கர்நாடக அணைகளில் உயருகிறது நீர்மட்டம் : மேட்டூர் அணையோ வறண்டு போகும் அபாயம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தென்மேற்கு பருவமழையால், கர்நாடக அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுபடி, தமிழகத்துக்கு, நீர்திறக்காததால், குடிநீருக்கே தண்ணீர் இன்றி, மேட்டூர் அணை வறண்டும் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புபடி ,கர்நாடகம், ஜூன் மாதம், 10 டி.எம்.சி., ஜூலை மாதம், 34 டி.எம்.சி., தண்ணீர், மேட்டூர் அணைக்கு விடுவிக்க வேண்டும். டில்லியில்,11ம் தேதி கூடிய காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில், ஜூன் மாதம், 10ம் தேதி வரை, ஒதுக்கீடான, 6.6 டி.எம்.சி., நீரை, கர்நாடகம் விடுவிக்க வேண்டும் என, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.கோரிக்கை தொடர்பாக, முடிவு தெரிவிக்காமல், ஆலோசனை கூட்டம், ஜூலை முதல் வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேட்டூர் அணையில், குடிநீருக்காக அதிபட்சம், 6 டி.எம்.சி., நீர் இருப்பு வைக்கப்படும். பருவமழை பொய்த்ததால், நேற்று மேட்டூர் அணை நீர்மட்டம், 15.720 அடியாகவும், நீர் இருப்பு, 2.950 டி.எம்.சி.,யாகவும் சரிந்து விட்டது.அணையில் இருந்து, குடிநீருக்கு, 600 கனஅடி நீர்திறக்கப்படுகிறது. நீர்வரத்தில், இதே நிலை நீடித்தால், இருப்பு நீரை இன்னமும், 50 முதல், 60 நாளுக்கே திறக்க முடியும். அதன் பின், குடிநீருக்கு கூட தண்ணீர் இன்றி, மேட்டூர் அணை வறண்டு விடும்.


நீர்வரத்து அதிகரிப்பு:

தென்மேற்கு பருவமழையால், தற்போது, கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று, கபினி நீர்மட்டம், 56 அடியாகவும், நீர் இருப்பு, 15 டி.எம்.சி.,யாகவும் உயர்ந்தது. வினாடிக்கு, 10,000 கனஅடி நீர் வந்தது. கபினி நிரம்ப இன்னமும், 4.5 டி.எம்.சி., நீர் தேவை. கபினி நிரம்பும் பட்சத்தில், உபரி நீர் மட்டுமே மேட்டூர் அணைக்கு திறக்கப்பட வாய்ப்புள்ளது. நேற்று கே.ஆர்.எஸ்., அணை நீர்மட்டம், 80 அடியாகவும், நீர் இருப்பு, 11 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. அணைக்கு, 4,000 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. கே.ஆர்.எஸ்., நிரம்ப இன்னமும், 38 டி.எம்.சி., நீர் தேவை. நேற்றைய நிலவரப்படி கபினி, கே.ஆர்.எஸ்.,ல், 26 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.


அரசுகள் மவுனம்:

மேட்டூர் அணையிலோ, 2.950 டி.எம்.சி., நீர் மட்டுமே உள்ளது.மேட்டூர் அணையில், குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலையில், நீர்திறக்க வலியுறுத்தாமல், தமிழக அரசும், மத்திய அரசும் மவுனம் சாதிப்பது, தமிழக டெல்டா விவசாயிகளையும், பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி, தமிழகத்துக்கு நீர்திறக்காததால், குடிநீருக்கே தண்ணீர் இன்றி, மேட்டூர் அணை வறண்டும் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.


ஆதரித்த தமிழகம்: வஞ்சித்த கர்நாடகா!

கடந்த, 2011, பிப், 8ம் தேதி, தமிழக சட்டசபை கூட்டத்தில், மேட்டூர் அணைக்குள், கர்நாடகா அரசு நீரேற்று நிலையம் அமைப்பது குறித்து, அ.தி.மு.க.,- காங்., எம்.எல்.ஏ.,க்கள் தகவல் கோரும் தீர்மானம் கொண்டு வந்தனர்.அதற்கு, அப்போதைய,தி.மு.க., அமைச்சர் பொன்முடி பதில் கூறிய போது, "காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி நகர, ஊரக மக்களின் குடிநீர் தேவைக்காக, காவிரி நீரை பயன்படுத்தலாம். குடிநீர் தேவைக்காக, நீர் எடுக்க நடுவர் நீதிமன்றம் உரிமை வழங்கியுள்ளதாக கர்நாடகா கூறுகிறது' என்றார்.இதனால், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மதித்து, மேட்டூர் அணைக்குள், கர்நாடகா, குடிநீர் எடுப்பதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இன்று, குடிநீருக்கு போதுமான தண்ணீர் கூட இருப்பு இல்லாத நிலையில், மேட்டூர் அணையில் இருந்து, குடிநீருக்காக, கர்நாடகம் தொடர்ந்து தண்ணீர் எடுக்கிறது. ஆனால், கர்நாடகா அணைகளில் போதிய தண்ணீர் இருந்தும், தமிழக டெல்டா மாவட்ட குடிநீர் தேவையை சமாளிக்க கூட, தங்கள் அணைகளில் இருந்து நீர்திறக்காமல், தமிழகத்தை, கர்நாடகம் பழி வாங்கி கொண்டிருப்பது, தமிழக மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukumar. G - chennai,இந்தியா
25-ஜூன்-201312:30:42 IST Report Abuse
Muthukumar. G தமிழகத்தில் இருக்கும் தீவிரவாத இயக்கங்கள் கபினி கேயார்சாகர் இரண்டையும் குண்டு வைக்கும் நிலைக்கு தள்ளுவதே இந்த அரசியல் அசிங்கங்களின் நோக்கம்.
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
25-ஜூன்-201308:50:17 IST Report Abuse
PRAKASH ஆத்தா .. இட்லி காய்கறி குடுத்தது போதும்.. இப்போ தேவை கரண்ட் தண்ணி தான்
Rate this:
Share this comment
Cancel
Nagarajan S - Chennai,இந்தியா
25-ஜூன்-201308:33:25 IST Report Abuse
Nagarajan S காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மதித்து, மேட்டூர் அணைக்குள், கர்நாடகா, குடிநீர் எடுப்பதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அன்று. ஆனால் இன்று, குடிநீருக்கு போதுமான தண்ணீர் கூட இருப்பு இல்லாத நிலையில், மேட்டூர் அணையில் இருந்து, குடிநீருக்காக, கர்நாடகம் தொடர்ந்து தண்ணீர் எடுக்கிறதை, தமிழகத்திற்கே தண்ணீர் இல்லை என்றும் கர்நாடகாவிற்கு குடிநீருக்கு தண்ணீர் தரவேண்டுமென்றால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடவேண்டுமென்றும் தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் மனு அளிக்க வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Govindarajan Radhakrishnan - Tiruchirapalli,இந்தியா
25-ஜூன்-201308:25:47 IST Report Abuse
Govindarajan Radhakrishnan காவிரியில் நீர் புரண்டால் சம்மர் பீச் போட முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Govindarajan Radhakrishnan - Tiruchirapalli,இந்தியா
25-ஜூன்-201308:24:48 IST Report Abuse
Govindarajan Radhakrishnan காவிரியில் நீர் புரண்டால் மணல் அள்ளுவது எப்படி?
Rate this:
Share this comment
Cancel
oviya.vijay - Madurai,இந்தியா
25-ஜூன்-201308:02:20 IST Report Abuse
oviya.vijay நமக்கு சாதகமா தீர்ப்பும் வந்தாச்சு... அரசிதழிலும் வெளியிட்டாச்சு... அதற்காக காவேரி தாயான நம்ம "மம்மி"-க்கு பாராட்டு விழாவும் நடத்தியாச்சு... ஆனா பிரச்சனை மட்டும் தீர்ந்த பாடில்ல...
Rate this:
Share this comment
Cancel
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
25-ஜூன்-201307:37:20 IST Report Abuse
P. Kannan தெய்வம் நின்று கொல்லும். இந்த பழமொழி உண்மையான்னு பார்ப்போம்.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
25-ஜூன்-201306:19:55 IST Report Abuse
villupuram jeevithan பொன்முடி இப்போதிருந்தால் அப்போ மாதிரியே எதிர்க்காமல் கர்நாடகத்து ஆதரவு அளித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. விலைவாசி ஏறி விட்டதே என்று கேட்டால் உங்கள் வருமானமும் ஏறிவிட்டதே என்று பதில் அளித்தவர் தானே/
Rate this:
Share this comment
Oneindia - Bangalore,இந்தியா
25-ஜூன்-201308:16:06 IST Report Abuse
Oneindia//////////////மேட்டூர் அணைக்குள், கர்நாடகா, குடிநீர் எடுப்பதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை///////////// Mettur dam in karnataka or in Tamilnadu? How they will take from mettur dam? Suppose it can possible from kaveri not from mettur dam....
Rate this:
Share this comment
Cancel
vaaithaa vampan - mannargudi ,இந்தியா
25-ஜூன்-201305:24:43 IST Report Abuse
vaaithaa vampan எங்க ஊரு ஆயா, வாயால் வடை சுட்டு அதை டைனோசர் கவ்விகிட்டு போயிருச்சின்னு கதா கலாசேபம் கதைக்க தான் லாயக்கு. வெத்துவேட்டு டுபாகூரு
Rate this:
Share this comment
Cancel
Sadique - Tiruvarur,இந்தியா
25-ஜூன்-201304:48:22 IST Report Abuse
Sadique இறைவன் கருணை கொண்டு மழை மேகம் தமிழ் மண்ணை நினைக்கட்டும் .நீதி தவறிய அரசாக மைய அரசு உள்ளது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்