கலப்பு மணம் செய்த பஞ்சாப் தம்பதி ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி| Dinamalar

கலப்பு மணம் செய்த பஞ்சாப் தம்பதி ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி

Added : ஜூன் 16, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மெல்போர்ன்:பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, கலப்புத் திருமணம் செய்த தம்பதி, ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க, அந்நாட்டு நீதிமன்றம் அனுமதியளித்து உள்ளது.
கலப்பு திருமணம்பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய வாலிபரும், இந்துப் பெண்ணும், 2007ல், காதலித்து, திருமணம் செய்து கொண்டனர்.
தங்கள் காதல் விவகாரத்தை வீட்டில் சொன்னால், பெற்றோர் தங்களை பிரித்து விடலாம் அல்லது கவுரவக் கொலை செய்துவிடலாம் எனக்கருதிய இருவரும், ரகசிய திருமணம் செய்து கொண்ட பின், 2008ல், ஆஸ்திரேலியாவிற்குச் சென்றனர்.
நீட்டிப்பு
இந்நிலையில், அங்கு ஐந்து ஆண்டுகள் வசித்த இருவரது விசா காலம் முடிந்த நிலையில், "இந்தியாவிற்குச் சென்றால், தங்களை கவுரவக் கொலை செய்துவிடுவார்கள் எனவே, விசா காலத்தை நீட்டிக்க வேண்டும்' என, குடியுரிமைத் துறை அதிகாரிகளிடம் மனு செய்தனர்.இருப்பினும், அவர்களது மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.
பின், "தங்களை அகதிகளாகக் கருதி, ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி அளிக்க வேண்டும்' என, அகதிகள் மறு ஆய்வு தீர்பாயத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், "இந்த தம்பதி, தங்கள் சொந்த மாநிலமான, பஞ்சாபைத் தவிர்த்து, மும்பை, டில்லி போன்ற பெரிய நகரங்களில் வசிக்க வாய்ப்புள்ளது' என, கூறி, மனுவை நிராகரித்தது. ஆனால், "என் தந்தைக்கு அரசியல் மற்றும் போலீசில் செல்வாக்கு உள்ளதால், அதனைப் பயன்படுத்தி, எங்களைப் பிரித்துவிடுவார் அல்லது கொலை கூட செய்துவிடுவார்' என, பஞ்சாப் வாலிபர் வாதாடினார்.

அனுமதி
பின், கேன்பராவில் உள்ள, "பெடரல்' கோர்ட்டில், தீர்பாயம் அளித்த உத்தரவை எதிர்த்து, இந்த தம்பதி அப்பீல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த பெடரல் கோர்ட், "இந்திய தம்பதி ஆஸ்திரேலியாவில் தாராளமாகத் தங்கலாம், தீர்ப்பாயம், தன் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது. இருப்பினும், பெடரல் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, ஆஸ்திரேலிய அதிகாரிகள், அப்பீல் செய்ய உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை