வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை

Updated : ஜூன் 23, 2013 | Added : ஜூன் 23, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்:சேலம், ராமகிருஷ்ணா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா, 24. பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா, 20. இவர்களுக்கு முனியம்மாள் என்ற குழந்தை உள்ளது. கவிதா, ஏற்கனவே, முதல் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்த போது, சூர்யாவுடன் பழக்கம் ஏற்பட, இருவரும், கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.இந்த நிலையில், சூயா, 20 ஆயிரம் ரூபாய், நகைகள் வாங்கி வருமாறு, கவிதாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். நேற்று , கவிதாவின் தலைமுடியை வெட்டி அலங்கோலப்படுத்தியதுடன், அடித்து காயப்படுத்தி சித்ரவதை செய்துள்ளார். அங்கிருந்து தப்பித்து வந்த இளம் பெண், பெற்றோர், உறவினர் உதவியுடன், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை