Uttargand put condition | சாதித்த மோடி மீது பொறாமை: நிபந்தனை விதிக்கிறது உத்தரகண்ட்| Dinamalar

சாதித்த மோடி மீது பொறாமை: நிபந்தனை விதிக்கிறது உத்தரகண்ட்

Added : ஜூன் 24, 2013 | கருத்துகள் (125)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சாதித்த மோடி மீது பொறாமை: நிபந்தனை விதிக்கிறது உத்தரகண்ட்

டேராடூன்:"உத்தரகண்ட் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் மாநில மக்களை, எந்த மாநில அரசும் தனிப்பட்ட முறையில் மீட்கும் செயல்களில் இறங்க, அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, உத்தரகண்ட் காங்கிரஸ் அரசு தெரிவித்துள்ளது.

ஏராளமான புனிதத்தலங்களை கொண்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்தில், கடந்த, 17ம் தேதி ஏற்பட்ட பேய் மழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, 5,000த்திற்கும் மேற்பட்டோர் இறந்திருந்துள்ளனர்.உத்தரகண்ட் நிலவரம் பற்றி அறிந்ததும், கடந்த சனிக்கிழமை, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, தன் அதிகாரிகள் குழுவினருடன் உத்தரகண்ட் சென்று, 15 ஆயிரம் பேரை மீட்டு, விமானங்களில் ஏற்றி, குஜராத் கொண்டு சென்றதாக செய்திகள் வெளியாகின.இதை அறிந்ததும், காங்கிரஸ் மேலிடம் கதி கலங்கியது. பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ள மோடியின் தந்திரம், உத்தரகண்டிலும் ஜெயித்து விட்டதே என, கருதிய காங்., மேலிடம், மோடியை அனுமதித்த, உத்தரகண்ட் காங்கிரஸ் முதல்வர் விஜய் பகுகுணாவை கண்டித்ததாக கூறப்படுகிறது.

அதையடுத்து, நேற்று உத்தரகண்ட் மாநில அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தங்கள் மாநில மக்களை மீட்கும் முயற்சியில், எந்த மாநில அரசுகளும் தனிப்பட்ட முறையில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது; உத்தரகண்ட் மாநில அரசின் அனுமதி மற்றும் ஒருங்கிணைப்பு குழுவின் மூலமே மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ""உத்தரகண்ட் மாநிலத்திற்கு, வி.ஐ.பி.,கள் யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம்; அதனால், நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டேயும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ""உத்தரவை மீறி, உத்தரகண்ட் செல்லும் வி.ஐ.பி.,கள் தடுத்து நிறுத்தப்படுவர்,'' என்றும் எச்சரித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (125)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elangovan - neyveli,இந்தியா
27-ஜூன்-201311:59:13 IST Report Abuse
Elangovan நல்லதை யார் செய்தாலும் வரவேர்க்கவேண்டும் குறை சொல்ல கூடாது
Rate this:
Share this comment
Cancel
shamnugam - madurai,இந்தியா
25-ஜூன்-201310:38:08 IST Report Abuse
shamnugam காங்கிரஸ் இந்த மாதிரி பேசி பேசியே, தன் தலையில 'கை' நெறைய மண்ண அள்ளி போட்டுக்குது.
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
25-ஜூன்-201310:33:09 IST Report Abuse
mirudan மோடி மழை சுனாமி காங்கிரஸ் கட்சியை சுருட்டி போட்டு விடும் போலதான் இருக்கு ?
Rate this:
Share this comment
Cancel
raja - singapore,சிங்கப்பூர்
25-ஜூன்-201310:32:26 IST Report Abuse
raja மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட உத்தரகாண்ட் மாநிலத்துக்குச் சென்ற குஜராத் முதல்வர் ரேம்போ மோடி, இரவு ஒரு மணி வரை கண் விழித்துத் திட்டம் தீட்டி உத்தரகாண்டில் ... தவித்த குஜராத்தைச் சேர்ந்த 15000 பக்தர்களை ஒரே நாளில் மீட்டு வந்தார் என்று ஆங்கில மற்றும் தமிழ் செய்தித் தளங்களில் செய்தி வெளியாகி இருந்தது. அதில் 80 இன்னோவா கார், 25 ஏ சி பஸ், 4 போயிங் விமானம் என எழுதியிருந்த கதை பற்றி நேற்றே இந்நேரம் தளத்தில் விமர்சனம் வெளியாகி இருந்தது. அது பற்றி பெரிதா அலசத் தேவை இல்லை. 15000 பேரை அதுவும் குஜராத்தைச் சேர்ந்த பக்தர்களை மட்டும் தேடிப்பிடித்து ஒரே நாளில் மீட்பது சாத்தியமா? என்று அறிவுப் பூர்வமாக கேள்வி எழுப்பினால், "இவர்களும் செய்ய மாட்டார்கள் செய்றவனையும் செய்ய விட மாட்டார்கள்" என்று விமர்சனம் வேறு. என்னதான் ஊடகங்கள் கதை விட்டாலும் அரசு இது போன்ற விசயங்களில் கதை விட முடியாது. காரணம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் யாராவது கேள்வி எழுப்பினால் கோவணம் கிழிந்து தொங்கும். உத்தரகாண்டில் சனிக்கிழமை இயக்கப் பட்ட முதல் விமானம் மூலம் மீட்கப் பட்டு குஜராத் வந்து சேர்ந்தவர்களின் பட்டியல் இதோ ://202.131.117.209/gujhealth/images/One_1.pdf . மீட்கப் பட்டு டெஹ்ராடூன் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் குஜராத் பக்தர்களின் பட்டியல் இதோ. ://202.131.117.209/gujhealth/images/three_3.pdf இது ஏதோ மோடிமீது வெறுப்பு கொண்டு, காங்கிரஸ் கட்சி தயாரித்து அளித்த பட்டியல் அல்ல. குஜராத் மாநில அரசின் இணைய தளத்தில் வெளியிடப் பட்டுள்ள விவரங்களே இவை. சனிக் கிழமையன்று வந்திறங்கிய முதல் விமானத்தில் வெறும் 124 பேர் மட்டுமே குஜராத் வந்து சேர்ந்ததாக குஜராத் அரசே தெரிவித்துள்ளது. அப்படி என்றால் 15000 பேரை மீட்டுக் கொண்டு வர குறைந்த பட்சம் 115 முறையாவது அந்த விமானத்தை இயக்க வேண்டும். இது தான் உண்மை நிலை. ஒரே நாளில் 115 முறை இயக்கப்பட்ட விமான சர்வீஸா? மோடி அரசின் வித்தை போலும் குஜராத் அரசும் அதன் இணைய தளத்தில் எந்த இடத்திலும் 15000 பேரை மீட்டுக் கொண்டு வந்ததாக உறுதிப் படுத்த வில்லை. பிறகு ஏன் இந்த வெட்டி விளம்பரம்? இந்திய திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் காக்கி கலரில் அரைக் கால் டவுசர் அணிந்து வெள்ளம் பாதிக்கப் பட்ட இடங்களில் மீட்புப் பணிகளைச் செய்து வரும் நிலையில் அதைத் தாங்கள் செய்வது போன்று ஆர்.எஸ்.