழு உடல்தானம் செய்த செய்தியை பத்திரிகைகளில் படித்தேன். அவரை போன்று, நானும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்தானம் செய்ய திட்டமிட்டேன். என்னுடைய முடிவுக்கு குடும்பத்தில் அனைவரின் ஆதரவும் கிடைத்தது. என்னுடன் சேர்ந்து, மனைவி, மகள், மகன் ஆகியோரும் உடல்தானம் செய்ய விரும்பினர். உடல்தானம் எவ்வாறு செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் எங்களுக்கு தெரியவில்லை. கோவை குனியமுத்தூரை சேர்ந்த, "பிறர்க்கு உதவு' என்ற பொது நல இயக்கத்தின் உதவியுடன் உடல்தானம் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளேன்.


வாழும் காலத்தில், பிறருக்கு உதவ வேண்டும் என்பதால், பிறந்தநாள், திருமண நாள்களில் பசியால் வாடுவோருக்கும், ஆதரவற்றோருக்கும் உதவிகள் செய்து வருகிறோம். இருக்கும் போதும், இறந்த பிறகும் நம்மால் முடிந்த உதவியை பிறருக்கு செய்ய வேண்டும். நாங்கள் இறந்ததும், எங்களது உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கும், உடல் மருத்துவ ஆராய்ச்சி படிப்புக்கும் பயன்படும். இறந்த பிறகு யாருக்கும் பயன்படாத உடல், மற்றவருக்கு பயன்பட வேண்டும் என்பது எங்கள் குடும்பத்தின் விருப்பம். இதன் மூலம் இறந்த பிறகும் வாழலாம். இவ்வாறு, ராஜகோபால் தெரிவித்தார்.

விழிப்புணர்வு ஏற்படும்!



"பிறர்க்கு உதவு' அமைப்பின் நிறுவனர் ராஜாசேதுமுரளி கூறுகையில், ""கோவையில் குடும்பத்துடன் உடல்தானம் செய்வது இதுவே முதல் முறை. ""இவர்களை பார்த்து எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இவர்கள் நான்கு பேருடன் சேர்த்து, குனியமுத்தூரை சேர்ந்த எல்.ஐ.சி., அதிகாரி ராஜவேலு என்பவரும் உடல்தானம் செய்துள்ளார். எங்கள் அமைப்பின் மூலம் இதுவரை 29 பேரின் உடல்தானம் செய்ய பதிவு செய்துள்ளோம்'' என்றார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amukkusaamy - chennai,இந்தியா
14-ஜூன்-201315:27:50 IST Report Abuse
amukkusaamy உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
Rate this:
0 members
1 members
1 members
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
14-ஜூன்-201315:27:02 IST Report Abuse
amukkusaamy தினமலர் இது பற்றி விபரங்கள் மற்றும் உரிய படிவங்களை வெளியிட்டு விருப்பமுடையோருக்கு உதவி செய்யலாம்.
Rate this:
0 members
1 members
0 members
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
14-ஜூன்-201315:25:07 IST Report Abuse
amukkusaamy எங்கள் அனைவரின் வாழ்த்துக்களையும் அவருக்கு தினமலர் தெரிவிக்க வேண்டுகிறோம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Hariganesan Sm - uthamapalayam,இந்தியா
14-ஜூன்-201312:38:15 IST Report Abuse
Hariganesan Sm நாட்டிற்கு சேவை முடித்து உடல் கூட பிறர்க்கு பயன்பட்டும் என்று குடும்பத்தோடு தானம் முன் வந்துள்ளார்கள் என்றால், பிறரும் இவர்களை பின் பற்ற வேண்டும். ஹரி உ.பாளையம்
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
ramachandran J - Dindigul,இந்தியா
14-ஜூன்-201310:16:28 IST Report Abuse
ramachandran J வாழ்த்துக்கள் சகோதரரே, உங்களைப்போன்று ஒரு சில நல்ல உள்ளங்கள் உள்ளதால்தான் எங்களைப்போன்றவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டுலோடு வாழ்க்கையின்மீது ஒருவித பிடிப்பும் உள்ளதை உண்ர்கிறோம்.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
Palanikumar - Thiruppathur,இந்தியா
14-ஜூன்-201309:55:28 IST Report Abuse
Palanikumar வாழ்த்துக்கள் சார் ..........உயர்திரு ராஜகோபால் அவர்களின் கைபேசி கிடைக்குமா ? ,,,,,,
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.