அரசு பள்ளிகளில் கட்டாய நன்கொடை: பிளஸ் 1 சேர முடியாமல் மாணவர்கள் தவிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சேலம்: அரசு பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில், கட்டாய நன்கொடை வசூலிப்பதாலும், விரும்பும் பிரிவு வழங்காததாலும், பள்ளிக்கு செல்லாமல், வேலைக்கு செல்லும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை நடப்பாண்டில் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், 10ம் வகுப்பு தேர்வு முடிவு, மே 31ம் தேதி, வெளியானது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கடந்த வாரத்தில், மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பிளஸ் 1 மாணவர் சேர்க்கையும் நடந்து வருகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ், பாடப்புத்தகம் உள்ளிட்ட சலுகை மட்டுமின்றி, கல்விக்கட்டணம் உள்ளிட்டவையும் அரசே வழங்கிவிடுவதால், கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனாலும், பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற போர்வையில், அரசியல் கட்சியினர், மாணவர் சேர்க்கையில் தலையிட்டு, வசூல் வேட்டை நடத்துகின்றனர். அதிலும், பிளஸ் 1 சேர்க்கையில், கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் சேரவே, அனைத்து மாணவர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.இதை சாதகமாக பயன்படுத்தி, 500 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரை, நன்கொடை வசூலிக்கின்றனர்.வசதியில்லாத ஏழை, எளிய மாணவ, மாணவியர் சேர வந்தாலும், அவர்களிடமும், கட்டாய நன்கொடை வசூலிக்கப்படுகிறது. இதனால், நன்கொடை தர முடியாத பெற்றோர், மாணவர்களை சேர்க்க முடியாமல், வீடு திரும்புகின்றனர். பல மாணவர்கள், கல்வியை தொடர முடியாமல், வேலைக்கு செல்லும் அவலம் நீடிக்கிறது.

இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறியதாவது:ஆத்தூர், வாழப்பாடியை சுற்றிலும், ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இவற்றில், மேல்நிலைப்பள்ளிகளுக்கு, பல கிலோ மீட்டர் தூரம் வரை, பயணித்து வரவேண்டிய நிலை உள்ளது. குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற அக்கறையில் வரும் பெற்றோரிடம், அரசு பள்ளிகளில் கூட, ஆயிரக்கணக்கில் நன்கொடை வசூலிக்கின்றனர்.அதிலும், மாணவர்கள் கேட்கும் பிரிவுகளை தராமல், குறிப்பிட்ட, பிரிவுகளில் மட்டுமே இடம் உள்ளது என்கின்றனர். இதனால், மாணவர்களுக்கு, படிப்பில் ஆர்வம் குறைந்து விடுகிறது. பல பெற்றோர் மாணவர்களை வேலைக்கு அனுப்பி விடுகின்றனர்.இதுகுறித்து, புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதே நிலை நீடித்தால், பள்ளியில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரிக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesan Jayaraman - Dubai,இந்தியா
26-ஜூன்-201315:51:46 IST Report Abuse
Venkatesan Jayaraman இந்த நன்கொடையால் 1994-95 கல்வி ஆண்டில் நான் விரும்பிய பாடம் எனக்கு கிடைக்க வில்லை. அப்போது கேட்ட நன்கொடை ரூபாய் 500
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
26-ஜூன்-201314:11:10 IST Report Abuse
Gopi ஏன் குறிப்பிட்ட பள்ளியின் பெயரை அந்த பெற்றோர் வெளியிடலாமே?
Rate this:
Share this comment
Cancel
Malleeswaran - Dindigul,இந்தியா
26-ஜூன்-201313:08:45 IST Report Abuse
Malleeswaran இந்த மாதிரி செய்யும் கயவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப் பட வேண்டியவர்களே.அம்மா அவர்களின் தலைமையில் இயங்கும் இன்றைய அரசு பள்ளிக் கூடங்களுக்கு நிறைய வசதிகளைச் செய்யக் காத்திருக்கிறது .இதில் உள்ளூர் கட்சிக்காரர்கள் நிறைய தவறுகள் செய்கின்றனர்.இதனால் ஆளும் கட்சியின் மீது ஏழை எளியோருக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இதனால் தான் போன முறை ஐயனின் ஆட்சிக்கு மக்கள் ஆப்பு வைத்தனர். இதை அம்மா அவர்கள் உணர்ந்து லோக்கல் அரசியல் வாதிகளைக் கொஞ்சம் அடக்கி வைக்க வேண்டும் . அல்லது அவர்களைக் கட்சியிலிருந்தே தூக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
appu - madurai,இந்தியா
26-ஜூன்-201312:58:58 IST Report Abuse
appu ஜான்சி ராணி இதையெல்லாம் தட்டி கேட்க மாட்டார்களா???
Rate this:
Share this comment
Cancel
Niraikulam Arunachalam - chennai,இந்தியா
26-ஜூன்-201312:44:09 IST Report Abuse
Niraikulam Arunachalam அரசு பள்ளிகளில் நன்கொடை என்ற பெயரால் சில கருங்காலிகளின் செயலால் பல மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாக உள்ளது.இதனை நமது அரசு சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
26-ஜூன்-201310:45:32 IST Report Abuse
kumaresan.m " இது ஒன்றும் புதிது அல்லவே ??? காலம் காலம் நடைமுறையில் உள்ள வழக்கம் தானே நண்பரே, கவலை வேண்டாம் இவர்களை திறந்த ஒரே வழி. சிறிது செலவுகள் செய்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து மூலைக்கு மூலை பணம் கேட்பவர்களின் புகை படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டுங்கள் வழிபிறக்கும். அதைவிடுத்து பங்கு வாங்குபவர்களிடம் போய் புகார் கூறினால் எப்படி நடவடிக்கைகள் எடுப்பார் நண்பரே ????
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
26-ஜூன்-201307:36:23 IST Report Abuse
Thangairaja இங்கு ஒருதலைபட்சமாக கருத்து சொல்வது அபாயமானது.....இந்த காலத்துல யாரையும் நம்ப முடியறதில்லை....பெற்றோர் உள்பட .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்