Advertisement
வெள்ள பாதிப்பு நிவாரண நிதி : அரசியல் கட்சியினர் அமோக வசூல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

உத்தரகண்ட் வெள்ளத்தில், பாதிக்கப்பட்டோருக்கு உதவும் பெயரில், அரசியல் கட்சிகள், தனியார், தன்னார்வ அமைப்புகள், பொதுமக்களிடம், நிதி திரட்டுவதில், களம் இறங்கி உள்ளன.

இயற்கை இடர்பாடுகளின் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதாக, பல்வேறு அமைப்புகள், நிவாரண நிதி வசூலில், களம் இறங்கி விடுகின்றனர்.இவ்வாறு வசூல் செய்யப்படும் பணம், பொருட்கள், பாதிக்கப்பட்டோரை, முறையாக சென்றடையுமா, என்ற கேள்வி, கடந்த காலங்களில் எழுந்தது. இதை தடுக்கும் வகையில், நிவாரண நிதியை, அரசே திரட்டி வழங்கியது.தற்போது உத்தரகாண்ட்டில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, அரசின் சார்பில், நிதி திரட்டுவது குறித்து, அறிவிப்பு வெளியாகவில்லை.இதை, சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அரசியல் கட்சிகள், தனியார், தன்னார்வ அமைப்புகள், "உத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதி' என்னும் பெயரில், வசூலில் களம் இறங்கி விட்டன. திரட்டப்படும் நிதி மற்றும் பொருட்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முறையாக சென்றடையுமா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இவர்களிடம் நிதி வழங்கும் பட்சத்தில், அதில் ஒரு பகுதியை, தங்கள் அமைப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. எனவே, தமிழக அரசு, உடனடியாக, உத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதி திரட்டுவது குறித்து, அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டுள்ளது.

-நமது நிருபர்-

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mirudan - kailaayam,இந்தியா
01-ஜூலை-201311:02:02 IST Report Abuse
mirudan இதில் அய்யாவை யாரும் மிஞ்ச முடியாது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Erode kingcobra - erode,இந்தியா
26-ஜூன்-201307:52:22 IST Report Abuse
Erode kingcobra அம்மா,அய்யாவ முந்தி கொண்டு யார் வசூல் செய்ய இறங்கி இருப்பது .அம்மா உடனே அறிவிப்பு வெளி இடவேண்டும்
Rate this:
3 members
0 members
14 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.