சீன பெண்ணை மணந்தார் தமிழக வாலிபர் உறவினர்களுடன் பேச முடியாததால் கவலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சீன பெண்ணை மணந்தார் தமிழக வாலிபர் உறவினர்களுடன் பேச முடியாததால் கவலை

Added : ஜூன் 24, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 சீன பெண்ணை மணந்தார் தமிழக வாலிபர் உறவினர்களுடன் பேச முடியாததால் கவலை

உளுந்தூர்பேட்டை:சீன பெண்ணை, இந்து முறைப்படி, தமிழக வாலிபர், தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த தொப்பையன்குளத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன்; விவசாயி. இவரது மகன் வெங்கடேசன், 29; கேட்டரிங் படித்தவர். 6 ஆண்டுகளுக்கு முன், சீன நாட்டில், குவைஹவா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மின்ஹால்-குவாயின் மகள் ஷியாகுவ்வா, 28, என்பவரை காதலித்தார். கடந்த ஆண்டு ஏப்., 6ம் தேதி, பதிவுத் திருமணம் செய்து கொண்டு, இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, வெங்கடேசனின் பெற்றோர், இந்து முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என, வேண்டுகோள் வைத்தனர். அதையேற்ற வெங்கடேசன், ஷியாகுவ்வாவுடன், தொப்பையான்குளம் வந்தார்.
நேற்று காலை, 7:15 மணிக்கு, ஷியாகுவ்வா கழுத்தில், வெங்கடேசன் தாலி கட்டினார். மணப்பெண், கீழே உட்கார்ந்து பழக்கமில்லாத மணமகள், மண நாற்காலியில் உட்கார்ந்திருந்தனர்.
வெங்கடேசன் கூறுகையில், "சைனீஸ் மொழி சரளமாகவும், ஆங்கிலம், ஹிந்தி கொஞ்சமாகவும் பேச தெரியும். சீன பெண்ணை மணந்ததால், என் பெற்றோர் வருத்தப்பட்டனர். இருப்பினும், பெருமை தெரிவித்தனர்.
பெண்ணுக்கு, சீன மொழி மட்டுமே தெரியும். அதனால், உறவினர்களுடன் பேச முடியவில்லை. அது தான் வருத்தமாக உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
24-ஜூன்-201305:54:30 IST Report Abuse
Pannadai Pandian சீக்கிரம் சந்ததிய உருவாக்குங்க. அவுங்கதான் இருநாட்டு தூதுவர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை