E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
உணவு வசதியுடைய "கிளாசிக்' பேருந்துகள் "பிரேக் டவுன்': அரசின் திட்டம் "புஸ்ஸ்...'
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2013
23:52

சென்னை - ஸ்ரீரங்கம் வழித்தடத்தில், இயக்கத்திற்கு வந்து, மூன்றே நாட்களுக்குள், உணவு வசதியுடைய, "கிளாசிக்' பேருந்துகள், "பிரேக் டவுன்' ஆகி நின்றதால், பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

"அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம், உணவு வசதியுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்படும்' என, சட்டசபையில், போக்குவரத்து துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.குறிப்பாக, விமானம், ரயிலில் உள்ளது போன்ற, உணவு பரிமாறுதல் மற்றும் கழிப்பறை வசதியுடன் பேருந்துகள் இயக்கப்படும் என்பதால், பயணிகளிடம் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த, 20ம் தேதி, 189 புதிய பேருந்துகள் மற்றும், 55 புனரமைக்கப்பட்ட பேருந்துகள் என, மொத்தம், 244 பேருந்துகளின் இயக்கத்தை, முதல்வர் ஜெயலலிதா துவங்கி வைத்தார்.இதில், "கிளாசிக்' பேருந்து என அழைக்கப்படும், உணவு வசதியுடன் கூடிய, புனரமைக்கப்பட்ட, இரண்டு பேருந்துகளும் இயக்கத்திற்கு வந்தன.ஸ்ரீரங்கம் - சென்னை வழித்தடத்தில் இயக்கப்பட்ட இந்த பேருந்தில், இட்லி, பொங்கல், ஊத்தாப்பம், மூன்று வகை கலவை சாதம், எந்நேரமும் கிடைக்கும் வகையில், டீ, பிஸ்கட், குடிநீர் உள்ளிட்டவை, பயணத்தின் போதே கிடைக்க வசதி செய்யப்பட்டது.

ஆனால், இயக்கத்திற்கு வந்த, மூன்று நாட்களுக்குள், இரண்டு, "கிளாசிக்' பேருந்துகளும், அடுத்தடுத்து, "பிரேக் டவுன்' ஆகியிருப்பது, பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த, 23ம் தேதி இரவு, ஸ்ரீரங்கத்தில் இருந்து, சென்னைக்கு புறப்பட்ட, "கிளாசிக்' பேருந்து, பெரம்பலூர் அருகே, "ரேடியேட்டரில்' ஏற்பட்ட பழுது காரணமாக, "பிரேக் டவுன்' ஆகி நின்றது.சில மணி நேரத்துக்கு பின், பயணிகளுக்கு மாற்று பேருந்து வசதி செய்து தந்துள்ளனர். இதே போல, சென்னையில் இருந்து ஸ்ரீரங்கம் சென்ற, மற்றொரு, "கிளாசிக்' பேருந்திலும், இயக்கத்தின்போது பழுது ஏற்பட்டுள்ளது. பின், சரி செய்து, பேருந்தை இயக்கியுள்ளனர்.கடந்த, 2008 - 09ம் ஆண்டுகளில், இயக்கத்தில் இருந்த சில, "ஏசி' பேருந்துகள், பின், "ஏசி' வசதியற்ற பேருந்துகளாக மாற்றப்பட்டன. அவற்றில், இரண்டு பேருந்துகளை தேர்ந்தெடுத்து, அவற்றை புனரமைத்து, "கிளாசிக்' பேருந்துகளாக மாற்றியுள்ளனர்.பராமரிப்பற்ற பழைய பேருந்துகளை, "கிளாசிக்' பேருந்துகளாக மாற்ற தேர்ந்தெடுத்திருப்பதை தவிர்த்து இருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பேருந்துகளின் சராசரி ஆயுட்காலம், ஆறு ஆண்டு அல்லது எட்டு லட்சம் கிலோ மீட்டர். ஏற்கனவே, நான்கு முதல், ஐந்து ஆண்டுகளாக இயக்கப்பட்ட பேருந்துகளை, "கிளாசிக்' பேருந்துகளாக தேர்ந்தெடுத்திருப்பதை தவிர்த்திருக்கலாம். சிறந்த திட்டத்தை, நல்ல நிலையில் இருக்கும் பேருந்துகளில், செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

இது குறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: பேருந்துகள் பழுதான நிலையில், கவனக்குறைவாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளில் ஏற்பட்ட பழுது, உடனடியாக சரி செய்யப்பட்டு, தற்போது இயக்கத்தில் உள்ளன. இனி, பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (73)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
26-ஜூன்-201314:05:59 IST Report Abuse
Rajasekaran Palaniswamy புலியை பார்த்து பூனை சூடு போட்டுகொண்டதாம். கர்நாடக அரசு ஐராவத் பேருந்தை பார்த்து அதைபோல் செய்யவேண்டும் என்று அம்மா நினைத்தது சரிதான். ஆனால் அதை நடைமுறைபடுத்த படித்த, பக்குவமுள்ள, அனுபவமுள்ள, திறமையான அதிகாரிகள் நமது அரசு பேருந்து இயக்கத்தில் யாரும் இல்லாததுதான் வேதனையான விஷயம். முதலில் இதற்கு பொறுப்பானவரை "ஐராவத்" பேருந்தை பார்த்து, அதில் ஒருமுறை (அரசு செலவில்தான்) பயணம் செய்ய சொல்லுங்கள்.
Rate this:
3 members
5 members
49 members
Share this comment
Cancel
Asokaraj - doha,கத்தார்
26-ஜூன்-201313:54:43 IST Report Abuse
Asokaraj இதெல்லாம் ஆவுறதில்லை. எல்லா நிலையிலும் அரசு துறைகளில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கசக்கப் பட்டால்தான் ஒழுங்காக வேலை செய்வார்கள். இல்லையெனில் இப்படித்தான் அதிகாரி ஓட்டை பஸ்ஸை ஊழியர்களிடம் கொடுத்து கிழவிக்கு அலங்காரம் பண்ணச் சொல்றது. அப்புறம் அந்தக் கிழவி மண்டையை போட்டுட்டா அந்த அப்பாவி ஊழியர் மீது நடவடிக்கை எடுப்பது. ஏன் அதிகாரிகள் எல்லோரும் சுத்த சன்மார்க்க சங்கத்தின் வழி வந்தவர்களா? இவர்களுக்கு யார் தண்டனை கொடுப்பது.
Rate this:
14 members
1 members
39 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
26-ஜூன்-201313:32:02 IST Report Abuse
Nallavan Nallavan அரசின் இத்திட்டம் நகைப்பிற்குரியது
Rate this:
8 members
0 members
63 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
26-ஜூன்-201313:30:58 IST Report Abuse
Nallavan Nallavan ஆமை இல்லை .... இல்லை .... சர்க்கார் புகுந்த வீடு?
Rate this:
6 members
0 members
45 members
Share this comment
Cancel
Shanmuga Sundaram - Bangalore,இந்தியா
26-ஜூன்-201312:49:14 IST Report Abuse
Shanmuga Sundaram "கிளாசிக்' பேருந்துகளாக மாற்றியுள்ளனர். பராமரிப்பற்ற பழைய பேருந்துகளை, "கிளாசிக்' பேருந்துகளாக மாற்ற தேர்ந்தெடுத்திருப்பதை தவிர்த்து இருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது" - there is no surprise... as in English it goes as Classical also means old .... they correctly named project as classic bus
Rate this:
2 members
15 members
27 members
Share this comment
Cancel
ingurkumar - mettupalayam ,இந்தியா
26-ஜூன்-201312:45:55 IST Report Abuse
ingurkumar இந்த மாதிரி சொகுசு பேருந்துகளை இயக்குவதை தனியார் இடமே விட்டுவிட வேண்டும். தனியார் லாப நோக்கில் தான் செயல்படுவார்கள். ஆனால் அங்கு திறமை அதிகம் இருப்பதை மறுக்க முடியாது. அரசு பேருந்து முழுக்க முழுக்க அடிப்படை வசதிகளுக்காக தவிக்கும் மக்களை கருத்தில் கொண்டு தான் இயங்குகிறது. அங்கு லாபம் எனபது இரண்டாம் பட்சம் தான். கிராமப்புறம் ,சிரிய மற்றும் பெரிய நகரங்கள், பள்ளிகள் கல்லூரிகள், வாரந்திர கிராம சந்தை கூடும் இடங்கள், கிராம திருவிழாக்கள், கோவில் விசேஷங்கள், போன்றவற்றில் அதிக கவனம் கொண்டு சாதாரண பேருந்துகளை பொதுமான அளவில் இயக்குவதில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்
Rate this:
5 members
3 members
22 members
Share this comment
Cancel
Hariganesan Sm - uthamapalayam,இந்தியா
26-ஜூன்-201312:36:39 IST Report Abuse
Hariganesan Sm புனர் அமைப்பு பஸ்கள் எல்லாம் இப்படித்தான்.. சாதாரணமாக கிராமங்களில் ஓடும் புனர் அமைத்த பஸ்கள் அவ்வப்போது ரோடுகளில் பாதியில் இருப்பதை தினமும் காணலாம்..இதென்னங்க பிரமாதம்..
Rate this:
1 members
0 members
38 members
Share this comment
Cancel
raja - madurai,இந்தியா
26-ஜூன்-201312:22:12 IST Report Abuse
raja தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு கடல் நீர் குடிநீரா மாத்துவது, மின்சாரம் தட்டுப்பாட்டுக்கு சோலார் பயன்படுத்துவது .. இப்டி இதுக்கு எல்லாம் நிதி ஒதுக்குனா நல்லா இருக்கும்... இலவசங்கள் எங்களுக்கு வேண்டாம்... அதுக்கு பதிலா மின்சாரம் தண்ணீருக்கு நீங்க இலவசத்துக்கு ஒதுக்கின நிதிய எடுத்துகோங்க... அதுக்கு செலவு பண்ணுங்க ...
Rate this:
1 members
0 members
52 members
Share this comment
Cancel
Tamilar Neethi - Chennai,இந்தியா
26-ஜூன்-201312:15:11 IST Report Abuse
Tamilar Neethi அது என்ன ஸ்ரீரங்கம் வழித்தடத்தில் மட்டும் இப்படி கிளாசிக் பேருந்து. சென்னை மதுரை என்றால் லாபத்தில் ஓடும். இது அரசு கஜானா எடுத்து ஜெயா தொகுதிக்கு கொட்டுவது. நட்டம் ஆனாலும் சரி, தான் தொகுதி ஒட்டு வங்கி திருப்தி பட வேண்டும். இது கட்சி காசு கொடுத்து ஒட்டு வாங்குவதற்கு பதில் அரசு பணம் எடுத்து கொடுத்து ஒட்டு தயார் பண்ணுவது. எதோ உள்ளுக்குள் பயம் இருக்கு, அடுத்த தெர்தலில் AIADMAK இப்படி கொடுக்கா விட்டால் ஊத்திக்கும் என்று. ஜெயாவுக்கு இப்டி பயம் இருந்தால், இதர கட்சி கார்கள் நிலைமை திண்டாட்டம் தான் . எதோ கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளயாருக்கு உடைத்து .
Rate this:
6 members
0 members
51 members
Share this comment
Cancel
ungalil oruvan - Chennai,இந்தியா
26-ஜூன்-201312:14:58 IST Report Abuse
ungalil oruvan போக்குவரத்து துறை அமைச்சர் தனது பதவியை காப்பத்திக்கொள்ள "கிளாச்சிக்" பஸ்ஸை நாடினார், அது அவரது திறமையை போலவே பல் இளித்து விட்டது, எப்போது வேண்டுமானாலும் கட்டம் கட்டப்படலாம், அதுவும் முதல்வர் தொகுதிக்கு விட்ட பஸ், கட்டம் confirmed
Rate this:
5 members
1 members
80 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.