Kanimozhi thangs congress MLA's | காங்., ஆதரவுக்கு கனிமொழி நன்றி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்., ஆதரவுக்கு கனிமொழி நன்றி

Added : ஜூன் 26, 2013 | கருத்துகள் (21)
Advertisement
காங்., ஆதரவுக்கு கனிமொழி நன்றி

சென்னை:ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததை ஒட்டி, தி.மு.க., வேட்பாளர் கனிமொழி, நேற்று காலை, சத்தியமூர்த்தி பவன் சென்று, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனுக்கு நன்றி தெரிவித்தார்.

ராஜ்யசபா தேர்தல், இன்று நடைபெறவுள்ளது. ஆறாவது எம்.பி., சீட்டிற்கு, தி.மு.க., வேட்பாளர் கனிமொழிக்கும், தே.மு.தி.க., வேட்பாளர் இளங்கோவனுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நேற்று காலை, 11:45 மணிக்கு தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு, கனிமொழி வந்தார்.அவருடன் டி.ஆர்.பாலு, வேலு, டி.கே.எஸ்.இளங்கோவன், சக்கரபாணி ஆகியோர் வந்தனர். கனிமொழியை ஜோதி, தணிகாசலம், மதிவாணன் உள்ளிட்ட காங்கிரசார் வரவேற்றனர். காங்கிரஸ் ஆதரவு அளித்ததற்காக, ஞானதேசிகனிடம், கனிமொழி நன்றி தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கோபிநாத், ரங்கராஜன், ஜான் ஜேக்கப், விஜயதாரணி, பிரின்ஸ் ஆகியோரிடம், கனிமொழி ஆதரவு கேட்டார்.வெளியே வந்த கனிமொழி, நிருபர்களிடம் கூறுகையில், ""காங்கிரஸ் மேலிடம் எனக்கு ஆதரவு அளித்ததற்காக, சோனியா, ஞானதேசிகனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன்,'' என்றார்.

ஞானதேசிகன் கூறுகையில், ""ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் கனிமொழி, காங்கிரசிடம் ஆதரவு கேட்டிருந்தார். காங்கிரஸ் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. எங்களை சந்தித்து கனிமொழி நன்றி தெரிவித்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து பேசினார்,'' என்றார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு, ராஜ்யசபா தேர்தலில் எப்படி ஓட்டு போட வேண்டும் என்ற ஆலோசனையை, ஞானதேசிகன் வழங்கினார்.


கேள்விக்கு என்ன பதில்?

"ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததால், அடுத்த லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலருமா?' என்ற கேள்வியை, ஞானதேசிகனிடம் நிருபர்கள் கேட்டனர். ஆனால், இந்த கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.கனிமொழியிடம் இதே கேள்வியை, நிருபர்கள் கேட்ட போது, ""இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லக்கூடாது,'' எனக் கூறிவிட்டு, காரில் ஏறி பறந்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பொதுஜனம் - Delhi,இந்தியா
27-ஜூன்-201310:09:09 IST Report Abuse
பொதுஜனம் இப்படி ஒவ்வொரு கட்சி ஆபிசா போயி பிச்சை எடுத்து மக்களுக்கு நல்லது செய்யனுமா???
Rate this:
Share this comment
Cancel
muthiahthevar chendur pandian - san jose, ca,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-201310:08:10 IST Report Abuse
muthiahthevar chendur pandian முன்பு உள்ளவர்களை ஒப்பிடும்போது கனிமொழி தவறானவர் அல்ல , வீணாக பழி சுமத்தாதீர்
Rate this:
Share this comment
Cancel
Ravi Palani - Singapore,சிங்கப்பூர்
27-ஜூன்-201306:19:38 IST Report Abuse
Ravi Palani அம்மான்னா சும்மா இல்லடா..... முடிவுக்கு பின் தெரியும் டா.... -M பழனி திருத்தணி
Rate this:
Share this comment
Cancel
sivakumar - Thirumayam,இந்தியா
27-ஜூன்-201305:37:44 IST Report Abuse
sivakumar ரொம்ப நல்லது. இனி நம்ப நல்லா கொள்ளை அடிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
27-ஜூன்-201305:22:12 IST Report Abuse
villupuram jeevithan ராஜபக்ஷே கேட்டுக் கொண்டதால் தான் கனிக்கு ஆதரவு அளித்ததாம் காங்கிரஸ்? இதைத்தான் மரியா ஆதரவு நாலா பக்கம் வரும் என்றாரா?
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
27-ஜூன்-201305:20:28 IST Report Abuse
villupuram jeevithan ஈழத்தமிழர்களுக்காக காங்கிரசிக்கு எதிராக ராஜினாமா கடித்ததை தனது தந்தை தலைவரிடம் கொடுத்து பதவி எனக்கு ஒரு துச்சம், பெரிதில்லை என்று நிரூபித்தார் இவர். மறுபடியும் நிற்பதே ஈழத்ததமிழகளுக்காக குரல் கொடுக்க மட்டுமல்ல, அவர்களுக்காக இந்த எம்பி பதவியை தூக்கி வீசப்போகிறாரா, இந்த வீராங்கனை. அந்த தியாகம் செய்யத் தானே இந்த பதவி மீது மோகமே தவிர, வேறொன்றுமில்லை.
Rate this:
Share this comment
Cancel
T.Indran - Pudukottai,இந்தியா
27-ஜூன்-201304:59:43 IST Report Abuse
T.Indran கனிமொழி உங்களிடமிருந்து [திமுக], காங்கிரஸ் எதிர்பார்க்ககப்போகும் நன்றி, வெறும் வார்த்தைகள் அல்ல. அவை தொடர் அணுகுண்டு வெடித்தார் போல இருக்கும். விரைவில் வெள்ளி திரையில் காண்க.
Rate this:
Share this comment
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
27-ஜூன்-201303:43:02 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை மக்களுக்காக உழைக்க முன் வந்ததுக்கு அம்மா கனிமொழிக்குதான் இந்த நாடே நன்றி சொல்லணும்
Rate this:
Share this comment
Cancel
V P Arun Kumar - London,யுனைடெட் கிங்டம்
27-ஜூன்-201303:26:46 IST Report Abuse
V P Arun Kumar வெக்கம் மானம் சூடு சொரணை இல்லாத ஒரு அரசியல் ...
Rate this:
Share this comment
Cancel
Devanand Louis - Chennai,இந்தியா
27-ஜூன்-201301:24:53 IST Report Abuse
Devanand Louis 2- G இல் கூட்டுசதிகாரி என்ற அடைமொழி கோர்ட்டாரால் கொடுக்கப்பட்டுள்ளது என்பது கனி அக்காவுக்கு நன்கு தெரியும் ஆகையால் ரஜய சபா MP என்ற பதவியை கேடயமாக பயன்படுத்த கருணா இவ்வளவு நாடகங்களை நடதயுள்ளார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை