சி.பி.ஐ., அமைப்பின் விசாரணைகளை மேற்பார்வையிட நீதிபதிகள் குழு?
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:"சி.பி.ஐ., அமைப்பின், விசாரணை நடவடிக்கைகளை மேற்பார்வையிட, ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவை, மத்திய அரசு அமைக்கலாம்' என, எதிர்பார்க்கப்படுகிறது.

"சி.பி.ஐ.,யின் நடவடிக்கைகளில், அரசின் தலையீடு கூடாது. இதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, சி.பி.ஐ.,யின் தன்னாட்சி அதிகாரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் தலைமையில், அமைச்சரவை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, டில்லியில் நேற்று கூடி, ஆலோசனை நடத்தியது.

கூட்டம் முடிந்ததும், மத்திய சட்ட அமைச்சர், கபில் சிபில் கூறியதாவது:சி.பி.ஐ., நடவடிக்கைகளில் தலையிடுவது என்ற கொள்கையை, மத்திய அரசு உறுதியாக பின்பற்றி வருகிறது. சி.பி.ஐ., அல்லது அரசின் மற்ற விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகளில், அரசு எந்த குறுக்கீடும் செய்வது இல்லை. இதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சி.பி.ஐ., அமைப்பு, தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுவதில், எந்த பிரச்னையும் இல்லை. அதேநேரத்தில், அதன் செயல்பாடுகளுக்கு ஒரு பொறுப்பு உருவாக்கப்பட வேண்டும். இதை உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இந்த கூட்டத்தில், சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள், வரும், 27ம் தேதி நடக்கவுள்ள, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு, கபில் சிபில் கூறினார்.

அமைச்சரவை குழுவின் நேற்றைய கூட்டத்தில், "சி.பி.ஐ., அமைப்பு, தன் விசாரணை நடவடிக்கைகளில், சுதந்திரமாக செயல்படவும், அரசியல்வாதிகளின் நிர்பந்தங்கள் இல்லாமல் இருக்கவும், அந்த அமைப்பின், விசாரணை நடவடிக்கைகளை மேற்பார்வையிட, ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவை, மத்திய அரசு அமைக்க வேண்டும்' என, பரிந்துரைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
25-ஜூன்-201308:43:30 IST Report Abuse
K.Sugavanam அப்போ உருப்பட்ட மாதிரி தான்....சரியாவேல செய்யராங்களான்னு பின்னாலேயே வந்தா...திருடன புடிச்ச மாதிரி தான்.
Rate this:
Share this comment
Cancel
தேன் தமிழ் - Salem,இந்தியா
25-ஜூன்-201307:35:21 IST Report Abuse
தேன்  தமிழ் Congress Bureau of Investigation is highly polluted with sleeper cells of Congress supporters. Very Difficult to wipe them out.
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
25-ஜூன்-201307:02:22 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி அடுத்து இது போன்றே ஒரு குழு தணிக்கை துறைக்கும் அமைக்கப்படும்.
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
25-ஜூன்-201306:41:56 IST Report Abuse
K.Balasubramanian "எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு "
Rate this:
Share this comment
Cancel
Sadique - Tiruvarur,இந்தியா
25-ஜூன்-201304:43:07 IST Report Abuse
Sadique தன்னாட்சி அதிகாரத்துடன் செயல் பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .கைபாவை அல்ல சி பி .ஐ., என்பதை தெளிவு படுத்த வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்