எஸ் விளம்பரம் செய்து வரும் நிலையில் இதில் ஆச்சர்யப் படவும் ஒன்றுமில்லை. உத்தரகாண்ட் அரசுக்கு நிவாரண நிதியாக தமிழ்நாடு, பீகார், ஜார்கண்ட் முதலான மாநில அரசுகள் தலா ரூ 5 கோடி வழங்கிய நிலையில் முன்னேறிய குஜராத் ரூ 2 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. இறுதியாக ஒரு ஒரு விஷயம். குஜராத் முதல்வர் அநாயாசமான திட்டங்கள் தீட்டி ஒரே நாளில் 15000 குஜராத் பக்தர்களை மீட்டு இருந்தாலும்கூட அதன் பெருமைக்குரியவர்கள் யார்? தம் உயிரையும் பணயம் வைத்து 15000 பேரை மீட்ட இந்திய திபெத் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தாமே? அவர்களின் உழைப்பைத் திருடி மலிவான அரசியல் செய்யும் இது போன்றவர்கள் நாளை பிரதமரானால் நினைத்துப் பார்க்கவே பயமாக உள்ளது.
Rate this:
Share this comment
சிவஸ்ரீ. விபூதிபூஷண் - கோவை,இந்தியா
26-ஜூன்-201307:38:05 IST Report Abuse
சிவஸ்ரீ. விபூதிபூஷண்ஆர் எஸ் எஸ் பேரிடர் நிவாரணப்பணி செய்வது விளம்பரம் அன்று, அது வரலாறு. அது காங்கிரஸ் காமாலைக்கண்ணுக்கு அன்னிய சோனியா அடிவருடிகளின் புண்ணுக்குத்தெரியாததில் ஆச்சரியம் இல்லை. s...
Rate this:
Share this comment
Cancel
venka venky - மதுரை,இந்தியா
25-ஜூன்-201310:29:28 IST Report Abuse
venka venky மோடி நேரடியாக களத்தில் இறங்கி சேவை செய்தது பாராட்டுக்குரியது தான், மத்திய, மாநில அரசுக்கு உதவி பண்ணி இருக்கார், அப்படியே எல்லா மக்களையும் காப்பாற்ற தொடர்ந்து முயற்சி எடுத்திருந்தால் நல்லது. இன்னும் 50000 பேர் சிக்கியிருப்பதாக தகவல். அவர்கள் என்ன செய்வார்கள். அவர்களும் இந்தியர்கள் தானே, ராணுவ வீரர்களோ இப்படியா தன் மாநில மக்கள் பார்த்து காப்பாற்றுகிறார்கள்.... மோடி செய்வது சாதனை என்றால் ராணுவ வீரர்கள் யார்? இது போன்ற ஏன் எல்லா காலங்களிலும் ராணுவ வீரர்கள் தான் நம் உண்மையான சாதனையாளர்கள். WE SALUTE OUR MILITARY ....
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
25-ஜூன்-201310:29:02 IST Report Abuse
mirudan தற்பொழுது மோடி ஒரு மாநில முதல்வர் தான். அதனால் தன் மாநில மக்களை காப்பாற்றி இருக்கிறார் ? ஆக்டிங் பிரதமர் சோனியாவே மூன்று நாட்கள் கழித்து சாவகாசமாக அருமை புத்திரன் உடன் நிவாரண பொருட்கள் அனுப்பியதை விளம்பரபடுத்தி கொண்டு திரிகிறார் ?
Rate this:
Share this comment
Cancel
Devaraj - moolekaodu ,சுரிநாம்
25-ஜூன்-201310:19:52 IST Report Abuse
Devaraj நீயும் நல்ல காரியம் செய்ய மாட்டாய். மற்றவன் செய்தால் அதில் குளறுபடி காண்பாய். அரசியலை ஒதுக்கி விட்டு நல்லதே செய்தல் பாராட்ட வேண்டாம். வாயை மூடிகிட்டு கம்முனு கிடப்பா. சும்மா காங்கிரஸ் காரணை ஜால்ரா அடிக்காதே. நாட்டை பிடித்த ஊழல் பிசாசு போக வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Nangil Tamilan - Nagercoil,இந்தியா
25-ஜூன்-201310:13:31 IST Report Abuse
Nangil Tamilan சூரியனை கையால் மறைக்க பார்கிறார்கள், போகட்டும் அவர்களுக்கு எங்கே தெரியும் மோடி அவர்கள் சூரியன் என்று.
Rate this:
Share this comment
Cancel
maanu - Kuwait,குவைத்
25-ஜூன்-201310:09:26 IST Report Abuse
maanu உத்தரகாண்டில் இப்போதுள்ள நிலையில் எந்த vip வந்தாலும், அவருக்கு பாதுகாப்பு கொடுக்க செல்வதால், மீட்பு பணிகளில் சுணக்கம் எற்படும். எனவே யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்பது நல்லதே. துக்ககரமான இந்த வேளையில் மோடி சென்றதும் 'மாயஜாலம்' செய்ததும் கீழ்த்தரமான அரசியலே அன்றி வேறில்லை. சில வாகனகளிலும், விமானத்திலும் 15000 குஜராத்திகளை மட்டும் காப்பாற்றினார் என்பது நம்பும்படி இல்லை. அவரின் ( தினமலர் போன்ற ) ஊதுகுழல்களினால் இது 'அரசியல்-விளம்பரப்படுத்தப்படுகிறது'. அத்வானி பிரச்சினையை சமாளிக்க முடியாமல் இதை திசை திருப்புகிறார்கள். கேவலம்...
Rate this:
Share this comment
Cancel
பச்சைத் தமிழன் - புலவர் வேலாங்குடி,இந்தியா
25-ஜூன்-201310:05:06 IST Report Abuse
 பச்சைத் தமிழன் இவங்களும் ஒன்னும் பண்ண மாட்டாங்க..... உதவி பண்றவுங்களையும் விட மாட்டாங்க. விட்டா இந்த மழைக்கு காரணம் மோடிதாணு சொன்னாலும் சொல்லுவானுங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை